செய்திகள் :

GRT: உலகின் அதிக எடை கொண்ட தங்க காதணி; கின்னஸ் சாதனை படைத்த ஜி. ஆர்.டி ஜூவல்லர்ஸ்

post image
ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் படைத்துள்ளது, மீண்டும் ஒரு உலக சாதனை.

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், அறுபது ஆண்டுகளாக நகைத்துறையில் நம்பிக்கையான பெயராக திகழ்கிறது, தற்போது அதன் 60-வது ஆண்டு சிறப்பை பெருமையுடன் கொண்டாடுகிறது. பாரம்பரியத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைப்பதில் புகழ்பெற்ற இந்த நிறுவனம்... நம்பிக்கை, தூய்மை மற்றும் வாழ்க்கையின் நேசத்துக்குரிய தருணங்களை; காலத்தால் அழியாத வடிவமைப்புகளுக்கு இணையான பெயராக விளங்குகிறது. தென் இந்தியாவில் 61 கிளைகளையும் மற்றும் சிங்கப்பூரிலும் தனது கிளைகளை கொண்டுள்ள ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்... தலைமுறை தலைமுறையினருக்கு அர்ப்பணிப்பான தரத்துடன், காலத்தால் நிலைத்திருக்கும் அரிய நகைகளை உருவாக்கும் உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து மிளிர்கிறது.

இந்தச் சிறப்புமிக்க 60-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், அதன் முந்தைய கின்னஸ் உலக சாதனையையே முறியடித்து, ஒரு அசாதாரண சாதனையைப் படைத்துள்ளது. இந்நிறுவனம் 22 காரட் தங்கத்தினால் ஆன 3.527 கிலோ கிராம் எடையுள்ள மெகா காதணிகள் என்ற அற்புதமான படைப்பை உருவாக்கியுள்ளது. இந்த பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு தென்னிந்தியாவின் செழுமையான கலாசார பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தும் அதே வேளையில், ஜிஆர்டி-யின் தலைசிறந்த நிபுணர்களின் இணையற்ற திறனை வெளிப்படுத்துகிறது. இந்த காதணிகளுடன் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், உலகின் அதிக எடை கொண்ட தங்க காதணிகளை உருவாக்கி, மீண்டும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இந்த வரலாற்றுச் சாதனையை கின்னஸ் உலக சாதனைகள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ தீர்ப்பாளர் அங்கீகரித்து, அதற்குரிய நினைவுப் பலகையை ஜிஆர்டி - யின் நிர்வாக இயக்குநர்களான திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் மற்றும் திரு ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கினார். இந்த சாதனை ஜிஆர்டி-யின் இடைவிடாத கண்டுபிடிப்புகள் மற்றும் நகைத் துறையில் புதிய இலக்கு எல்லைகளை அமைப்பதில், அதன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

இந்த சாதனையைப் பற்றி, திரு அனந்தபத்மநாபன் கூறியதாவது: "இந்த அங்கீகாரம் எங்கள் 60 ஆண்டு கால பயணத்தில் ஒரு பணிவான தருணமாக உள்ளது. கடவுளின் அருளாலும், எங்கள் வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத ஆதரவினாலும், இந்த பாராட்டை இரண்டாவது முறையாக பெறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன், புதுமைகளைத் தழுவும் எங்கள் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கின்றது."

ஜி. ஆர்.டி ஜூவல்லர்ஸ்

மேலும் இது குறித்து திரு. ராதாகிருஷ்ணன் கூறியதாவது: "இந்த மைல்கல் எங்கள் நம்பிக்கையுள்ள வாடிக்கையாளர்களுக்கு சொந்தமானது, அவர்களின் நம்பிக்கை மற்றும் ஊக்கம் எங்களை சிறந்து விளங்க தூண்டுகிறது. மேலும் எங்கள் குழுவினருக்கும் மற்றும் கைவினை கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் அர்ப்பணிப்புதான் எங்கள் கண்ணோட்டத்தை உயிர்ப்பிக்கிறது. இந்த சாதனை நமது பாரம்பரியத்தை கொண்டாடும் மற்றும் காலத்தால் அழியாததாக நிலைத்திருக்கும் நகைகளை தொடர்ந்து உருவாக்க எங்களை ஊக்குவிக்கிறது." என்றார்.

