செய்திகள் :

Doctor Vikatan: சர்க்கரைநோய்க்கு அலோபதி மருந்துடன் சித்த மருந்துகளையும் சேர்த்து எடுக்கலாமா?

post image

Doctor Vikatan: என்னுடைய மாமனாருக்கு 70 வயதாகிறது. அவருக்கு சர்க்கரைநோய் இருக்கிறது. ஒரு பக்கம் அலோபதி மருந்துகளை எடுத்துக்கொள்கிறார். இன்னொரு பக்கம் சித்த மருந்துகளையும் எடுக்கிறார். சர்க்கரைநோய்க்கு சித்த மருந்துகள் உதவுமா... அலோபதி மருந்துகள் எடுக்கும்போது கூடவே சித்த மருந்துகளையும் சேர்த்து எடுப்பது சரிதானா?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

vikram

சர்க்கரைநோய்க்கு சித்த மருத்துவத்தில் மிகச் சிறந்த தீர்வுகள் உள்ளன.  இப்போது ஒருங்கிணைந்த மருத்துவம் குறித்து நிறைய பேசுகிறோம்.  அந்த வகையில் சித்த மருந்துகளோடு, அலோபதி மருந்துகளையும் சேர்த்துச் சாப்பிடலாமா என்பதை, உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் சித்த மருத்துவரும் அலோபதி மருத்துவரும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய முதல் விஷயம் உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவு.  ஒருவேளை உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில், ஒருங்கிணைந்த மருத்துவ முறையில் சிகிச்சை மேற்கொள்ளும்போது,  பலவித சிக்கல்களைக் குறைக்க முடியும். அதாவது சர்க்கரைநோயால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமன்றி, அந்த நோயால் ஏற்படக்கூடிய உப பாதிப்புகளான கால் எரிச்சல் போன்றவற்றைக் குறைக்க ஆவாரைக் குடிநீர், மதுமேக சூரணம் போன்ற மிகச் சிறந்த மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. இத்தகைய மருந்துகளால் பலன் பெற்றவர்களின் அனுபவங்களே இதற்கு சாட்சி.

எனவே, நீங்கள் அலோபதி, சித்தா என இரண்டு மருத்துவ முறைகளையும் பின்பற்றப் போகிறீர்கள் என்றால், அதற்கு முன் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம்.

அலோபதி மருந்துகளுடன் சித்த மருந்துகளையும் எடுக்கலாமா?

மருத்துவ ஆலோசனையின்றி நீங்களாக இரண்டையும் பின்பற்றினால், உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவில் மாறுபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். திரிபலா சூரணம், மதுமேக சூரணம் போன்ற சிறந்த மருந்துகள், அரசு மருத்துவமனைகளிலேயே எப்போதும் கிடைக்கும். மருதம்பட்டை குடிநீர், ஆவாரை குடிநீர், வில்வம் மாத்திரை போன்ற பெரு மருந்துகள் பல உள்ளன. எனவே, உங்களுடைய வயது, ரத்தச் சர்க்கரையின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து மருத்துவ ஆலோசனையோடு இவற்றைப் பின்பற்றினால் சர்க்கரைநோயை கட்டுப்பாட்டில் வைத்து ஆரோக்கியமாக வாழ முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: கை, கால்களில் வலி, களைப்பு.. கால்சியம் மாத்திரை சாப்பிடலாமா?

Doctor Vikatan: உடல் அசதி, கை, கால்களில் வலி என எந்தப் பிரச்னைக்கு மருத்துவரிடம் போனாலும், இன்று பலரும் கால்சியம் மற்றும் வைட்டமின் டி பற்றாக்குறை இருப்பதாகச் சொல்லி, அதை குணப்படுத்த மாத்திரைகள் பரிந்... மேலும் பார்க்க

Doctor Vikatan: வயதான அப்பாவுக்கு வருடம் முழுக்க சளி, இருமல்; சித்த மருத்துவம் உதவுமா?

Doctor Vikatan: என்அப்பாவுக்கு 65 வயதாகிறது. அவருக்கு வருடத்தின் பெரும்பாலான நாள்கள் சளியும் இருமலும் தொடர்கிறது. குளிர் மற்றும் மழைக்காலங்களில் அதுஅதிகமாகும்போது மட்டும் மருத்துவரைப் பார்த்து மாத்திர... மேலும் பார்க்க

உலகின் மிகச் சிறிய pacemaker; குழந்தைகளின் இதயத்தை காப்பாற்றப் போகும் உன்னத கருவி!

அறிவியலாளர்கள் உலகின் மிகச் சிறிய பேஸ்மேக்கரை கண்டுபிடித்துள்ளனர். மருத்துவத்துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தப்போகும் இந்த கருவி ஒரு அரிசியை விட சிறியது. உடலில் செலுத்தப்படும் ஊசியின் முனைக்கு... மேலும் பார்க்க

தூத்துக்குடி: 24 மணிநேர அவசரகால ஊர்தி; தமிழ்நாட்டிலேயே முதல் முறை; தொடங்கிய சேவை

ஹிந்துஸ்தான் லைப் கேர் லிமிடெட் (HLL) நிறுவனத்தின் மூலம் இந்தியா முழுவதும் NHAI உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இலவச அவசர கால ஊர்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மே... மேலும் பார்க்க

Doctor Vikatan: அனீமியா... இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிட்டால் சருமம் கறுப்பாக மாறுமா?

Doctor Vikatan: என் வயது 62. எனக்கு ஹீமோகுளோபின் அளவு 8.4 என்பதாகஇருக்கிறது. மருத்துவர் பரிந்துரைத்ததன்பேரில் அயர்ன் சப்ளிமென்ட்ஸ் எடுத்து வருகிறேன். நான் ஓரளவு நிறமாகவே இருப்பேன். ஆனால், அயர்ன் சப்ளி... மேலும் பார்க்க