Lokah: ``நஷ்டம் ஏற்படும் என நினைத்தோம்!'' - துல்கர் சல்மான்
இயக்குநர் டாமினிக் அருண் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹீரோ திரைப்படமான `லோகா' நாடெங்கும் அதிரடி வசூல் புரிந்தது.
சூப்பர் ஹீரோவாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க, சாண்டி, நஸ்லென் ஆகியோரும் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
மல்லுவுட்டில் புதியதாக தொடங்கிய இந்த யுனிவர்ஸை பெரிதாகிடும் நோக்கில் படக்குழுவும் பல திட்டங்களை கையில் வைத்திருந்தனர்.

முதல் பாகம் கண்ட வெற்றி படக்குழுவுக்கு பெரும் ஊக்கத்தையும் தந்து அடுத்தடுத்த பாகங்களில் கவனமாக வேலை பார்க்கும் தெம்பையும் தந்திருப்பதாக பேட்டிகளில் தெரிவிக்கிறார்கள்.
தொடக்க நாட்களில் இத்திரைப்படம் பற்றிய எண்ணம் குறித்து வெளிப்படையாக `தி ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியா' ஊடகத்திடம் பேசியிருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் துல்கர் சல்மான்.
துல்கர் சல்மான் பேசுகையில், ``லோகா' நாங்கள் தயாரிக்கும் 7-வது திரைப்படம். இந்தப் படத்தைப் போல வேறு எந்தப் படமும் அனைத்துப் பக்கங்களிலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
தயாரிப்பாளர்களாக நாங்கள் இந்தப் படத்தில் எங்களுக்கு சில நஷ்டம் ஏற்படும் என நினைத்திருந்தோம். இது நல்ல திரைப்படம்தான்.
ஆனால், படத்தின் பட்ஜெட் மிகப் பெரிது. படத்தை வாங்குவதற்கும் பலர் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

முதல் பாகம் ஹிட் அடித்து, பட ப்ரான்சைஸ் பெரிதாகி அடுத்தடுத்த பாகங்களில் இன்னும் சிறந்தவற்றை செய்யலாம் என நினைத்திருந்தோம்.
ஆனால், படம் வெளியாகி முதல் இரண்டு மூன்று நாட்களில் படம் பெரிய அளவில் பேசப்பட்டது. பலரும் படத்தைப் பார்த்து அது தொடர்பாக பேசி ரீல்ஸ் பதிவிட்டார்கள்.
இவையெல்லாம் எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. படம் வெளியான பிறகு அடுத்த பாகத்திற்கு நாம் என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறோம்." எனப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...