செய்திகள் :

Doctor Vikatan: டிரெட்மில்லில் நடப்பது, சாலையில் நடப்பது.. எது சரி, எவ்வளவு வேகத்தில் நடக்கலாம்?

post image

Doctor Vikatan: வாக்கிங் செல்வது குறித்து பலருக்கும் நிறைய சந்தேகங்கள் உள்ளன. உதாரணத்துக்கு, வேகமாக நடப்பதுதான் சரியா அல்லது மெதுவாக நடந்தாலும் ஓகேவா? டிரெட்மில்லில் நடப்பது பலனளிக்குமா? குறிப்பாக, வீட்டில் வைத்திருக்கும் டிரெட்மில்லில் நடப்பது பலன் தருமா? டிரெட்மில்லில் நடக்கும்போது எத்தனை ஸ்பீடில் நடக்க வேண்டும்? தோராயமாக ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வாக்கிங் செல்வது பலன் தரும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

ஷீபா தேவராஜ்

போன் பேசிக்கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும் சாதாரணமாக நடப்பதற்கும், வேகமாக நடப்பதற்குமான வித்தியாசத்தை நீங்களே உணர முடியும். அதாவது, வாக்கிங்கை வெறும் நடையாகப் பார்க்காமல், உடற்பயிற்சியாக நினைத்துச் செய்ய வேண்டியது அவசியம்.

அதற்காக வேகவேகமாக நடந்தால்தான் சரி என்று அர்த்தமில்லை. வீட்டில் நடப்பதுபோல மெதுவாக நடக்காமல், ஓரளவு வேகமாகவும், எந்தவிதத் தொந்தரவும் இல்லாமலும் நடக்கும்போதுதான் அதன் பலன் கிடைக்கும். உங்களுடைய இதயத்துடிப்பு அதிகரிக்கும். அதன் மூலம் உங்கள்  தசைகள் சோர்வில்லாமல் நீண்டநேரம் செயல்படும் திறனைப் பெறும். வீட்டிலிருக்கும் டிரெட்மில்லோ, ஜிம்மில் இருக்கும் டிரெட்மில்லோ... எதுவானாலும் ஒன்றுதான். அவற்றின் ஸ்பீடுதான் வித்தியாசப்படும். கமர்ஷியல் ஜிம்களில் உள்ள டிரெட்மில்லில் அதிக ஸ்பீடு வைத்து ஓட முடியும்.  வாக்கிங் மட்டும்தான் செய்யப்போகிறீர்கள் என்றால் எந்த டிரெட்மில்லாக இருந்தாலும் ஒன்றுதான்.  சாதாரணமாக நடப்பதைவிட, சற்று வேகமாக நடந்தால் போதுமானது.

கமர்ஷியல் ஜிம்களில் உள்ள டிரெட்மில்லில் அதிக ஸ்பீடு வைத்து ஓட முடியும்.

டிரெட்மில்லில் நடப்பது சரியா, ஓட வேண்டுமா என்றால், ஓடுவதென்பது எல்லோருக்கும் சரியாக இருக்காது. மூட்டுவலி உள்ளவர்களுக்கு அது அறிவுறுத்தப்படாது. மூட்டுவலி இல்லாத மற்றவர்கள், முதலில் நடந்துவிட்டு, பிறகு ஜாகிங் எனப்படும் மெதுஓட்டம் ஓடிவிட்டு, பிறகு ரன் செய்யலாம். அதையும் அதிக வேகத்துடன் செய்ய வேண்டியதில்லை. ஜாகிங்கைவிட சற்று வேகமாக ஓடினால் போதும். டிரெட்மில்லில் எத்தனை ஸ்பீடில் நடக்க வேண்டும் என்பது அவரவர் உடல்திறனைப் பொறுத்தது. சிலருக்கு 2-ல் வைத்து நடந்தாலே மூச்சு வாங்கும். அவர்கள் அதற்குமேல் வேகத்தைக் கூட்டாமல் அதிலேயே நடக்கலாம். அதுவே சிலருக்கு 6-ல் வைத்து நடந்தாலும் மூச்சு வாங்குவதில்லை என்றால், அவர் அந்த வேகத்தில் நடக்கலாம். அது அவரவர் உடல்திறனைப் பொறுத்தது.  ஃபிட்னெஸ் பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்று அதை முடிவு செய்யலாம்.

