செய்திகள் :

IPL 2025 : ஐ.பி.எல் தொடக்க தேதியை திடீரென மாற்றிய பிசிசிஐ! - காரணம் என்ன?

post image
18 வது ஐ.பி.எல் சீசன் வருகிற மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
BCCI

மார்ச் 14 ஆம் தேதி 18 வது ஐ.பி.எல் சீசன் தொடங்கும் என பிசிசிஐ தரப்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று கூடிய பிசிசிஐ யின் நிர்வாகக் குழு கூட்டத்தில் 18 வது ஐ.பி.எல் சீசனின் தேதியை மாற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, மார்ச் 21 ஆம் தேதி சீசன் தொடங்கி மே 25 ஆம் தேதி இறுதிப்போட்டியோடு தொடர் முடியும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தத் தேதி மாற்றத்திற்கு உரிய காரணம் இருப்பதாகவும் தெரிகிறது. ஐ.சி.சியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. ஏற்கெனவே திட்டமிட்டபடி மார்ச் 14 ஆம் தேதி சீசனை தொடங்குவதாக இருந்தால் அது சில அணிகளுக்கு அசௌகரியத்தைக் கொடுக்கும். ஏனெனில், சாம்பியன்ஸ் டிராபியில் ஆடும் முக்கியமான வீரர்கள் ஐ.பி.எல்- க்கு வந்து செட்டில் ஆக ஒரு கால அவகாசமே கிடைக்காது.

சில மாதங்களுக்கு முன்புதான் மெகா ஏலம் நடந்திருப்பதால் எல்லா அணிகளும் நிறைய புதிய வீரர்களை அணியில் எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் வைத்து சீசனுக்கு முன்பாக ஒரு ப்ரீ சீசன் கேம்பை வைத்தால்தான் அணியின் கலாசாரத்தோடு அவர்கள் ஒன்றிப்போக முடியும். இதற்குக் கொஞ்ச நாட்களாவது தேவைப்படும். அதனால்தான் ஐ.பி.எல் தொடங்கும் தேதியை மாற்றும் முடிவை பிசிசிஐ எடுத்திருக்கும்.

IPL

கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. கொல்கத்தா அணி சாம்பியன் ஆகியிருந்தது. இதனால் ப்ளே ஆப்ஸ் மற்றும் இறுதிப்போட்டி ஆகியவை ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நகரங்களில் நடக்கும் என்று தெரிகிறது.

ஐ.பி.எல் அட்டவணையை பிசிசிஐ இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனத் தெரிகிறது.

India: திலக்கின் மேட்ச் வின்னிங் ஆட்டம்;ரவியின் சர்ப்ரைஸ் பவுண்டரி திரில்லரை இந்தியா வென்றது எப்படி?

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற... மேலும் பார்க்க

Shardul Thakur : 'ஐ.பி.எல் இல் Unsold; ரஞ்சியில் அசத்தல் ஆட்டம்!' - கலக்கும் ஷர்துல் தாகூர்

ஆல்ரவுண்டரான ஷர்துல் தாகூர் ரஞ்சி போட்டியில் கலக்கி வருகிறார். இக்கட்டான சூழலில் மும்பை அணி தவித்து வந்த சமயத்தில் முதல் இன்னிங்ஸில் அரைசதத்தையும் இரண்டாவது இன்னிங்ஸில் சதத்தையும் அடித்து அணியை காப்பா... மேலும் பார்க்க

Ind Vs Eng : 'இரண்டாவது போட்டியிலாவது ஷமி ஆடுவாரா?' - களநிலவரம் என்ன?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான டி20 தொடர் நடந்து வருகிறது. காயம் காரணமாக 13 மாதங்களாக இந்திய அணியில் ஆடாமல் இருந்த முகமது ஷமி இந்தத் தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணிக்குள் வந்திருந்தார். ஆனா... மேலும் பார்க்க