பிசினஸ் கருத்தரங்கில் விகடன் 'லாபம்' ஸ்டால்! ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு அரிய வாய்ப்பு! அனைவரும் வருக

இளம் தொழில்முனைவோர்க்கான வழிகாட்டி அமைப்பான 'யெங் ஆன்ட்ரபிரினர் ஸ்கூல்' (YOUNG ENTREPRENEUR SCHOOL - YES), சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை டிரேட் சென்டரில் வருகிற4 , 5 (சனி மற்றும் ஞாயிறு) அன்று ... மேலும் பார்க்க

RamRaj: ஜனவரி 1 முதல் 7 வரை! - ராம்ராஜ் நடத்தும் வேட்டி வார கொண்டாட்டம்

இன்றைய இளைய தலைமுறையினருக்கும் பாரம்பரியத்தில் ஆர்வம் ஏற்படுத்தி, அவர்களது மனதில் அது ஆழப்பதிந்து, தொடர்ந்து அவர்கள் ஈடுபாட்டுடன் வேட்டி என்ற இந்திய கலாச்சார உடையின் மகத்துவம் அவர்கள் வாழ்வில் ஒரு பகு... மேலும் பார்க்க

GRT: ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்

1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம், நீண்ட காலமாகச் சிறப்பிற்கும் மற்றும் கைவினைத் திறமைக்குமான அடையாளமாக விளங்குகிறது.இந்நிறுவனத்தின் தரத்துக்கும் நம்பகத்தன்மைக்கும் அளிக்கும் உறுத... மேலும் பார்க்க

Adani: 'ஒரு வாரமாக சரிந்த அதானி குழும பங்குகள்... இன்று ஏறுமுகம்' - காரணம் என்ன?!

அதானி மீதான அமெரிக்காவின் மோசடி குற்றசாட்டால் அதானி குழுமம் முதல் அதன் பங்குகள் வரை ஆட்டம் கண்டாலும், தற்போது மீண்டும் அது ஏறுமுகத்தில் நகர தொடங்கியிருக்கிறது. மேலே சொன்னதற்கு உதாரணமாக, நேற்றைய அதானி ... மேலும் பார்க்க

1,26,000 ஊழியர்கள்; 12 பில்லியன் டாலர் டர்ன் ஓவர்; பஹ்ரைன் அரசின் உயரிய விருதைப் பெற்ற இந்தியர்

பஹ்ரைன் அரசின் உச்சபட்ச 'செயல்திறன் விருதை' ( Medal of Efficiency) அந்த நாட்டு அரசு இந்திய தொழிலதிபர் டாக்டர் ரவி பிள்ளைக்கு வழங்கியிருக்கிறது. இந்த விருதைப் பெற்ற ஒரே வெளிநாட்டவர் இவர் தான் என்ற பெரு... மேலும் பார்க்க

Mysore Sandal Soap: வரலாறு காணாத வருமானம்; ரூ.108 கோடியை அரசுக்கு ஈவுத்தொகையாக வழங்கி அசத்தல்!

மைசூர் சாண்டல் சோப் என்ற பிரபல சோப் கர்நாடகா அரசின் பொதுத்துறை நிறுவன தயாரிப்பாகும். சந்தன மண் என்றழைக்கப்படும் கர்நாடகாவின் பல பகுதிகளில் இன்றளவும் சந்தன மரங்கள் செழித்தோங்குகின்றன. திரவ தங்கமாகக் கர... மேலும் பார்க்க