பும்ராவுக்கு எதிராக ரன்கள் குவிப்பது நல்ல அனுபவம்: ஆஸி. இளம் வீரர்
ICC Rankings : 'கடும் பின்னடைவில் கோலி, ரோஹித்' - ICC ரேங்கிங்கில் இந்திய வீரர்களின் நிலை என்ன?
டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் மூத்த நட்சத்திர வீரர்களான விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் தரவரிசைப் பட்டியலில் கடும் சரிவை சந்தித்திருக்கின்றனர்.
பெர்த் டெஸ்ட்டில் சதமடித்த போதும் அடிலெய்டில் நடந்த பிங்க் பால் டெஸ்ட்டில் விராட் கோலி சோபிக்கவே இல்லை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விராட் கோலியின் ஆவரேஜூம் அடி வாங்கியிருக்கிறது. இதனால் கடந்த முறை 14 வது இடத்திலிருந்த விராட் கோலி 6 இடங்கள் பின் தங்கி 20 வது இடத்துக்கு சென்றிருக்கிறார். பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் ஆடவில்லை. இரண்டாவது போட்டியில் பேட்டிங் ஆர்டரை மாற்றி ரோஹித் மிடில் ஆர்டரில் ஆடியிருந்தார். ஆனாலும் சொதப்பினார். இதற்கு முன்பு நடந்த நியூசிலாந்து தொடரிலும் ரோஹித் சர்மா சோபிக்கவே இல்லை. இதனால் கடந்த முறை 26 வது இடத்திலிருந்த ரோஹித் சர்மா 5 இடங்கள் பின் தங்கி 31 வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
இதே பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 வது இடத்தைப் பிடித்திருக்கிறார். ரிஷப் பண்ட் 9 வது இடத்தைப் பிடித்திருக்கிறார். முதல் முறையாக இங்கிலாந்தின் இளம் வீரர் ஹாரி ப்ரூக் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பும்ரா முதலிடத்திலும் அஷ்வின் 5 வது இடத்திலும் ஜடேஜா 6 வது இடத்திலும் இருக்கின்றனர்.
அதேமாதிரி, ஆல்ரவுண்டர்களின் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும் அஷ்வின் மூன்றாவது இடத்திலும் இருக்கிறார். அக்சர் படேல் 9 வது இடத்திலும் இருக்கிறார்.
தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் மூத்த நட்சத்திர வீரர்களான ரோஹித், கோலியின் பின்னடைவு ரசிகர்களை கவலை கொள்ளச் செய்திருக்கிறது.