செய்திகள் :

Durai Vaiko: பிரதமர் மோடியுடன் அவரச சந்திப்பு; காரணம் இதுதான் துரை வைகோ விளக்கம்

post image

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார்.

ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணனை மீட்க வேண்டும் என்பது தொடர்பாக பேசியதாக இந்தச் சந்திப்புக் குறித்து துரை வைகோ கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் துரை வைகோ, "
மருத்துவ மாணவர் கிஷோர் சரவணனை ரஷ்ய - உக்ரைன் போர்முனையிலிருந்து மீட்க கோரி எனது தொடர் போராட்டத்தில் இன்று பிரதமரை சந்தித்துவிட்டு, உடனே வெளியுறவுத்துறை செயலாளரை சந்தித்தேன்.

அப்போது, மாணவரிடமிருந்து கிடைத்த துயரமான தகவலால் இந்த விவகாரம் மேலும் மிக மோசமான நிலையை எட்டியிள்ளது என்பதை தெரிவித்தேன். கடந்த 31.07.2025 அன்று மாலை, கிஷோர் தனது குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தன்னை ஆகஸ்ட் 2 அன்று போர்முனைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்து, இப்போது ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள மரியுபால் என்ற பகுதியில் பயிற்சி பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், தனக்கு ஸ்டெராய்டுகள் மற்றும் அறியப்படாத மருந்துகள் செலுத்தப்பட்டதாகவும் அவர் தனது பெற்றோரிடம் கவலைப்பட்டுள்ளார். கடந்த 15.07.2025 அன்று இந்திய தூதரகத்தில் திரு. பவேஷைத் தொடர்பு கொண்டு, தனது இருப்பிடம் மற்றும் அன்றைய நிலை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

துரை வைகோ, மோடி

என்ற அனைத்து விவரங்களையும் வெளியுறவுத்துறை செயலாளரிடம் தெரிவித்து, நமக்கு உள்ள நேரம் மிக விரைவாக சென்று கொண்டிருப்பதை எடுத்துக்கூறி, இந்த இளம் மாணவர் போர்க்களத்தில் நிறுத்தப்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த பிரச்சனையை தூதரகம் மூலம் ரஷ்ய அதிகாரிகளிடம் உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன்.

ஒன்றிய அரசு கிஷோர் சரவணனை பாதுகாப்பாகவும் விரைவாகவும் திருப்பி அழைத்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மேலும் இதே போன்ற வற்புறுத்தல்களை எதிர்கொள்ளும் மற்ற இந்தியர்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். இந்த விவகாரத்தை அதன் முக்கியத்துவம் கருதி, மிக அவசரமாகவும், தீவிரமாகவும் கருதுமாறு கேட்டுக்கொண்டேன்.

ஏற்கனவே இந்தியாவிற்கான ரஷ்ய தூதரிடம் இந்த பிரச்சனையை எடுத்துச் சென்று உரிய நடவடிக்கையினை கோரியுள்ளதாக கூறிய அவர், இந்த பிரச்சனையில் இப்போது ஏற்பட்டுள்ள அசாதாரண மற்றும் அவசர நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் இதற்கான துரித நடவடிக்கையில் ஈடுபடுவதாக உறுதியளித்தார்." என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Rahul Gandhi: "உண்மையான இந்தியர் இப்படிப் பேசமாட்டார்" - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜடோ யாத்திரையின்போது சீனாவிடம் இந்தியா ராணுவம், லடாக்கில் 2000 ச.கி.மீ பரப்பளவு நிலத்தை விட்டுக்கொடுத்ததாகப் பேசியதை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: வெளிநடப்பு, வாட்டர் பாட்டில் வீச்சு, தர்ணா - மாநகராட்சி கூட்டத்தில் ரகளை; என்ன நடந்தது?

தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் சண்.இராமநாதன் தலைமையில் நடந்தது. இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன் மற்றும் கவுன்ன்சிலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டம் தொடங்கியதும், 12வது வார்டு த... மேலும் பார்க்க

பாஜக: "கீழடி, மேலடியை விட்டுவிட்டு மக்களுக்கு ஸ்டாலின் நன்மை செய்ய வேண்டும்" - நயினார் நாகேந்திரன்

விருதுநகர் தனியார் மண்டபத்தில் பாஜகவின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி... மேலும் பார்க்க

'கூவம் போல் ஆகிவிட்டது மதிமுக.. நீங்கள் தோற்றுவிட்டீர்கள் தலைவரே..' - வெளுத்துவாங்கிய மல்லை சத்யா

கூட்டத்தில் திருவேங்கடம் பேசுகையில், "வாக்கி டாக்கியில் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை 'ஓவர், ஓவர்' என்று சொல்வதைப் போல, 'துரை வைகோ வாழ்க' எனச் சொல்ல வேண்டும் என நினைக்கிறார்கள். வாரிசு அரசியல் செய்வதற்க... மேலும் பார்க்க

திமுக: "விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டுப் பேசுவது, அன்புமணிக்கு நல்லது" - அமைச்சர் துரைமுருகன் பதிலடி

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த ஜூலை 25-ம் தேதியிலிருந்து `தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்’ என்கிற தலைப்பில், நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார்.நேற்று (ஆகஸ்ட் 3) இரவு வேலூரில் ... மேலும் பார்க்க