செய்திகள் :

Gold: தங்கம் மீது அமெரிக்கா போட்டுள்ள 39% புதிய வரி - இது யாரைப் பாதிக்கும்?

post image

அடுத்தடுத்து முகூர்த்த நாள்கள், விசேஷ நாள்கள் வருகிறது. தங்கம் விலை என்ன ஆகும் என்கிற பயம் இந்தியர்கள் மத்தியில் இருக்கும்.

இன்னொரு பக்கம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வேறு, வரிகளைப் போட்டு தள்ளிக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், மேலும் ஒரு வரியை அமெரிக்கா தங்கத்தின் மீது விதித்துள்ளதாம்.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
இந்த வரி குறித்து நமக்கு தெளிவாக விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

"கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8), அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைக் கட்டுப்பாடு தங்கத்தின் மீது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதாவது, அமெரிக்காவில் 1 கிலோ அல்லது ஒரு அவுன்ஸ் தங்கக் கட்டி அளவிற்கு இறக்குமதி ஆகும் தங்கத்தின் மீது இனி 39 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளது.

இதனால், தங்கம் விலையில் மாற்றம் ஏற்படலாம்.

இது யாரைப் பாதிக்கும்?

இந்த வரி விதிப்பு ரீடெயில் வாடிக்கையாளர்களைப் பாதிக்காது.

ஆனால், நகைக்கடை வியாபாரிகள், தொழிற்சாலை வைத்திருப்பவர்களுக்கு இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இதனால், இது தங்கம் விலை உயர்வுக்கு வழிவகுக்கலாம். சந்தையிலும் மாற்றம் ஏற்படலாம்.

ஆனால், இந்த வரி விதிப்பிற்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுடையது ஆகும் என்பதை குறிப்பிடத்தக்கது".

பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள 'Vikatan Play'-ல் 'Opening Bell Show' தினமும் காலை கேளுங்கள்.

'Vikatan Play'-ல் 'Opening Bell Show'
'Vikatan Play'-ல் 'Opening Bell Show'

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

'குறைந்த தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.9,375-க்கு விற்பனை ஆகி வர... மேலும் பார்க்க

`சற்று குறைந்த தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25-ம், பவுனுக்கு ரூ.200-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.9,445-க்கு விற்பனை ஆகி வருகிறது. தங... மேலும் பார்க்க

Gold Rate: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70-உம், பவுனுக்கு ரூ.560-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.9,470-க்கு விற்பனை ஆகி வருகிறது.தங்கம்இன்று ஒரு பவு... மேலும் பார்க்க

பவுனுக்கு ரூ.75,200-ஐ தொட்ட தங்கம் விலை; புதிய உச்சம் - இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ரூ.1 உயர்ந்துள்ளது. இன்று தங்கம் விலை புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. தங்கம்இன்று ஒரு கிராம் தங்கம் (... மேலும் பார்க்க

Gold: அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படுகிறதா? தங்கம் விலை இனி... முதலீடு செய்யலாமா?

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது பிரச்னை... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த வரி... விதிக்கப்போகும் வரி... என சந்தையே ஒருவித கலவரத்தில் உள்ளது. இந்தச் சூழலில் தங்கம், வெள்ளி, காப்பர், கச்சா ... மேலும் பார்க்க

Gold Rate: `மீண்டும் பவுனுக்கு ரூ.75,000-ஐ தாண்டிய தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை நிலவரம்

ராக்கெட் வேகம்...தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.10-உம், பவுனுக்கு ரூ.80-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. மீண்டும் தங்கம் விலை ரூ.75,000-த்தை தாண்டியுள்ளது.ஒரு கிராம... மேலும் பார்க்க