செய்திகள் :

MI vs LSG: ``பூரான், பண்ட் விக்கெட் எவ்வளவு முக்கியம் என்று தெரியும்'' - ஆட்ட நாயகன் வில் ஜேக்ஸ்

post image

ஐபிஎல்லில் இன்று (ஏப்ரல் 27) வான்கடேவில் நடைபெற்ற மும்பை vs லக்னோ போட்டியில் அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. அதையடுத்து களமிறங்கிய லக்னோ அணி, ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையுமிழந்து தோல்வியடைந்தது.

வில் ஜேக்ஸ்
வில் ஜேக்ஸ்

இப்போட்டியில் முக்கியமான நேரத்தில் நிக்கோலஸ் பூரான், பண்ட் விக்கெட் வீழ்த்திய வில் ஜேக்ஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய வில் ஜேக்ஸ், "நான் எப்போதும் பந்து வீசக்கூடிய பேட்ஸ்மேனாக இருப்பேன். எனது பந்துவீச்சு எனக்கும் அணிக்கும் முக்கியமானது. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, என்னுடைய பந்துவீச்சில் நான் கடுமையாக உழைத்திருக்கிறேன். பண்ட் மற்றும் பூரான் ஆகியோரின் விக்கெட் எவ்வளவு முக்கியம் என்று எங்களுக்கு தெரியும். பூரான் விக்கெட்டை எடுத்த பிறகு நான் நிம்மதியடைந்தேன்.

ஹர்திக் பாண்டியா - வில் ஜேக்ஸ்
ஹர்திக் பாண்டியா - வில் ஜேக்ஸ்

இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசுவதற்கான வாய்ப்பை நான் மேலும் பெற்றேன் அதை நான் விரும்பினேன். ஒரு அணியாக நல்ல ரிதம் நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். அதை நாங்கள் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும். பும்ரா ஒரு அபாரமான பந்துவீச்சாளர். அடுத்த வரும் போட்டிகளில் அவரை எதிர்கொள்வது மிகவும் கடினம். அவருடைய அணியில் நான் இருப்பதால் எனக்கு மகிழ்ச்சி." என்று கூறினார்.

இப்போட்டியில், பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Jasprit Bumrah: மலிங்காவின் சாதனையை முறியடித்த பும்ரா - பயிற்சியாளர் குறித்து பேசியதென்ன?

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா IPL 2025 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீ... மேலும் பார்க்க

DC vs RCB: 'ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது, ஆனால் விராட் கோலி..!' - ஆட்டநாயகன் க்ருணால் பாண்டியா

ஐ.பி.எல் தொடரில் நேற்று(ஏப்ரல் 27) நடைபெற்ற போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெ... மேலும் பார்க்க

MI vs LSG: மீண்டும் ஏமாற்றிய பண்ட்; ஹர்திக் செய்த 2 மேஜிக் மூவ்; மும்பை வென்றது எப்படி?

வான்கடே மைதானத்தில் மும்பை அணியும், லக்னோ அணியும் இன்று (ஏப்ரல் 27) மோதின. தொடர்ச்சியாக 5-வது வெற்றியைப் பதிவுசெய்யும் நோக்கில் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற லக்... மேலும் பார்க்க

IPL 2025: `அதிரடி S.K.Y ' சூர்யகுமார் யாதவ் படைத்த முக்கிய சாதனை

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், தனது ஐபிஎல் கேரியரில் 4000 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளார். இன்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்த... மேலும் பார்க்க

MI vs LSG: "எல்லோருக்கும் மேட்ச் க்ளிக் ஆகிறது..!" - வெற்றி குறித்து ஹர்திக் மகிழ்ச்சி

ஐபிஎல்லில் இன்று (ஏப்ரல் 27) வான்கடேவில் நடைபெற்ற மும்பை vs லக்னோ போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்... மேலும் பார்க்க

MI vs LSG: "எங்களுக்கான நாள் அல்ல; எதிரணி நன்றாக விளையாடியது" - தோல்வி குறித்து ரிஷப் பண்ட்

ஐபிஎல்லில் இன்று (ஏப்ரல் 27) வான்கடேவில் நடைபெற்ற மும்பை vs லக்னோ போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்... மேலும் பார்க்க