செய்திகள் :

G Square: ரியல் எஸ்டேட் துறையுடன் வில்லா,அடுக்குமாடி கட்டுமான துறையில் நுழையும் ஜி ஸ்கோயர் நிறுவனம்

post image
ரியல் எஸ்டேட் துறையில் தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமாக திகழும் ஜி ஸ்கொயர் நிறுவனம், வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான துறையில் நுழைவதாக அறிவித்துள்ளது.

நகர்புறங்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட வீட்டு மனைகள் விற்பனை காரணமாக, இந்நிறுவனம் வாடிக்கையாளர்கள் இடையே தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் தற்போது தமிழ்நாடு, கர்னாடகா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்டமிட்டுள்ளது. அதற்காக இந்நிறுவனம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த முதலீட்டைக் கொண்டு வீட்டு மனைகள் விற்பனை மற்றும் மேம்பாட்டுடன் இம்மாநிலங்களில் உள்ள மக்களுக்கு பிரீமியம் தரத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய வில்லாக்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்ய உள்ளது. நகர்புறங்களில் உள்ள இந்நிறுவனத்தின் வீட்டு மனைகள்,  புறநகர்ப் பகுதிகளில் பொதுவாக சிறிய அளவிலான வீட்டு மனை திட்டங்களை வழங்கும் இதன் போட்டியாளர்களிடம் இருந்து தனித்துவமிக்கதாக உள்ளது. வாடிக்கையாளர்கள் இடையே இந்நிறுவனத்திற்கு உள்ள நன்மதிப்பு காரணமாக தற்போது கட்டுமானத் துறையில் நுழைந்துள்ளது. இதன் கட்டுமான திட்டங்கள் மதிப்புமிக்கதாகவும், அதேசமயம் உத்தரவாதமான வருமானத்திற்கு உறுதி அளிப்பதாகவும் இருக்கும். இதன் காரணமாக வீட்டு உரிமையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இருவருக்கும் மிகுந்த பலன் கிடைக்கும்.

முக்கியமான இடங்களில் குறைந்த விலையில் வீட்டு மனைகளை விற்பனை செய்வதே ஜி ஸ்கொயர் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது. பெரிய இடங்களை வாங்கி அவற்றை சீரமைத்து விற்பனை செய்வதில கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த அனுபவத்தை இந்நிறுவனம் பெற்றுள்ளது. இந்த தனித்துவமான திறன், வீட்டு மனைகள் துறையில் இந்நிறுவனம் சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இப்போது, ​​அதே நிபுணத்துவத்துடன் வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்புப் பிரிவுகளிலும் கால் பதிக்கும் இந்நிறுவனம், குறைந்த விலையில் சிறந்த தரமான வீடுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது.

இது குறித்து ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் பாலா ராமஜெயம் கூறுகையில், வளர்ச்சிப் பாதையின் அடுத்த கட்டத்திற்குள் நுழையும் இந்தத் தருணம் எங்கள் நிறுவனத்திற்கு மிகவும் பெருமையான தருணம் ஆகும். வீட்டு மனை விற்பனை சந்தையில் எங்களுக்கு கிடைத்துள்ள வெற்றியைத் தொடர்ந்து தற்போது வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கட்டுமானத் துறையில் நுழைந்துள்ளோம். வாடிக்கையாளர்கள் அடுக்குமாடி குடியிருப்பு, வில்லா அல்லது மனைகளை வாங்க விரும்பினால், ஒவ்வொரு தனிநபருக்கும் அவர்களின் கனவு இல்லத்தை அவர்கள் விரும்பிய வடிவத்தில் வழங்குவதே எங்களின் முக்கிய குறிக்கோள் ஆகும். இந்த விரிவாக்கத்தின் மூலம் பெரிய நகரங்கள் மட்டுமல்லாமல் சிறு நகரங்களிலும் உள்ள மக்கள் தங்கள் கனவு இல்லங்களை எந்தவித தடையும் இல்லாமல் கட்டுவதற்கு நாங்கள் உறுதி அளிக்கிறோம். கட்டுமான திட்டத்திற்காக அடுத்த 2 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளோம் என்று தெரிவித்தார்.

