உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடம்!
IPL Mega Auction: 'டேவிட் வார்னர், பேர்ஸ்ட்டோ..' - ஏலத்தில் Un Sold ஆன பிரபல வீரர்கள் யார் யார்?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் வருகிற மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது.
இந்த தொடரை முன்னிட்டு வீரர்களுக்கான ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் பல முன்னணி வீரர்கள் வரலாற்றில் இல்லாத வகையில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரிஷப் பண்ட் 27 கோடிக்கு லக்னோ அணியாலும், மற்றொரு அதிரடி வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றனர்.
500 வீரர்களுக்கும் மேல் பங்கேற்ற இந்த ஏலத்தின் முதல் நாளில் பல முக்கிய வீரர்களை எந்த அணியும் வாங்காமல் போனது, ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. அந்த முக்கியமான வீரர்கள் யார் யார் என்பதைப் பார்க்கலாம்.
தனது அடிப்படை விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்திருந்த இந்தியாவைச் சேர்ந்த தேவ்தத் படிக்கல்லை யாரும் வாங்கவில்லை. அடுத்து சிறந்த பேட்ஸ்மன் ஆன ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்த இவர் தனது அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை நிர்ணயித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து இங்கிலாந்தைச் சேர்ந்த ஜானி பேர்ஸ்ட்டோ, சுழற் பந்துவீச்சாளரான ஆப்கானிஸ்தான் சேர்ந்த வக்கர் சலாம்கேள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பியூஸ் சாவ்லா, போன்ற வீரர்களையும் யாரும் ஏலம் எடுக்கவில்லை. அதேபோன்று அண்டர் 19 உலக கோப்பையை வென்ற வீரர் யாஷ் தூல், அன்மோல்பிரித் சிங், உட்கார் சிங், லவ்னித் சிசோடியா, உபேந்தர் சிங் யாதவ், ஸ்ரேயாஸ் கோபால் உள்ளிட்ட வீரர்களும் இந்த ஏலத்தில் விலை போகவில்லை.
இந்த நிலையில் இரண்டாவது நாள் ஏலத்தின் இறுதியில் ஏலம் போகாத வீரர்களை ஏதேனும் அணி வாங்க விரும்பினால், அவர்களை மீண்டும் ஏலத்துக்கு கொண்டு வர முடியும். அப்போது தங்களுக்கு தேவையான வீரர்களை கடைசி கட்டத்தில் ஐபிஎல் அணிகள் வாங்கிக் கொள்ளும். இதனால் டேவிட் வார்னர், பேர்ஸ்ட்டோ போன்ற வீரர்கள் இன்று நடைபெறும் ஏலத்தில் எடுக்க வாய்ப்புகள் இருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...