செய்திகள் :

Health: இனிமேல் பழங்களின் தோலைத் தூக்கிப் போடாதீங்க..!

post image

பழங்களை வாங்கியவுடன் நாம் முதலில் செய்யும் வேலை பழத்தின் தோல்களை நீக்குவதுதான். தோல்கள் என்றாலே தேவையற்றவை, அவற்றில் செடியில் தெளிக்கப்பட்ட ரசாயனங்களின் மிச்சம் இருக்கும் என்று நம் மனதில் பதிந்துபோனதன் விளைவுதான் இது. இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட பழங்களின் தோல்களுடைய ஆரோக்கிய பலன்களைச் சொல்கிறார், காரைக்குடியைச் சேர்ந்த உணவியல் நிபுணர் ஷில்பி பிஸ்த்ரி.

''பொதுவாகவே பழங்களின் உள்பகுதியைவிடத் தோலில்தான் அதிக அளவு சத்துகள் இருக்கும். அதிலும், சப்போட்டா, மாம்பழம், கொய்யா, திராட்சை, ஆப்பிள் போன்ற பழங்களின் தோல்களில் அதிக அளவு சத்துகள் அடங்கி இருக்கின்றன.

பழங்கள்

ஆப்பிள் தோலில் கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளன. டயட் மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற அதிகமான நார்ச்சத்தும், ஆன்டிஆக்சிடென்ட்களும் இருப்பதால் செல்கள் வலுவடைந்து, இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும், தோல் நீக்கப்படாத ஆப்பிள் பழத்தில் இருந்து எடுக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து, ரத்தத்தில் கலந்துள்ள அமிலத்தன்மையை நீர்த்துப்போகச் செய்யும்.

கொய்யாப் பழத்தைத் தோலுடன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சருமத்துக்குப் பொலிவையும் அழகையும் கூட்டுவதுடன் தோல் வறட்சியையும் போக்கும்.

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் வல்லமை மாம்பழத் தோலுக்கு உண்டு. நீரழிவு நோயாளிகள் மாம்பழத்தைத் தோலுடன் சாப்பிடுவது நல்லது.

கொய்யா

கிவி பழத் தோலில் வைட்டமின்கள், கனிமச் சத்துகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகமாக இருப்பதால், இதய நோய் வராமல் பாதுகாக்கும்.

வாழைப்பழத் தோலில் அதிக அளவு நார்ச் சத்தும், கால்சியமும் உள்ளன. மூட்டு வலி உள்ளவர்கள் தோலுடன் சேர்த்து பழத்தைச் சாப்பிட்டுவர, மூட்டுவலி சரியாகும். கொஞ்சம் கசப்புத்தன்மை இருக்கும் என்பதால், தேன் கலந்து சாப்பிடலாம்.

திராட்சையைத் தோலுடன் சாப்பிடும்போது, ரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலும் சரியாகும்.

மாதுளம் பழத் தோலை சூரிய ஒளியில் காயவைத்துப் பொடியாக்கி, வெண்ணெயுடன் சீரகம், உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து உண்டுவர, நீண்ட நாள் வயிற்றுவலி சரியாகும்.

பன்னீர் திராட்சை!

சப்போட்டாவின் தோலில் உள்ள சில வேதிப்பொருட்கள் உடலில் உள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தக்கூடியவை. உடலில் இருக்கும் தீங்கு செய்யும் பாக்டீரியாவையும் அவை அழிக்கும். சருமப் பிரச்னை, ஆறாத புண் இருப்பவர்கள் தோலுடன் எடுத்துக்கொள்ளலாம்'' எனப் பட்டியலிடுகிறார் ஷில்பி பிஸ்த்ரி.

இனிமேல் தோலைத் தூக்கிப் போட மாட்டீங்கதானே?!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Skin Health: மரு... அழகுப் பிரச்னையா? ஆரோக்கியப் பிரச்னையா?

பெண்களின் சருமம் தொடர்பான பிரச்னைகளில் ஒன்று மரு. முகம், கழுத்து, விரல்கள், உள்ளங்கை, உள்ளங்கால், அரிதாகப் பிறப்புறுப்பிலும் கூட மரு வரலாம். இவற்றுக்கான காரணங்கள், தீர்வுகள் பற்றிச் சொல்கிறார் சரும மர... மேலும் பார்க்க

Health: மீசை, தாடி வளரவில்லையா..? காரணம் இதுவாகவும் இருக்கலாம்!

மீசை இருந்தால்தான் ஆண் மகன் என இன்னும் சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் 'மொழுமொழு’ பாலிவுட் 'கான்’கள் ஸ்டைலுக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், சிலருக்கு மீசை வைக்க வேண்டும் என்ற ஆ... மேலும் பார்க்க

Health: சிறுபீளை, ஆவாரை, மஞ்சள், இஞ்சி... பொங்கல் பண்டிகையில் ஆரோக்கியத்தை மீட்டெடுப்போம்!

பொங்கல் நேரத்தில் நாம் உண்கிற, பயன்படுத்துகிற அத்தனை பொருள்களும் மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. அது தெரியாமலே பலரும் காலங்காலமாக அவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். பொங்கலுக்குப் பயன்படும் பலவித மூ... மேலும் பார்க்க

Health: காய்கறிகள்; பழங்கள்... நிறங்களும் பலன்களும்..!

ஒவ்வொரு நிறத்திலான காய்கறிகளும் பழங்களும் தங்களுக்கு எனத் தனிப்பட்ட ஊட்டச்சத்துக்களையும், பலன்களையும் கொண்டிருக்கின்றன. தினமும் பல வண்ணக் கலவையான காய்கறி- பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் சரிவிகித ஊட்டச்ச... மேலும் பார்க்க

"தமிழக சுகாதாரத்துறையில் நிரந்தரப் பணியிடங்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்?" - பிசியோதெரபி சங்கம் கேள்வி

"அத்தியாவசிய துறைகளில் நிரந்தரப் பணியிடங்கள் எண்ணிக்கையை விட அதிகமான அளவில் தற்காலிகப் பணியிடங்கள் உருவாக்கப்படுவது பொது சுகாதரத்தின் தரத்தையும், பொது மக்களின் நலனையும் பாதிக்க வைக்கும்..." என்கிறார் ... மேலும் பார்க்க

Coffee: மார்னிங் காபி உடல் நலனுக்கு நல்லதா? - புதிய ஆய்வு செல்வதென்ன?

காபியே கதி என இருக்கும் நபரா நீங்கள்? காபி குடிக்காமல் இருக்க முடியாதவர்கள் அந்த காபியை சரியான நேரத்தில் குடிப்பதன் மூலம் உடல்நலனுக்கு சிறந்ததாக காபியை மாற்ற முடியும் என அண்மையில் நடந்த ஆய்வில் தெரியவ... மேலும் பார்க்க