செய்திகள் :

Justice For Ajithkumar: "Deja Vu இல்லை; விக்னேஷ் லாக்கப் மரணத்தில் ஸ்டாலின் சொன்ன பொய்தான்" - இபிஎஸ்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் லாக்கப் மரணம் அடைந்த அஜித் குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது...

"திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேதப் பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

அஜித்குமார் |திருப்புவனம் லாக்கப் மரணம்
அஜித்குமார் |திருப்புவனம் லாக்கப் மரணம்

மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இது முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை!

ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல். இதனைத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வந்து விசாரிக்க வேண்டும்.

இந்த நிலையில், அஜித்குமார் உயிரிழந்ததற்குக் காரணம் 'வலிப்பு' என FIR பதிவு செய்துள்ளது ஸ்டாலின் அரசின் காவல்துறை.

"Deja Vu" எல்லாம் இல்லை - விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது ஸ்டாலின் எந்தப் பச்சைப்பொய்யை சட்டப்பேரவையில் கூச்சமின்றி சொன்னாரோ, அதே பொய்யை அப்படியே அஜித்குமாருக்கு மீண்டும் சொல்கிறது ஸ்டாலினின் காவல்துறை.

நீங்கள் இப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்வீர்கள் எனத் தெரிந்துதான், எனது அறிவுறுத்தலின்படி, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் #JusticeForAjithkumar பதாகைகளை ஏந்தி, நீதிக்கான குரலாக ஒலித்தனர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

நாடு முழுக்க #JusticeForAjithkumar #NationWithAjith எனப் பெரும் அதிர்வலைகளை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பதில் சொல்ல வேண்டிய முதல்வர் ஸ்டாலின் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்?

"ஆய்வுக் கூட்டம் நடத்துகிறோம்; CBCID-க்கு மாற்றுகிறோம்" என்ற உங்கள் நாடகங்களைச் சில ஊடகங்கள் நம்பலாம். மக்களும் சரி, நாங்களும் சரி- துளி கூட நம்பவில்லை!

பொம்மை முதல்வரின் தறிகெட்ட ஆட்சியில் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.

போலீஸின் போலி FIR மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை CBI-க்கு மாற்ற வேண்டும்.

இக்கொலைக்கு காவல்துறைக்குப் பொறுப்பான பொம்மை முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும்!

வீடியோ ஷூட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் திரு.ஸ்டாலின் அவர்களே? உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`மாநில அரசு செய்த கொலை!' - DMK அரசை வெளுத்து வாங்கிய High Court | STALIN | Imperfect Show 1.7.2025

* அஜித்தை கண்மூடித்தனமாகத் தாக்கும் பகீர் வீடியோ! காவல்துறையினரின் அத்துமீறல் அம்பலம்!* திருப்புவனம் லாக்கப் மரணம்: "கால் இடறி கீழே விழுந்ததில், வலிப்பு ஏற்பட்டு மரணம்" - FIR சொல்வது என்ன? * மாநில அரச... மேலும் பார்க்க

"SORRY தான் பதிலா? அலட்சியத்தின் உச்சம்; கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சியே இல்லை" - ஸ்டாலினை சாடும் இபிஎஸ்

திருப்புவனம் பகுதியில் நகை காணாமல் போன புகாரில், தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துத் துன்புறுத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி... மேலும் பார்க்க

அஜித்குமார் மரணம்: "போலீஸ் தாக்குதல்தான் காரணம் என அறிந்து வேதனையடைந்தேன்; CBI விசாரணை" - ஸ்டாலின்

திருப்புவனம் பகுதியில் நகை காணாமல் போன புகாரில், தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துத் துன்புறுத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி... மேலும் பார்க்க

திருப்புவனம்: "ரொம்ப சாரிமா... நடக்கக் கூடாதது நடந்துவிட்டது" - அஜித்குமார் தாய்க்கு ஸ்டாலின் ஆறுதல்

திருபுவனத்தில் நகை காணாமல் போன புகாரில் அஜித்குமார் என்ற இளைஞரை தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் இரண்டு நாள்களாக அடித்துத் துன்புறுத்தியதில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.காவல்துறையின் இந்த எதேச... மேலும் பார்க்க

'பாஜக கூட்டணி இல்லை என்றனர்; இப்போது மிக்சர் சாப்பிடுகின்றனர்' - அதிமுக குறித்து செந்தில் பாலாஜி

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை கொடிசியா பகுதியில் உள்ள தன் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நம் முதலமைச்சர் ஆளுமை மிக்க முதலமைச்சராக இருக்கிறார். கோவை ம... மேலும் பார்க்க