செய்திகள் :

Iran Vs Israel: ``அமெரிக்கா நம்பகத்தன்மையை இழந்துவிட்டது" - ஈரானுக்கு ஆதரவாக ஐ.நா.வில் சீனா

post image

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் அமெரிக்காவின் நம்பகத்தன்மையை சேதப்படுத்தியுள்ளதாக சீனா தெரிவித்திருக்கிறது. மத்திய கிழக்கில் உடனடி, நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 15 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு முன்மொழிந்தது. அதன் அடிப்படையில், ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று கூடியது.

அமெரிக்கா - சீனா
அமெரிக்கா - சீனா

அப்போது சீனாவின் ஐ.நா தூதர் ஃபூ காங், ``இராணுவத் தாக்குதலை கட்டுப்படுத்தி, மோதல்களை அதிகரிப்பதைத் தடுக்க வேண்டும். எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதை நிறுத்த வேண்டும். இது இப்படியே தொடர்ந்தால், மேலும் நிலைமை கட்டுப்பாட்டை மீறக்கூடும். குறிப்பாக போரின் பரவலைத் தவிர்க்க இஸ்ரேல் உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும். ஈரான் மீதான தாக்குதல் மூலம் ஒரு நாடாகவும், சர்வதேச பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பாளராகவும் அமெரிக்கா தன்மீது இருந்த நம்பகத்தன்மையும் இழந்துவிட்டது. ஈரானிலிருந்து சீன குடிமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்." என்றார்.

US Strikes on Iran: ``மிகப்பெரிய குற்றம், தண்டிக்கப்பட வேண்டும்'' - காமேனியின் முதல் ரியாக்‌ஷன்

ஒரு வாரத்திற்கும் மேலாக, ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நேற்று முன்தின இரவில், அமெரிக்காவும் ஈரானின் அணுசக்தி திட்டப் பகுதிகளைத் தாக்கியது. ஈரானை அமெரிக்கா தாக்கிய பின்னர், மு... மேலும் பார்க்க

Kerala: `ராஜ்பவன் நிகழ்ச்சியில் பாரதமாதா படம்' - அமைச்சர் எதிர்ப்பு.. ABVP - SFI மாணவர்கள் மோதல்

கேரள ராஜ்பவனில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் காவிக்கொடி ஏந்தி காட்சியளிக்கும் பாரதமாதா படத்துக்கு மலர் தூவி வணங்கிய பின்னர் தொடங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக... மேலும் பார்க்க

``இந்த மோதல்கள் குறித்து மற்றவர்களைவிட ட்ரம்ப் அதிகம் கவலைப்படுகிறார்" - ஜேடி வான்ஸ் பேட்டி

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அமெரிக்கா கைகோர்த்து, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானின் மூன்று அணு ஆயுத தளங்களை அமெரிக்கா குறிவைத்து தாக்கியிருப்பதாகவும், இதை அமெரிக்காவை தவிர வேறு ய... மேலும் பார்க்க

Doctor Vikatan: டிரெட்மில்லில் நடப்பது, சாலையில் நடப்பது.. எது சரி, எவ்வளவு வேகத்தில் நடக்கலாம்?

Doctor Vikatan:வாக்கிங் செல்வது குறித்து பலருக்கும் நிறைய சந்தேகங்கள் உள்ளன. உதாரணத்துக்கு, வேகமாக நடப்பதுதான் சரியா அல்லது மெதுவாக நடந்தாலும் ஓகேவா? டிரெட்மில்லில் நடப்பது பலனளிக்குமா? குறிப்பாக, வீட... மேலும் பார்க்க

Iran: `ஈரானில் ஆட்சி மாற்றம் வருகிறதா?' - ட்ரம்ப் குறிப்பிட்ட `MIGA' அர்த்தம் என்ன?

நேற்று முன்தினம், யாரும் எதிர்பார்க்காத விதமாக, அமெரிக்கா ஈரானின் (Iran) அணுசக்தி திட்டப் பகுதிகளைத் தாக்கியது. இது இஸ்ரேலுக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்பட்டது. இந்தத் தாக்குதலை அடுத்து, 'அமெரிக்க அதி... மேலும் பார்க்க