அமெரிக்கா: NIH இயக்குநராக இந்திய வம்சாவளியை டிக் செய்த ட்ரம்ப் - யார் இந்த பட்ட...
Israel: `போர் முடிகிறது' - அறிவித்த ஜோ பைடன்... `ஆனாலும், தொடங்கும்' - செக் வைத்த நெதன்யாகு!
'இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் முடிவடைகிறது' என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தொடங்கியது. பாலஸ்தீனத்திற்கு ஆதாரவாக, லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அதன் பிறகு, இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த தாக்குதல்கள் மிகவும் பயங்கரமாக இருந்தது. ஏவுகணை தாக்குதலை எல்லாம் தாண்டி பேஜர், சோலார் தகடு, வாக்கி டாக்கி வெடிப்பு என்று தாக்குதல்கள் நீண்டன.
மேலும், ஹிஸ்புல்லா அமைப்பைச் சார்ந்த தலைவர், முக்கிய அதிகாரிகள், உறுப்பினர் என பலரை இஸ்ரேல் அழித்தது. இதனால், லெபனான் மக்களும் பாதிக்கப்பட்டனர். தற்போது, இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இதுக்குறித்து ஜோ பைடன், "நாளை உள்ளூர் நேரப்படி 4 மணி அளவி இஸ்ரேல் - லெபனானுக்கு இடையே நடந்துவரும் போர் முடிவு பெறும்" என்று கூறியுள்ளார்.
இந்த போர் முடிவுக்கான உடன்படிக்கை பேச்சு நேற்று இரவு தொடங்கியது. இந்த உடன்படிக்கைக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து வைத்தது. அந்த உடன்படிக்கை படி, அடுத்த 60 நாள்களில் இஸ்ரேல் படை கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு லெபனானில் இருந்து தங்களது படையை திரும்பப் பெறும்.
இந்த உடன்படிக்கைக்கு பிறகு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "ஒருவேளை இந்த உடன்படிக்கை ஹிஸ்புல்லாவால் மீறப்பட்டால் எங்களது தாக்குதல் லெபனானில் தொடங்கும்" என்று கூறியிருக்கிறார். இதற்கு ஜோ பைடனுன், "சர்வதேச சட்டத்தின் படி, தற்காப்பு தாக்குதல் என்பது உரிமை" என்று அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...