IND vs NZ: `பந்துவீச்சாளர்கள் பட்டியல்' - வருண் சக்ரவர்த்தி நிகழ்த்திய புதிய சாதனை
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி 6-வது முறையாகத் தகுதி பெற்றுள்ளது. துபாயில் நேற்று நடந்த குரூப் ஏ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று, முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. குரூப் பி பிரிவில் 2வது இடம் பெற்ற ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நாளை மோதுகிறது.
இந்த வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று சுழற்பந்து வீச்சாளர்கள் அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் சேர்ந்து 37 ஓவர்கள் வீசி, 166 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, அக்ஸர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து ஒரு போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 5-வது முறையாகும்.
தனது முதல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலேயே 42 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி வருண் சக்ரவர்த்தி மறக்கமுடியாத சாதனை படைத்திருக்கிறார். இதே மைதானத்தில் நடந்த இந்திய - பங்களாதேஷ் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் முகமது ஷமி 53 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். தற்போது அந்த சாதனையை வருண் சக்ரவர்த்தி முறியடித்திருக்கிறார். ரவீந்திர ஜடேஜா 2013-ம் ஆண்டு ஓவலில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் 36 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தில் சிறந்த பந்து வீச்சாளராகவும், வருண் சக்ரவர்த்தி இரண்டாமிடத்திலும் இருக்கின்றனர்.
2017-ம் ஆண்டு, இங்கிலாந்தில் நடந்த நியூசிலாந்து VS ஆஸ்திரேலியா போட்டியில் 52 ரன்னுக்கு 6 விக்கெட் எடுத்த ஆஸ்திரிலிய கிரிக்கெட் வீரர் ஜோஷ் ஹேசில்வுட் (Josh Hazlewood)
நேற்று துபாயில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி 42 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார்.
இந்த ஆண்டு துபாயில் நடந்த பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் இந்தியக் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 53 ரன்னுக்கு 5 விக்கெட் எடுத்திருக்கிறார்.
2013-ம் ஆண்டு, தி ஓவலில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜா 5/36 வீழ்த்தினார்.
அடுத்த இடத்தில் நேற்று நடந்தப் போட்டிக்காக 5/42 வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி
இந்த ஆண்டு, துபாயில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5/53 வீழ்த்திய முகமது ஷமி மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.
1998-ம் ஆண்டு, டாக்காவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 4/38 வீழ்த்திய சச்சின் டெண்டுல்கர் நான்காம் இடத்தைப் பெற்றிருக்கிறார்.
2002-ம் ஆண்டு, கொழும்பில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடிய ஜாகீர் கான் 4/45 வீழ்த்தி ஐந்தாம் இடத்தில் இருக்கிறார்.