பெரிய அல்லது சிறிய நகரங்கள் என எதுவாக இருந்தாலும் தாங்கள் கட்ட உள்ள அனைத்து திட்டங்களும், சிறந்த தரத்துடன் நவீன வசதிகளைக் கொண்டிருக்கும். மேலும் கட்டுமானத் திட்டங்களும் உயர் தரங்களைக் கொண்டிருக்கும், ஒவ்வொரு இடத்திலும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான அனைத்து வசதிகளும் இருக்கும் என்று ஜி ஸ்கொயர் உத்தரவாதம் அளித்துள்ளது. 

சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, ஐதராபாத், மைசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் துறையில் சிறந்து விளங்கி வருகிறது. சட்ட சிக்கல்கள் இல்லாமல் தரமான வீட்டு மனைகளை வழங்குவதன் காரணமாக வாடிக்கையாளர்களிடம் மிகுந்த நம்பிக்கை பெற்ற நிறுவனமாக உள்ளது.

இன்று வரை இந்நிறுவனம் மொத்தம் 127 திட்டங்களை நிறைவு செய்துள்ளது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்நிறுவனம் முக்கியமான இடங்களில் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்களை விற்பனை செய்துள்ளது. வில்லாக்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் நுழைந்திருப்பது என்பது வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் தீர்வுகளை வழங்குவதில் இந்நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சான்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யா நிறுவனம்: Samsung Galaxy S 25 Ultra மாடல்; தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் விற்பனை

சத்யா நிறுவனம் அறிமுகம் செய்தது samsung Galaxy S 25 Ultra மாடல் மொபைல் போன் தமிழ்நாடு முழுவதும் 300 கடைகளில் இன்று( பிப்ரவரி 6) முதல் மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது.Samsung Galaxy S 25 Ultra மாடல் மொபை... மேலும் பார்க்க

Tata: ரத்தன் டாடா போல உடை; 'என் அப்பா வேலை பார்த்த இடத்தில் இன்று நான்...' - சாந்தனு உருக்கம்!

இந்தியாவின் முக்கிய நிறுவனமான `டாடா'-வை நிலையாக வழிநடத்திய தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த ஆண்டு அக் 9ம் தேதி தனது 86வது வயதில் காலமானார்.தொழில்துறையில் பல சாதனைகளைச் செய்திருந்தாலும் டாடா இந்தியர்களின் ... மேலும் பார்க்க

DRA Astra: மாதவரத்தில் 30க்கும் மேற்பட்ட அதிநவீன வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு: DRA அறிமுகம்

சென்னைரியல்எஸ்டேட்துறையில்பெருமைமிகுநிறுவனமாகதிகழும்DRAசென்னைநகரமக்களின்வாழ்விடங்களைநவீனமுறையில்மாற்றிஅமைத்துவருகிறது.அந்தவகையில்தற்போதுஇந்நிறுவனம்மாதவரத்தின்பிரதானஇடத்தில்‘DRA Astra’என்னும்புதியஅடுக்... மேலும் பார்க்க

GRT: ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் வழங்குகிறது உங்கள் பழைய தங்க நகைக்கு புது லைஃப்

1964-ல் அதன் எளிமையான தொடக்கத்திலிருந்து, 'ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்' நகைத் துறையில் ஒரு முன்னணி பெயராக வளர்ந்துள்ளது, தற்போது அதன் 60 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது.தங்கம், வைரம், பிளாட்டினம், வ... மேலும் பார்க்க

Zoho : 'AI-ல் கவனம் செலுத்த போகிறேன்...' - சி.இ.ஓ பதவியில் இருந்து விலகும் ஸ்ரீதர் வேம்பு!

இந்தியாவின் குறிப்பிடத்தக்க மென்பொருள் நிறுவனங்களில் ஒன்று ஜோஹோ. இதன் தலைமை செயல் அதிகாரியாக இதுவரை இருந்து வந்தவர் ஸ்ரீதர் வேம்பு. இவர் இந்தியாவின் 39 வது மிகப்பெரிய பணக்காரர் ஆவார். கடந்த 2021 இல் இ... மேலும் பார்க்க

LIC: அண்ணாசாலையிலுள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் 76-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

எல்.ஐ.சி. தென் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற 76-வது குடியரசு தினக் கொண்டாட்டங்கள் எல்.ஐ.சி தென்மண்டலம், 76-வது குடியரசு தின விழாவை சென்னை அண்ணாசாலையிலுள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் கொண்டாடியது. எல்.ஐ.சி.யி... மேலும் பார்க்க