ஃபிட்னெஸ் பயிற்சியாளர் இல்லாமல் நீங்களாக நடக்கிறீர்கள் என்றால் அதை வேறு வகையில் செக் செய்யலாம். டிரெட்மில்லில் நடக்கும்போது மூச்சு வாங்காமல், பேசிக்கொண்டே நடக்க முடிகிறதா என்று பாருங்கள். பிறகு வேகத்தைச் சற்று அதிகரித்து நடப்பது, மீண்டும் மெதுவாக நடப்பது என மாற்றி மாற்றி நடந்தால், இதயத்துடிப்பு நன்கு மேம்படும். புதிதாக வாக்கிங் செய்யப் போகிறீர்கள் என்றால் 10 முதல் 15 நிமிடங்கள் வரை நடக்கலாம். அது உங்களுக்கு சிரமமில்லாமல் இருந்தால், முதலில் நேரத்தை அதிகப்படுத்துங்கள். பிறகு நடக்கும் தூரத்தை அதிகப்படுத்துங்கள். நடப்பதற்கு முன் வார்ம் அப் பயிற்சிகளைச் செய்துவிட்டுத் தொடங்குங்கள். வாக்கிங் முடித்த பிறகும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்யுங்கள். 

புதிதாக வாக்கிங் செய்யப் போகிறீர்கள் என்றால் 10 முதல் 15 நிமிடங்கள் வரை நடக்கலாம். அது உங்களுக்கு சிரமமில்லாமல் இருந்தால், முதலில் நேரத்தை அதிகப்படுத்துங்கள்.

போன் பேசியபடி நடக்காதீர்கள். பேசிக்கொண்டே நடந்தாலும், பேச்சை ஒரேயடியாகத் தொடராதீர்கள். மற்றவர்கள் ஓடுகிறார்கள், வேகமாக நடக்கிறார்கள் என்பதற்காக நீங்களும் அப்படிச் செய்ய முயற்சி செய்யாதீர்கள். உங்கள் உடல் ஒத்துழைக்கும் அளவு செய்யுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

சென்னை: அண்ணா சாலையில் தொங்கும் கேபிள் வயர்; அச்சத்துடன் கடக்கும் மக்கள்.. அதிகாரிகள் கவனிப்பார்களா?

சென்னை அண்ணா சாலை, நந்தனம் தேவர் சிலை சந்திப்பில் அமைந்துள்ளது நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம்.சென்னையின் மிகவும் பரபரப்பான சந்திப்பு சாலைகளில் இந்த சந்திப்பு போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கியமான பகுத... மேலும் பார்க்க

Iran Vs Israel: ``அமெரிக்கா நம்பகத்தன்மையை இழந்துவிட்டது" - ஈரானுக்கு ஆதரவாக ஐ.நா.வில் சீனா

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் அமெரிக்காவின் நம்பகத்தன்மையை சேதப்படுத்தியுள்ளதாக சீனா தெரிவித்திருக்கிறது. மத்திய கிழக்கில் உடனடி, நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு வ... மேலும் பார்க்க

US Strikes on Iran: ``மிகப்பெரிய குற்றம், தண்டிக்கப்பட வேண்டும்'' - காமேனியின் முதல் ரியாக்‌ஷன்

ஒரு வாரத்திற்கும் மேலாக, ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நேற்று முன்தின இரவில், அமெரிக்காவும் ஈரானின் அணுசக்தி திட்டப் பகுதிகளைத் தாக்கியது. ஈரானை அமெரிக்கா தாக்கிய பின்னர், மு... மேலும் பார்க்க

Kerala: `ராஜ்பவன் நிகழ்ச்சியில் பாரதமாதா படம்' - அமைச்சர் எதிர்ப்பு.. ABVP - SFI மாணவர்கள் மோதல்

கேரள ராஜ்பவனில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் காவிக்கொடி ஏந்தி காட்சியளிக்கும் பாரதமாதா படத்துக்கு மலர் தூவி வணங்கிய பின்னர் தொடங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக... மேலும் பார்க்க

``இந்த மோதல்கள் குறித்து மற்றவர்களைவிட ட்ரம்ப் அதிகம் கவலைப்படுகிறார்" - ஜேடி வான்ஸ் பேட்டி

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அமெரிக்கா கைகோர்த்து, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானின் மூன்று அணு ஆயுத தளங்களை அமெரிக்கா குறிவைத்து தாக்கியிருப்பதாகவும், இதை அமெரிக்காவை தவிர வேறு ய... மேலும் பார்க்க