செய்திகள் :

ITR Filing: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஒருநாள் நீட்டிப்பு; இன்று (செப்.16) கடைசி நாள்

post image

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக நேற்று செப்டம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு புதிதாக வருமான வரிக் கணக்குக் தாக்கல் படிவங்கள் எளிமையாக்கப் பட்டிருக்கின்றன. அந்த இணையதளத்திலும் ஒரு சில அப்டேட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும், வருமான வரிப் படிவங்களும் தாமதமாகவே வெளியிடப் பட்டன. இதையெல்லாம் கணக்கில் வைத்து வருமான வரிக் கணக்குத் தாக்கலின் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது.

வருமான வரி
வருமான வரி

‘நோட்டீஸ், அபராதம், சிறை...’ - வருமான வரி கணக்குத் தாக்கலில் இந்தத் தவறுகளைச் செய்யவே செய்யாதீர்கள்!

நேற்றுவரை 7.3 கோடி பேர் வருமான வரித் தக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை கூறியிருக்கிறது. இருப்பினும், செப்டம்பர் 15ம் தேதியான நேற்று கடைசி நேரத்தில் ஏராளமானோர் இணையதளத்தில் வரித்தாக்கல் செய்ததால் இணையதளம் சற்று முடங்கும் நிலை ஏற்பட்டு தாமதமானது, இதனால் பலரால் வரித் தாக்கல் செய்ய முடியாமல் போனது.

இந்நிலையில் இன்று செப்டம்பர் 16ம் தேதி வரை ஒருநாள் கூடுதலாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இன்றுதான் கடைசிநாள், நேற்று தாக்கல் செய்ய முடியாதவர்கள் இன்று செய்து அபராதங்களைத் தவிர்க்கவும்.

பிரிவு 234A-ன் கீழ், கடைசி தேதிக்குப் பின், வருமான வரி தாக்கல் செய்தால், அதில் வருமான வரி நிலுவை இருந்தால், தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கு வருமான வரி நிலுவைக்கு 1 சதவிகிதம் வட்டி கட்ட வேண்டும்.

பிரிவு 234F-ன் கீழ், தாமதமாக வருமான வரி தாக்கல் செய்ய ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் இருப்பவர்கள் ரூ.5,000 அபராதம் கட்ட வேண்டும்.

ரூ.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் இருந்தால், ரூ.1,000 அபராதம் கட்ட வேண்டும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

ITR Filing 2025: இன்றே கடைசி நாள் - தாக்கலின் போது செய்யக்கூடாத தவறுகள், அபராதங்கள், சலுகைகள்!

இன்று வருமான வரிக் கணக்குத் தாக்கலுக்கான கடைசி நாள்.'ஐயோ...' கடைசி நாள் வந்துவிட்டதே... இன்னும் செய்யவில்லையே... என்ன செய்வது? என்கிற குழப்பமும், பயமும் வேண்டாம். வருமான வரிக் கணக்குத் தாக்கல் எப்படி ... மேலும் பார்க்க

ITR filing 2025: நாளை தான் கடைசி நாள், தவறினால் அபராதம் - நீங்களே ஃபைல் செய்வது எப்படி?

செப்டம்பர் 15, 2025 - வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள். வழக்கமான கடைசி நாளான ஜூலை 31-ஐ, தொழில்நுட்பக் காரணங்களுக்காக இந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டது.வருமான வ... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஓய்வுக் காலத்தை எப்படி சமாளிப்பது? | Labham | Webinar

வெளிநாட்டு வேலை என்றாலே ‘அட, சூப்பர்…’ என்று சொல்பவர்கள் அதிகம். ஆனால், கண் காணாத ஒரு நாட்டில் மனைவி, மக்களைப் பிரிந்து, கிடைத்த உணவை சாப்பிட்டு, கடும் வெயிலிலும் பனியிலும் வாழ்பவர்களுக்குத்தான் வெளிந... மேலும் பார்க்க

GST ரத்து; மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகை உயருமா? - சூழலை விளக்கும் நிபுணர்!

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி 2.0-ல், தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் மருத்துவக் காப்பீட்டிற்கு ஜி.எஸ்.டி ஜீரோவாக்கப்பட்டிருக்கிறது. அதுவும் 18 சதவிகிதத்தில் இருந்து நேரடியாக ஜீரோவாக்கப்... மேலும் பார்க்க

Gold Loan: தங்கம் விலை மட்டுமல்ல, தங்க நகை அடமானக் கடனும் எகிறுதுங்கோ! என்னதான் காரணம்?

தங்கம் விலை ஒருபக்கம் கிடுகிடுவென உயர்ந்துகொண்டிருக்க, மக்கள் மேலும் மேலும் தங்கத்தை வாங்கிக் குவித்துக்கொண்டு இருக்கிறார்கள். தங்கம் விலை என்றைக்கு அபாரமாக உயர்கிறதோ, அன்றைக்கெல்லாம் தங்க நகைக் கடைகள... மேலும் பார்க்க

சுற்றுலா, ஓய்வுக் காலம்... உங்களின் எல்லா இலக்குகளையும் அடையத் திட்டமிட்டு பணம் சேர்க்கும் ஈஸி வழி!

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பல விதமான இலக்குகள் இருக்கவே செய்கின்றன. ‘மகளை லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் படிக்க வைக்க வேண்டும்’, ‘அமெரிக்கா, ஆப்பிரிக்கா எனப் பல நாடுகளுக்குச் சென்று வரவேண்டும்’... மேலும் பார்க்க