செய்திகள் :

Manmohan Singh: `9 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பிறகு கேட்ட கேள்வி' -மெய்சிலிர்த்த மருத்துவர் பகிர்வு!

post image

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2009-ம் ஆண்டு அவர் பிரதமராக இருந்த காலத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

10 முதல் 11 மணிநேரம் நீண்ட அந்த சிகிச்சைக்குப் பிறகு முதலில் அவர் கேட்டுத் தெரிந்துகொண்டது அவரது உடல் நலனைப் பற்றி அல்ல, அவரது நாட்டைப் பற்றி.

மன்மோகன் சிங்குக்கு சிகிச்சை அளித்த மூத்த இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் ராம்கந்த் பாண்டா என்.டி.டி.வி தளத்திடம் அவரது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ராம்கந்த் பாண்டா

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற சிகிச்சைக் குறித்து ராம்கந்த் பாண்டா பேசியதாவது, "நாங்கள் இதய அறுவை சிகிச்சையை மேற்கொண்ட பிறகு, இரவில் ஆக்சிஜன் மாஸ்க்கை எடுத்தோம். அப்போதுதான் அவரால் பேச முடிந்தது. "நாடு எப்படி இருக்கிறது, காஷ்மீர் எப்படி இருக்கிறது" என்பதுதான் அவர் கேட்ட முதல் கேள்விகள். அப்போது நான் நீங்கள் சிகிச்சை பற்றி எதுவும் கேட்கவில்லையே என அவரிடம் கேட்டேன். அதற்கு டாக்டர் சிங் (Manmohan Singh) நான் என் வேலையை சிறப்பாக செய்துவிடுவேன் என்பது அவருக்குத் தெரியும் என்றார்"

2008-09 காலகட்டத்தில் காஷ்மீரில் கடுமையான கலவரங்கள் நடந்தன. காஷ்மீரின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்திருந்த காலகட்டம். காஷ்மீரில் தேர்தல் முடிந்திருந்தது, பாகிஸ்தானுடன் மோதல் ஏற்படுவதற்கான சூழலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மன்மோகன் சிங், "அதனால் நான் என் அறுவை சிகிச்சையைப் பற்றி கவலைப்படவில்லை, என் நாட்டைப்பற்றி கவலைப்படுகிறேன்" எனக் கூறியுள்ளார்.

மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் குறித்து மருத்துவர் ராம்கந்த் பாண்டா, "அவர் சிறந்த மனிதராக இருந்தார், அடக்கமான நபர், தேசபக்தி மிக்கவர்" என்றார்.

மேலும், "இதுபோன்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் நெஞ்சு வலிப்பதாகக் கூறுவார்கள், ஆனால் மன்மோகன் சிங் அப்படி எதுவும் கூறவில்லை. சிகிச்சைக்குப் பிறகு ஒவ்வொருமுறை அவர் மருத்துவமனைக்கு செக்அப்-காக வரும்போதும் நாங்கள் கதவுக்கு சென்று அவரை வரவேற்போம், அவர் ஒவ்வொருமுறையும் எங்களை அங்கு வர வேண்டியதில்லை என்பார்." என்றார் மருத்துவர்.

"தனிப்பட்ட மனிதராக அவர் மிகுந்த நேர்மையானவர். மிகவும் நிலையானவர், ஒன்றை செய்வேன் என சொல்லிவிட்டால் அதைச் செய்து முடிப்பார். யாரும் அவரது மனதை மாற்ற முடியாது." என்றார் ராம்கந்த்.

``காங். எம்எல்ஏ-க்களே எதிராக பேசுவார்கள் என்ற பயத்தில் இப்படி செய்துள்ளனர்" -திமுகவை சாடும் தளவாய்

கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா வரும் 30, 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதி நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அழைப்பிதழும் வெளியானது. முன்னாள் ... மேலும் பார்க்க

``பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஆணை'' -தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர்- பதிவாளர் மோதல்!

ஒருவரை ஒருவர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஆணை...தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைகழகத்தின் பொறுப்பு துணை வேந்தர் சங்கர். பதிவாளர் தியாகராஜன். இருவருக்குமிடையே நடந்து வந்த ஈகோ யுத்தம் தற்போது வெளிச்சத்திற்கு... மேலும் பார்க்க

``யாருக்கு ஓட்டு போட்டேன் தெரியுமா?” - வர்த்தக சங்க தேர்தலை காமெடியாக்கிய திமுக நகர செயலாளர்!

மன்னார்குடி வர்த்தக சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் கிட்டதட்ட ஒரு எம்.எல்.ஏ-வுக்கான தேர்தலை போல சில தினங்களுக்கு முன்பு பரபரப்பான சூழலில் நடந்து முடிந்திருக்கிறது. வெற்றி பெற்ற பொறுப்பாளர்களுக்கு பலரும்... மேலும் பார்க்க

Vijayakanth: விஜயகாந்த் நினைவு தினம்; கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பிரேமலதா; தலைவர்கள் அஞ்சலி!

நடிகரும், தே.மு.தி.க கட்சியின் நிறுவனருமான விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தே.மு.தி.க தலைவரின் நினைவிடத்துக்கு கோயம்பேடிலிருந்து பேரணி செல்ல தே.மு.தி.க-... மேலும் பார்க்க

சொத்து விவரங்களை சமர்பித்த தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் - ஆர்.டி.ஐ ஆர்வலர் பகிரும் தரவுகள்!

"தமிழ்நாட்டில் கிராம உதவியாளர் முதல் உயர் அதிகாரி வரை சொத்து விவரங்களை வெளிப்படுத்த தயங்கும் நிலையில் 310 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளது பாராட்டும் வகையில் உள்ளது" என்கிறார... மேலும் பார்க்க

Manmohan Singh: ``சூழ்ச்சி அரசியல் அவருக்கு வராது...'' - அப்பா குறித்து மனம் திறந்த மகள்

இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்ற பெரும் பொறுப்புடன் அதிகாரத்துக்கு வந்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். அதிரடி நடவடிக்கைகள், அரசியல் சூழ்ச்சிகள், நம்பிக்கை துரோகங்கள், பல்வேறு விமர்சனங... மேலும் பார்க்க