செய்திகள் :

Global Hyperloop Competition: ஆசியாவில் முதன்முறையாக சென்னையில் ஹைப்பர்லூப் போட்டி; எங்கு? எப்போது?

post image

சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), ஆசியாவிலேயே முதன்முறையாகச் சர்வதேச ஹைப்பர்லூப் போட்டியைப் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்துகிறது.

ஐஐடி சென்னை, ஐஐடிஎம் பிரவர்த்தக், எஸ்ஏஇ இந்தியா ஆகியவை இணைந்து நடத்தும் இப்போட்டிக்கு மத்திய அரசின் ரயில்வே அமைச்சகமும் ஒத்துழைப்பு அளித்திருக்கிறது. ஹைப்பர்லூப் கருத்துகளை உலகம் முழுவதும் கொண்டு செல்வதுடன், இந்த வகை போக்குவரத்துத் துறையில் இளம் தலைமுறையினரை ஊக்குவித்து மாற்றத்தை ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.

ஹைப்பர்லூப்
ஹைப்பர்லூப்

இப்போட்டி சென்னை ஐஐடி-ன் தனித்துவமான ஹைப்பர்லூப் சோதனை உள்கட்டமைப்பில் நடைபெறும். ரயில்வேத் துறை, ஆர்சிலார் மிட்டல், எல் அண்ட் டி, ஹிண்டால்கோ ஆகிய  நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த அதிநவீன தொழிற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

ஹைப்பர்லூப் என்பது வெற்றிடக் குழாயில் பயணிக்கும் அதிவேக 5-வது வகை போக்குவரத்து முறையாகும். ரயில் மணிக்கு 1000 கி.மீ. என்ற அதிவேகத்தில் செல்ல அனுமதிக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் கடந்த 2013 ஆம் ஆண்டில் ‘ஹைப்பர்லூப் ஆல்ஃபா’ என்ற அறிக்கை மூலம் இக்கருத்தை முன்மொழிந்தார்.

இப்போட்டியின் தனித்துவமான அம்சங்களை எடுத்துரைத்த ஐஐடி சென்னை ஹைப்பர்லூப் ஆலோசகரான பேராசிரியர் சத்யன் சக்ரவர்த்தி கூறுகையில், “சரியான வாய்ப்புகளும் தளங்களும் வழங்கப்படும்போது மாணவர்கள் எந்த அளவுக்குச் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த ஹைப்பர்லூப் போட்டி ஒரு சான்றாகும்" என்றார்.

ஹைப்பர்லூப்
ஹைப்பர்லூப்

அமெரிக்கா, ஐரோப்பா, துருக்கி மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முக்கிய ஹைப்பர்லூப் சம்பந்தப்பட்டவர்களை ஒருங்கிணைப்பதன் வாயிலாக நீடித்த மற்றும் அதிவேகப் போக்குவரத்து அமைப்புகளை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்துவதுதான் இப்போட்டியின் இலக்காகும். புதுமையான கருத்துகள், கனவுகள், மாற்றங்களை ஏற்படுத்துவோரைச் சிறப்புவாய்ந்த இந்த நிகழ்வில் பங்கேற்க வருமாறு ‘சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி 2025’ (Global Hyperloop Competition 2025) அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Rajasthan: ``நிலத்திற்குள் செல்ல முடியவில்லை, ஹெலிகாப்டர் வசதி வேண்டும்!'' -விவசாயி வினோத மனு

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்ட கலெக்டர் டினா தாபிக்கு வினோதமான கோரிக்கை மனு ஒன்று வந்துள்ளது. பார்மர் மாவட்டத்தை ஜோராப்புராவை சேர்ந்த மங்கிலால் என்ற விவசாயி தான் அந்த வினோத மனுவுக்கு சொந்தக... மேலும் பார்க்க

Ola, Uber: பிப்., 1-ம் தேதி ஓலா, உபர் ஆட்டோக்கள் திடீர் வேலை நிறுத்தம்; காரணம் இதுதான்!

ஓலா, உபர், ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள்தான் பெருநகரங்களில் மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் கால் டாக்ஸி.இந்த ஓலா, உபர் போன்ற ஆன்லைன் டாக்ஸிகளால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாக நீண்ட நாள்கள் பிரச்ன... மேலும் பார்க்க

ECR: காரில் பெண்களை துரத்தும் இளைஞர்கள்; கண்டிக்கும் கட்சிகள்; என்ன நடந்தது? - காவல் துறை விளக்கம்

சென்னை ஈ.சி.ஆர் சாலையில் காரில் வரும் பெண்களை, மற்றொரு காரில் துரத்தி, சாலையின் குறுக்கே காரை நிறுத்தி அவர்களைச் செல்ல விடாமல் தடுத்து அராஜகத்தில் ஈடுபடும் காணொலி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்ப... மேலும் பார்க்க

திருப்பூர்: பள்ளி வகுப்பறைக்குள் மலம் வீச்சு; டிஎஸ்பி தலைமையில் போலீஸார் விசாரணை - நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர... மேலும் பார்க்க

ஈரோடு `மத்தான் கரோ உகத சூரஜ்' - திமுக-வின் இந்தி துண்டறிக்கை-இதுதான் மொழி உணர்வா?-விமர்சிக்கும் நாதக

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், பிரசாரக் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை அதிமுக போன்ற பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள ந... மேலும் பார்க்க

வேலூர்: சுட்டிக்காட்டிய ஜூ.வி; சீரமைக்கப்பட்ட தொரப்பாடி சாலை!

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலையாக தொரப்பாடி சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலை வேலூர் மாவட்டத்தில் இருந்து முக்கிய சுற்றுலா தளங்களை இணைக்கும் சாலையாக உள்ளது. இந்த சாலையின் நடுவே கடந்த ஆண்டு அக்டோ... மேலும் பார்க்க