செய்திகள் :

Donald Trump: நிருபர் கேட்ட ஒரே கேள்வி; ``உடனே வெளியே போ.." ஆத்திரத்தில் திட்டிய டொனால்ட் ட்ரம்ப்!

post image

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கத்தார் சென்றிருந்தார். அங்கு கத்தாரின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஜெட் அன்பளிப்பாக வழங்கவிருப்பதாகத் தெரிவித்த கத்தார் பிரதமர், ``நட்பு நாடுகளுக்கு இடையே நடக்கும் இது போன்ற அன்பளிப்பெல்லாம் ஒரு சாதாரண விஷயம்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Cyril Ramaphosa - trump
Cyril Ramaphosa - trump

இது குறித்து விளக்கமளித்த ட்ரம்ப், ``இப்படிப்பட்ட பரிசை முட்டாள் தான் நிராகரிப்பான். இந்த விமானம் அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு வழங்கப்படுகிறது" என்றார்.

ஆனால், `இந்த விமானம் வழங்கப்படுவதன் மூலம் கத்தார் அமெரிக்காவுக்கு லஞ்சம் கொடுத்து செல்வாக்கு பெற முயற்சிக்கிறது' என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பும் - தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவும் நேற்று சந்தித்துக்கொண்டனர். அப்போது ஒளிபரப்பப்பட்ட வீடியோ ஒன்றில், தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களுக்கு எதிரான நிறவெறி நிலவுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அது சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு அதிபர் ட்ரம்ப் பதிலளித்தார்.

trump
trump

அப்போது என்பிசி செய்தி நிறுவனத்தின் செய்தி சேகரிப்பாளர் கத்தார் வழங்கும் விமானம் குறித்த கேள்வியை முன்வைத்தார். இந்தக் கேள்வியைக் கேட்டதும் ஆத்திரமடைந்த ட்ரம்ப், ``நீங்க என்ன பேசுறீங்கனு உங்களுக்கே தெரியுமா... நீங்க இங்க இருந்து உடனே வெளியே போகணும்... இந்த நிகழ்வுக்கும் கத்தார் வழங்கும் ஜெட் விமானத்துக்கும் என்ன சம்பந்தம்...? அவங்க அமெரிக்க விமானப்படைக்கு ஒரு ஜெட் விமானத்தைக் கொடுக்கிறாங்க. அது ஒரு பெரிய முக்கியமான விஷயம்... நாங்க இன்னும் நிறைய விஷயங்களைப் பத்தி பேசிட்டு இருக்கோம்.

தென்னாப்பிரிக்காவுல வெள்ளையர்களுக்கு எதிராக நடக்கும் விவகாரம் குறித்து பேசாம இந்த தலைப்புலிருந்து விலகிப்போக முயற்சிக்கிறீங்க. நீங்க ஒரு மோசமான நிருபர். முதல்ல, ஒரு நிருபரா இருக்க தேவையான போதுமான புத்திசாலித்தனம், அறிவு உங்ககிட்ட இல்ல. நீங்க திரும்பவும் உங்க செய்தி ஸ்டுடியோவுக்கு போயிடுங்க. அந்த நிறுவனத்தை நடத்துறவங்க விசாரிக்கப்படணும்.

trump qatar pm
trump qatar pm

நீங்க அந்த நெட்வொர்க்கை நடத்துற விதத்துல அவங்க ரொம்ப மோசமானவங்கனு தெரியுது. நீங்க ஒரு அவமானம். இனிமே உங்ககிட்ட இருந்து எந்த கேள்வியும் வரக்கூடாது. அமெரிக்க விமானப்படைக்கு வழங்கப்பட்ட ஒரு ஜெட் விமானம் நல்ல விஷயம். அவர்கள் ஜெட் விமானத்துடன் கூடுதலாக 5.1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீடுகளையும் வழங்கினர். " எனக் கடுமையாகக் கத்திப் பேசினார்.

அமெரிக்காவில் 2 இஸ்ரேலிய தூதர்கள் சுட்டுக் கொலை: `தீவிரவாதத்திற்கு இங்கு இடமில்லை' - ட்ரம்ப் காட்டம்

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ளது கேபிடல் யூத அருங்காட்சியகம். அங்கு நடந்த விழாவில் இஸ்ரேலிய தூதரக உதவியாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது விழா நடந்துகொண்டிருந்த இடத்துக்கு வெளியே இருவர் துப்பாக்கிச் சூடு... மேலும் பார்க்க

``உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆகணும்; தவறு செய்தவர்கள்..'' - ED ரெய்டு குறித்து எல்.முருகன்

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை சோதனைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருக்கி... மேலும் பார்க்க

உங்கள் வீட்டுக் குழந்தைகள் பாரம்பர்ய மிட்டாய்களை சாப்பிடுகிறார்களா?

''சர்க்கரை தூக்கலாக காஸ்ட்லி சாக்லேட்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு உடனடி எனர்ஜியையும் உண்மையான ஊட்டச்சத்தையும் தரக்கூடியவை நம் பாரம்பரிய மிட்டாய்கள். அவற்றை குழந்தைகளுக்கு... மேலும் பார்க்க

`காஸாவில் உதவியின்றி 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்' - ஐ.நா வேதனை; இஸ்ரேலை எச்சரிக்கும் நாடுகள்

சரியான நேரத்தில் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்லவில்லையென்றால் அடுத்த 40 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும் என ஐ.நா-வின் மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் தெரிவித்திருக்கிறார். நேற்று... மேலும் பார்க்க