செய்திகள் :

Kho Kho World Cup: புதிய விதிகள்; புதிய கேப்டன்; களம் இறங்கியுள்ள பெண்கள் அணி!

post image

புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று முதல் நடைபெறும் ’கோ கோ உலகக்கோப்பை 2025’ போட்டியில், இந்திய மகளிருக்கான கோ-கோ அணியின் கேப்டனாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரியங்கா இங்லே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய அளவில் 23 முறை வெற்றிப்பெற்றுள்ள இவர், 2023-ம் ஆண்டில் நடந்த 4-வது ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்க மெடல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா இங்லே

வீரர்களின் எண்ணிக்கையை ஒன்பதிலிருந்து ஏழாகக் குறைப்பது மற்றும் மைதானத்தின் அளவைக் குறைப்பது என உலகக்கோப்பை போட்டியில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி கடும்பயிற்சி செய்துள்ள இங்லேவின் தலைமையிலான இந்திய மகளிர் கோ-கோ அணி உலக அரங்கில் முத்திரை பதிக்க தயாராகவுள்ளனர்.

போட்டிக்கான அணியின் தயாரிப்பு குறித்து பேசியுள்ள இங்லே, "கோ-கோவுக்கான முதல் உலகக்கோப்பை இதுதான். நான் இந்திய மகளிர் அணிக்கு கேப்டனாய் நியமிக்கப்பட்டுள்ளேன். அணியை வழிநடத்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமகிழ்ச்சி" என்றவர், "நாங்கள் ஒரு மாதமாக இரவும் பகலும் பயிற்சி செய்து உலகக்கோப்பை போட்டிக்கு தயாராகி வந்திருக்கிறோம். காலையில் உடற்பயிற்சி, மாலையில் மைதானத்தில் கோ கோ பயிற்சி என சவாலுக்கு தயாராக உள்ளோம்" என நம்பிக்கையோடு பேசியிருக்கிறார்.

The trophy for the inaugral edition of the Kho Kho World Cup.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆதரவோடு நடைபெறும் இந்நிகழ்வில் உலகம் முழுவதுமிருந்து 20 ஆண்கள் அணியும் 19 பெண்கள் அணியும் பங்கேற்கின்றன. ஆண்கள் அணியில் இந்தியாவோடு நேபாளம், பெரு, பிரேசில் மற்றும் பூடான் ஆகிய நாடுகள் 'A' பிரிவில் உள்ளன. பெண்கள் அணியில் இந்தியாவோடு ஈரான், மலேசியா மற்றும் கொரியா குடியரசு ஆகியவை 'A' பிரிவில் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறும்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

திருவாரூர்: "நேஷனல் டீம்ல விளையாடணும்" - தேசிய அளவிலான நெட்பால் போட்டியில் அரசுப் பள்ளி மாணவர் சாதனை

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் முகமது இருஃபான். கடந்த டிசம்பர் 28 முதல் 31-ம் தேதி வரை தமிழ்நாடு வலைப்பந்து (Netball) சங்கம் சார்பில் ... மேலும் பார்க்க

WHIL: ''பெண் ஹாக்கி அணிக்கான காலம் வெகுதூரத்தில் இல்லை'' - சொல்கிறார் முன்னாள் கேப்டன்!

பிரிஸ்பேனில் 2032-ம் ஆண்டுநடைபெறவிருக்கும் ஒலிம்பிக்கிலும் அதற்கு அப்பால் நடைபெறவிருக்கும் போட்டிகளிலும் தேசிய அணியில் இளம் பெண்கள் இடம்பிடித்து களம் அமைக்க, பெண்கள் ஹாக்கி இந்தியா லீக் (WHIL) ஊக்குவி... மேலும் பார்க்க

IPL 2025 : ஐ.பி.எல் தொடக்க தேதியை திடீரென மாற்றிய பிசிசிஐ! - காரணம் என்ன?

18 வது ஐ.பி.எல் சீசன் வருகிற மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.BCCIமார்ச் 14 ஆம் தேதி 18 வது ஐ.பி.எல் சீசன் தொடங்கும் என பிசிசிஐ தரப்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தத... மேலும் பார்க்க

Ind v Eng : '13 மாதங்களுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ஷமி' - அறிவிக்கப்பட்ட இந்திய அணி!

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக உள்ளூரில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரில் ஆடவிருக்கிறது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இப்போது அறிவிக்கப... மேலும் பார்க்க

Ajith Kumar Racing: `கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்கவில்லையா?’ - டீம் வெளியிட்ட திடீர் அறிக்கை

Ajith Kumar Racingதுபாயில் நடைபெறும் 24H கார் பந்தயத்தில் தனது அணியுடன் பங்கேற்கவிருந்த நடிகர் அஜித் குமார், கார் ஓட்டுவதிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் குமார் கார் ரேசிங் அணியின் சார்... மேலும் பார்க்க