செய்திகள் :

Ind vs Pak: "ரூ.1.5 லட்சம் கோடிக்கு சூதாட்டம்; பாக்., போகும் பணம்" - சஞ்சய் ராவுத் MP சொல்வது என்ன?

post image

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேற்று துபாயில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி பங்கேற்கக் கூடாது என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

அதோடு இப்போட்டிக்கு எதிராக அக்கட்சியினர் மும்பையில் போராட்டமும் நடத்தினர். அவர்கள் டிவியை உடைத்து இப்போராட்டத்தை நடத்தினர். இந்த கிரிக்கெட் போட்டியில் பெரிய அளவில் சூதாட்டம் நடந்திருப்பதாக அக்கட்சியின் எம்.பி சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ''இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்குக் சூதாட்டம் நடந்திருக்கிறது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி
இந்தியா - பாகிஸ்தான் போட்டி

இதில் ரூ.25 ஆயிரம் கோடி பாகிஸ்தானுக்குச் சென்று இருக்கிறது. அந்தப் பணம் நமக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்று அரசுக்கோ அல்லது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கோ தெரியாதா? இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டி மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஆயிரம் கோடி கிடைத்து இருக்கிறது. அந்தப் பணம் நமக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். இக்கிரிக்கெட் போட்டி கேலிக்கூத்தானதாகும் ஆகும்.

மேலும் பாகிஸ்தான் வீரர்களுடன் போட்டிக்குப் பின் கைகுலுக்கிக்கொள்ள இந்தியா வீரர்கள் மறுத்தது தன்னிச்சையான செயல் அல்ல, மாறாக இந்திய ஆதரவு மூத்த அதிகாரி ஒருவர் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முடிவு.

தற்போதைய சூழ்நிலையில் கிரிக்கெட் போட்டிக்கு அனுமதித்து இருப்பது தவறாக மதிப்பிடப்பட்ட ஒன்று. இது பிற்காலத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்'' என்று குறிப்பிட்டார்.

IND vs PAK
IND vs PAK

ஆனால் இக்கிரிக்கெட் போட்டியை ஆதரித்த மகாராஷ்டிரா பா.ஜ.க அமைச்சர் ஆசிஷ் ஷெலார், ''ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதற்கு இந்தியாவை அனுமதித்த மத்திய அரசின் முடிவை நாட்டு மக்கள் முழுமையாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

இது ஒரு சர்வதேச போட்டியே தவிர இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுப்பயணம் அல்ல'' என்று தெரிவித்தார்.

துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடின. இதில் இந்தியா அமோக வெற்றி பெற்றது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

"அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக அல்ல; அதிமுக எம்எல்ஏக்கள்" - இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் பதில்

சென்னையில் நேற்று (செப்.16) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சில பேரைக் கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர்.கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவி... மேலும் பார்க்க

பாஜக - அதிமுக கூட்டணி: ”வரும் சட்டமன்றத் தேர்தலில் 5 முனைப்போட்டி இருக்கலாம்” - நயினார் நாகேந்திரன்

நெல்லையில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை இணைப்பது குறித்து இப... மேலும் பார்க்க

அதிமுக: "தன்மானம்தான் முக்கியம் என்றால் டெல்லி சென்றது ஏன்?" - இபிஎஸ்யை விமர்சித்த டிடிவி தினகரன்

தஞ்சாவூரில் இன்று (செப்டம்பர் 16) அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். அப்போது, "பழனிசாமி ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக அல்ல. அதிமுக எம... மேலும் பார்க்க

பாமக: "கூட்டணி குறித்து தலைவர் அன்புமணிதான் முடிவெடுப்பார்" - பொருளாளர் திலகபாமா சொல்வது என்ன?

அன்புமணி ராமதாஸை பா.ம.க தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வழங்கியுள்ளதாக சிவகாசியில் பா.ம.க பொருளாளர் திலகபாமா தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.இதனைத் தொடர்ந்து செய்த... மேலும் பார்க்க

திருச்சி மதிமுக மாநாடு: "என்னை விட்டு விலகியவர்களை நான் விமர்சித்ததில்லை" - வைகோ பேச்சு

ம.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு செப்டம்பர் 15-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், அண்ணாவின் 117-வது பிறந்த நாளான நேற்று ம.தி.மு.க சார்பில் திருச்சி மாவட்டம், சிறு... மேலும் பார்க்க

அன்புக்கரங்கள்: "குழந்தை தொழிலாளர்களாக மாறக் கூடாது என்பதற்காக இத்திட்டம்" - தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அன்புக் கரங்கள் திட்டம் துவக்க விழா நடைபெற்றது.இதில் அமைச்சர... மேலும் பார்க்க