பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் 8-ஆவத...
Masturbation: ``சுய இன்பத்திற்காக தினம் 30 நிமிட இடைவெளி'' - ஸ்வீடன் நிறுவனம் முடிவு; காரணம் என்ன?
ஸ்வீடனைச் சேர்ந்த எரிகா லஸ்ட் பிலிம்ஸ் என்ற நிறுவனம், தனது ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக ஒரு தனித்துவமான விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிறுவனம், தினமும் 30 நிமிடங்கள் ஊழியர்களுக்கு சுய இன்பத்திற்கான (masturbation) இடைவேளையை வழங்குகிறது. இது மனநலத்தை மேம்படுத்துவதற்கும், பணியிடத்தில் பதற்றத்தைக் குறைப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பின்னணி
எரிகா லஸ்ட் என்பவரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் எரிகா மற்றும் அவரது குழுவினர் மன அழுத்தம், கவனச்சிதறல் மற்றும் பதற்றம் ஆகியவற்றை எதிர்கொண்டபோது இந்த யோசனை உருவாகியுள்ளது.

ஆரம்பத்தில் இது ஒரு சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் இது நிரந்தர நிறுவனக் கொள்கையாக மாறியிருக்கிறது.
ஃப்ரீ ப்ரெஸ் ஜர்னல் படி, எரிகா லஸ்ட் பிலிம்ஸ் நிறுவனம் தனது வலைப்பதிவில் , "மாஸ்டர்பேஷன் மாதத்துடன் இணைந்து இந்த முயற்சியைத் தொடங்கினோம். ஆனால், இதை நிரந்தர நிறுவனக் கொள்கையாக மாற்ற முடிவு செய்தோம். இது இன்று வரை அமலில் உள்ளது.
2021-ஆம் ஆண்டு, தொற்றுநோய் தொடங்கி ஒரு வருடம் கழித்து, நானும் எனது குழுவினரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோம். தொற்றுநோய் கால வாழ்க்கை எங்களை பாதித்து, கவனம் குறைவதோடு, எரிச்சலும், பதற்றமும் அதிகரித்தது.

இதற்காக ’மாஸ்டர்பேஷன் மாதம்’ (Masturbation Month) என்று அறிமுகப்படுத்தி, ஊழியர்களுக்கு தினமும் கூடுதலாக 30 நிமிட இடைவேளையை வழங்கினோம். இதற்காக அலுவலகத்தில் ’மாஸ்டர்பேஷன் ஸ்டேஷன்’ என்ற தனியறையும் ஒதுக்கப்பட்டது.
இந்த நிறுவன கொள்கை சுய இன்பம் மகிழ்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மனதை ஒருநிலைப்படுத்தி, கவனத்தை மேம்படுத்தி படைப்பாற்றலை ஊக்குவிக்க இது ஒரு முயற்சியாக இருக்கும் என்று எண்ணுகிறோம், பணிகளை முடிக்கும் உந்துதலை இது அதிகரிக்கவும் உதவுகிறது" என்று குறிப்பிட்டிருக்கிறது.