Top News : பிரதமர் மோடியின் தமிழ்நாடு விசிட் டு முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் | ஜ...
MK Stalin: தொண்டர்களின் வாழ்த்துகளுடன் வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!
முதல்வர் ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி காலையில் வழக்கமான நடை பயிற்சி மேற்கொண்ட போது, அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து. சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட் டன. கூடுதல் பரிசோதனைக்காக தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனைக்கும் சென்று திரும்பினார். 3 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், மருத்துவமனையில் இருந்தபடியே அரசு அலுவல்களை முதல்வர் மேற்கொண்டு வந்தார்.
இன்று கவிஞர் வைரமுத்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போதுகூட, இன்று முதல்வர் வீடு திரும்ப வாய்ப்பிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அப்பல்லோ மருத்துவமனையில் (கிரீம்ஸ் சாலை) மருத்துவர் செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு அளித்த சிகிச்சை முடிந்து, முழுமையாக குணமடைந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று மாலை இல்லம் திரும்ப உள்ளார்கள்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நலமாக இருக்கின்றார்கள். மூன்று நாள் இடைவெளிக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.' எனக் குறிப்பிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவர்களின் ஆலோசனைக்கேற்ப ஓய்வுகளையும், சிகிச்சைகளையும் முடித்துவிட்டு வீடு திரும்புகிறார். முதல்வர் ஸ்டாலின் பயணிக்கும் வழிகளில் தொண்டார்கள் திரண்டு அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.