செய்திகள் :

Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் வாக்கிங் போகலாமா, உடற்பயிற்சி செய்யலாமா?

post image

Doctor Vikatan:  மூட்டுவலி (Arthritis) உள்ளவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா, எந்த வகையான உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். வாக்கிங் செய்யலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

ஷீபா தேவராஜ்

ஆர்த்ரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி உள்ளவர்களுக்கும் உடற்பயிற்சிகள் அவசியம். ஆனால், அதற்கு முன் அவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

மூட்டுவலியின் தன்மை, அதன் தீவிரம் போன்றவற்றை மருத்துவரிடம் சொல்லி, அதற்கேற்ப அவரது ஆலோசனையைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

உடற்பயிற்சிகள் செய்யலாம் என மருத்துவர் சொல்லும் பட்சத்தில்,  லோ இம்பேக்ட் வொர்க்அவுட் (Low Impact Workout) செய்ய ஆரம்பிக்கலாம். 

லோ இம்பேக்ட் வொர்க்அவுட் என்பது, மூட்டுகள் மற்றும் எலும்புகளில் அதிக அழுத்தம் கொடுக்காத உடற்பயிற்சிகளைக் குறிப்பது.

மூட்டு இணைப்புகளில் வலி இருப்பதால், சம்பந்தப்பட்ட நபரால், மற்ற எல்லோரும் செய்கிற வழக்கமான பயிற்சிகளைச் செய்ய முடியாது. அந்த வகையில் இவர்களுக்கு நீச்சல் பயிற்சி மிகவும் சிறந்தது. 

சைக்கிளிங் பயிற்சி செய்யும்போதும், அந்த அசைவுகள் ஓகே என்று மருத்துவர் சொல்லும் பட்சத்தில் அதையும் செய்யலாம். வாக்கிங்கும் செய்யலாம்.

மூட்டுவலி ஓரளவு குணமானதும், பொறுமையாக மற்ற பயிற்சிகளையும் அதாவது ஸ்ட்ரென்த்தனிங் பயிற்சிகளைச் செய்யத் தொடங்கலாம்.

மூட்டுவலி ஓரளவு குணமானதும், பொறுமையாக மற்ற பயிற்சிகளையும் அதாவது ஸ்ட்ரென்த்தனிங் பயிற்சிகளைச் செய்யத் தொடங்கலாம்.

உங்கள் மூட்டுகள் வலிமை பெற்றதாக உணரும்போது மற்ற பயிற்சிகளையும் உடற்பயிற்சி ஆலோசகர் அல்லது பிசியோதெரபிஸ்ட்டின் ஆலோசனையோடு செய்யலாம்.

வலி இருக்கும்போது, மூட்டுகளில் அழுத்தம் விழாதபடி, பிசியோதெரபிஸ்ட், உங்களுக்கான பிரத்யேக பயிற்சிகளை சொல்லித் தருவார்.

ஏற்கெனவே குறிப்பிட்ட 'லோ இம்பேக்ட் வொர்க் அவுட்'டில் உங்களுக்கு எது சௌகர்யமாக உள்ளதோ, அதைச் செய்யலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

உங்களுடன் ஸ்டாலின்: ``6 மாதத்தில் 10,000 முகாம்கள் இயலாத காரியம்'' -புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம்"நாளொன்றிற்கு 3000 மனுக்கள் பெறப்பட்டாலும் பெண் அலுவலர்கள் என்று கூட பாராமல் இரவு 12 மணி வரை மனுக்களை பதிவேற்றம் செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர்" என்ற... மேலும் பார்க்க

Trump: ``ட்ரம்ப் தன் தவறை உணரத் தொடங்கியுள்ளார்'' - கே.பி. ஃபேபியனின் அனுபவப் பகிர்வு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மீது விதித்த பெரும் வர்த்தக வரிகள் தொடர்பான கடுமையான நிலைப்பாட்டை கடந்த சில நாட்களாக மென்மையாக்கி வருவதாக முன்னாள் இந்திய தூதர் கே.பி. ஃபேபியன் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

Laughter therapy: சிரிப்பு சிகிச்சை உண்மையிலேயே பயன் அளிக்குமா? நிபுணர் விளக்கம்!

சிரிக்காத நாள், நம் வாழ்நாளில் வீணான ஒரு நாள் என்று பலரும் கூறிக் கேள்விப்பட்டிருப்போம். சிலர் அறையே அதிரும் அளவுக்கு சிரிப்பார்கள்; சிலரின் புன்முறுவலே அவர்களின் அதிகபட்ச சிரிப்பாக இருக்கும். ஆனால், ... மேலும் பார்க்க

பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான பயிற்சியையும், ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை கொண்டு வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்... மேலும் பார்க்க

``எடப்பாடி தலைமையை ஏற்க முடியாது; அது தற்கொலைக்கு சமம்'' – தொடர்ந்து விமர்சிக்கும் டிடிவி தினகரன்

"ஓபிஎஸ்-சும் நானும் கூட்டணியில் இருந்து வெளியேறக் காரணம் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுதான்" என்று மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டம... மேலும் பார்க்க

``ஆமை புகுந்த வீடும், பா.ஜ.க நுழைந்த மாநிலமும் உருப்படாது'' - ப.சிதம்பரம் காட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டியில் காங்கிரஸ் கட்சி புதிய அலுவலக கட்டட திறப்பு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு:"... மேலும் பார்க்க