செய்திகள் :

Doctor Vikatan: 18 வயது பெண்ணுக்கு நரைமுடி வருவதை தடுக்க முடியுமா? இளநரை பிரச்னைக்கு தீர்வு என்ன?

post image

Doctor Vikatan: என் மகளுக்கு 18 வயதுதான் ஆகிறது. அதற்குள் அவளுக்கு தலையில் நிறைய வெள்ளைமுடிகள் இருக்கின்றன.  இப்படியே தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களில் மொத்த தலையும் நரைத்துவிடுமோ என பயமாக உள்ளது. இதைத் தடுக்க ஏதேனும் வழிகள் இருந்தால் சொல்லுங்கள்.

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

நரைமுடியைப் பொறுத்தவரை ஒருமுறை வந்துவிட்டால் அதை மீண்டும் கறுப்பாக்குவது சாத்தியமில்லை. ஆனால், சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை எடுத்தால், நரை மேலும் அதிகமாகாமல் தடுக்க முடியும்.

உங்கள் மகளுக்கு தினமும் நெல்லிக்காய் ஜூஸ் கொடுப்பதை வழக்கப்படுத்துங்கள். ஜூஸாக கொடுக்க முடியாவிட்டால் நெல்லிக்காய் லேகியம் கொடுக்கலாம். கறிவேப்பிலையை முடிந்த அளவுக்கு உணவில் சேருங்கள். பொடியாகவோ, துவையலாகவோ... வாய்ப்பிருக்கும் வகையில் எல்லாம் தினமும் கறிவேப்பிலை உடலுக்குள் சேரும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.  உங்கள் மகளை வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல் எடுக்கச் சொல்லுங்கள். முளைக்கட்டிய பயறு வகைகளை அடிக்கடி சாப்பிடச் சொல்லுங்கள். வெளி உணவுகளைக் கூடியவரை தவிர்ப்பது நல்லது. எப்போதாவது ஒருநாள் சாப்பிடுவதில் பிரச்னையில்லை. அது அடிக்கடி நிகழ்கிற வழக்கமாக இருக்க வேண்டாம்.  நிறைய காய்கறிகள், கீரைகள், பழங்கள் சாப்பிடச் சொல்லுங்கள். 

இளநரை பிரச்னைக்கு இஞ்சித்தேன் மிகச் சிறந்த மருந்தாகச் செயல்படும். இதை எளிய முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

இளநரை பிரச்னைக்கு இஞ்சித்தேன் மிகச் சிறந்த மருந்தாகச் செயல்படும். இதை எளிய முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம். 

இஞ்சியின் மேல் தோலைச் சீவிவிட்டு, சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். அதில் குண்டூசி கொண்டு சிறு சிறு ஓட்டைகள் போட்டு, மலைத் தேனில் ஊற வைக்கவும். அடுத்த நாள் முதல் தினம் ஒரு துண்டு என்ற ரீதியில் காலையில் சாப்பிட்டு வரலாம். இந்த இஞ்சித் தேனை முறையாகச் சாப்பிட்டு வந்தால்  நரை தோன்றுவது தள்ளிப் போகும்; தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதற்கான வயதும் தள்ளிப் போகும்! நோய்களுக்குத் தடை விதிக்கும். தேவைக்கு ஏற்ப அளவோடு தயாரித்துப் பயன்படுத்தலாம். மலைத்தேன் என்பது விவசாயிகளிடமிருந்தோ, மலைவாழ் மக்களிடமிருந்தோ கிடைக்கும்.  அதை வாங்கிப் பயன்படுத்தவும். சித்த மருத்துவத்தில் கரிசாலை கற்பம் என்ற மாத்திரையும் இளநரை பிரச்னைக்கு உதவும். மருத்துவர் பரிந்துரையோடு அதையும் கொடுக்கலாம். உங்கள் மகளை நிறைய நீர்மோர் குடிக்கச் சொல்லுங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Summer Health Drinks: கோடையில் உடல் குளிர்ச்சியாக இருக்க என்னென்ன அருந்தலாம்?

இதோ அப்படி, இப்படி என்று கோடைக்காலம் வந்தே விட்டது. `ஏப்ரல் மாதத்திலேயே வெயில் இந்தக் காட்டு காட்டுகிறதே... அக்னி நட்சத்திரம் வந்தால் இன்னும் நாம் என்ன பாடுபடப் போகிறோமோ’ என்ற புலம்பல்களும் அதிகரித்து... மேலும் பார்க்க

த.வெ.க பொதுக்குழு அறுசுவை மெனு: வெஜ் மட்டன் பிரியாணி, இறால் 65... தொண்டர்களுக்கு தடபுடல் விருந்து

இன்று த.வெ.க-வின் முதல் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்திற்கு அந்தக் கட்சியின் தலைவர் விஜய் வந்துவிட்டார். தற்போது இந்தப் பொதுக்குழு கூட்டத்தின் மெனு வெளியாகி ... மேலும் பார்க்க

Doctor Vikatan: காலையில் எழுந்ததும் குதிகால் வலி; முதல் அடி வைக்கும்போது கடும் வலி... தீர்வு என்ன?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக குதிகால் பகுதியில் கடுமையான வலி இருக்கிறது. குறிப்பாக, காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்திருந்து, தரையில் பாதங்களை வைத்ததும்வலி உயிரே போகிறது. பிறகு மெள்ளமெ... மேலும் பார்க்க

``எந்த பேரிடராலும் கேரளாவை தோற்கடிக்க முடியாது'' - வயநாடு டவுன்ஷிப் அடிக்கல் விழாவில் பினராயி விஜயன்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மல பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி உருள்பொட்டல் எனப்படும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். நூற்றுக்கணக்கான வ... மேலும் பார்க்க

`அண்ணாமலைக்கு முன்னரே' அமித் ஷாவை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் - சைலண்ட் மூவ்!

இந்த வாரம் தமிழ்நாட்டிற்கும், அமித் ஷாவிற்கும் மிகுந்த தொடர்பு உடையது போலும்.தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு அரசியல் தலைவர்களாக அமித் ஷா வீட்டிற்கு விசிட் அடித்து வருகின்றனர்.கடந்த செவ்வாய்க்கிழமை (25.0... மேலும் பார்க்க

`கறுப்போ, வெள்ளையோ யாராக இருந்தாலும்..' -நிறம் குறித்த அவதூறுக்கு கேரள தலைமைச் செயலாளர் சாரதா பதிலடி

கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் ஐ.ஏ.எஸ்கேரள தலைமைச் செயலாளராக இருக்கும் சாரதா முரளிதரன் ஐ.ஏ.எஸ் அதிகாரியை சிலர் கறுப்பு என விமர்சித்ததாக முகநூலில் கருத்து பதிவிட்டிருந்தார். நிறம் குறித்த பாகுபா... மேலும் பார்க்க