மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு
Gold Loan: `உரிமையாளருக்கான ஆதாரம், தரச்சான்றிதழ்' - தங்க நகைக்கடனுக்கு RBI அறிவித்த 9 புதிய விதிகள்
தங்க நகை அடமானக் கடன் குறித்து மாதா மாதம் எதாவது அறிவிப்பை வெளியிட்டு மக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது இந்திய ரிசர்வ் வங்கி (RBI).
கடந்த மாதம், அடமானம் வைத்திருக்கும் தங்கத்தை முழுவதும் மீட்டப் பிறகு தான், மீண்டும் அந்த நகைகளை அடமானம் வைக்க முடியும். தங்க நகைகளை மீட்காமல் அப்படியே அடமானக் காலத்தை நீட்டிக்க முடியாது என்று உத்தரவிட்டிருந்தது ரிசர்வ் வங்கி. மக்களிடையே பெரும் அதிர்வுகளை கிளப்பியிருந்தது.
இந்த நிலையில், தங்க நகை அடமானக் கடனில் மீண்டும் புதிய 9 விதிமுறைகளை முன்வைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. அவை...

1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள தங்க நகை அடமானம் வைக்கப்பட்டால், ரூ.750 மட்டுமே கடனாக வழங்கப்படும்.
2. அடமானம் வைக்கும் தங்க நகை தங்களுடையது தான் என்பதற்கான ஆதாரத்தை வாடிக்கையாளர்கள் தங்க நகையை அடமானம் வைக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
3. அடமானம் வைக்கப்படும் தங்க நகை தரம் குறித்தான சான்றிதழ்களை கடன் கொடுக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். இதன் ஒரு நகலை அந்த நிறுவனமும் வைத்திருக்க வேண்டும். இந்த சான்றிதழில் கடன் கொடுப்பவர், கடன் வாங்குபவர் என இருவரது கையொப்பமும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
இந்த சான்றிதழில் நகை சம்மந்தமான அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
4. இந்திய ரிசர்வ் வங்கியால் குறிப்பிடப்பட்டிருக்கும் தங்க நகை வகைகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்பட வேண்டும்.
5. இனி வெள்ளி நகைகளுக்கும் அடமானக் கடன் வழங்கப்படும்.
6. தனிநபர் ஒரு கிலோ தங்கம் வரையில் மட்டுமே அடமானம் வைக்க முடியும்.

7. அடமானமாக பெறப்படும் தங்க நகைகளுக்கு 22 கேரட் தங்கம் அடிப்படையில் தான் கடன் வழங்கப்படும்.
8. கடன் ஒப்பந்தத்தில் கடன் சம்பந்தமான அனைத்து தகவல்களும் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
9. தங்க நகைக் கடனை திருப்பி செலுத்திய 7 வேலை நாள்களில் வங்கி அல்லது நிதி நிறுவனம் அடகு வைக்கப்பட்ட நகைகளை திருப்பி தந்துவிட வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000-த்தை வங்கி அல்லது நிதி நிறுவனம் வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டும்.