செய்திகள் :

Mohammed Shami: ஷமி செய்தது பாவமா... இஸ்லாமிய அமைப்பின் தலைவருக்கு எதிராக கிளம்பும் வாதங்கள்!

post image

இஸ்லாம் மத காலண்டரில் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில், உலைக்கெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் மத வழக்கத்தின்படி நோன்பு இருக்கின்றனர். அதன்படி, தற்போது மார்ச் 1-ம் தேதி முதல் ரமலான் தொடங்கிவிட்டதால் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான், துபாயில் மார்ச் 2-ம் தேதி நடைபெற்ற இந்தியா vs ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில், இந்திய வீரர் முகமது ஷமி குளிர்பானம் பருகும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது.

மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேயில்வி
மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேயில்வி

ஷமி செய்தது பாவமா?

இந்த விவகாரத்தில், அனைத்திந்திய முஸ்லீம் ஜமாத்தின் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேயில்வி, ``புனிதமான ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது ஒரு கடமை. யாராவது வேண்டுமென்றே நோன்பு இருப்பதைத் தவிர்த்தால் அவர்கள் பாவம் செய்தவராவார். கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இப்போது நோன்பு இருக்கவில்லை. இதன்மூலம் அவர் பாவம் செய்துவிட்டார். ஷரீஅத்தின் படி ஷமி பாவி, குற்றவாளி" என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து, ஷமியின் செயலுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் சிலர் அவருக்கெதிராக கருத்துக்களைப் பதிவிடத் தொடங்கினர். அதேசமயம், `ஷமி நாட்டுக்காக விளையாடுகிறார். பயணத்தில் இருப்பவர்கள் நோன்பு இருப்பதைத் தவிர்க்கலாம். அதில் தவறில்லை என்று இஸ்லாம் கூறுகிறது' என ஷமிக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஷமியை விமர்சித்த மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேயில்வியைப் போல இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ஷமியின் செயலில் தவறில்லை என்று ஆதரவாகப் பேசியிருக்கிறார்.

முகமது ஷமி
முகமது ஷமி

`சுற்றுப்பயணத்தில் இருப்பதால்...’

ஊடகத்திடம் பேசிய அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் (AIMPLB) உறுப்பினர் மௌலானா காலித் ரஷீத் ஃபிராங்கி மஹ்லி, ``இஸ்லாமியர்கள் அனைவரும் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது கட்டாயம் என்றாலும், பயணத்தில் இருப்பர்வகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இப்போது ஷமியைப் பொறுத்தவரை, அவர் சுற்றுப்பயணத்தில் இருப்பதால், நோன்பைத் தவிர்க்க அவருக்கு சாய்ஸ் இருக்கிறது. எனவே, அவரைக் கேள்விகேட்க யாருக்கும் உரிமை இல்லை." என்று கூறினார்.

இவரைப்போலவே, ஷியா மதகுரு மௌலானா யாசூப் அப்பாஸ், ``இதுவொரு மலிவான விளம்பரம். ஷமியின் தனிப்பட்ட விருப்பத்தை பொதுப் பிரச்னையாக மாற்றக் கூடாது." என்று கூறியிருக்கிறார். மேலும், டெல்லியின் மோதி மசூதியின் இமாம் மௌலானா அர்ஷாத், ``ஷமியைக் கேள்வி கேட்பவர்களுக்கு இஸ்லாமோ, குரானோ புரியவில்லை. ஒரு பயணி நோன்பைத் தவிர்க்க இஸ்லாம் அனுமதிக்கிறது." என்று தெரிவித்திருக்கிறார்.

நோன்பு
நோன்பு

அதேபோல, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஹித் பவார், ``நாட்டுக்காக விளையாடும்போது, நோன்பு இருப்பது ஆட்டத்தில் தனது செயல்திறனைப் பாதிக்கும் என்று ஷமி உணர்ந்தால், அவரால் தூங்கவே முடியாது. அவர், இந்திய அணியைப் பலமுறை வெற்றிபெறச் செய்தவர். எனவே, விளையாட்டில் மதம் கூடாது. இன்று நீங்கள் எந்தவொரு இஸ்லாமியரிடம் கேட்டாலும், ஷமியை நினைத்துப் பெருமைப்படுவதாக அவர் கூறுவார்." என்று ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Varun Chakaravarthy : 'பந்து அவ்வளவா ஸ்பின் ஆகல!' - டார்கெட்டை எட்ட வருண் சொல்லும் வழி

சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டி நடந்துகொண்டிருக்கிறது. நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்து 251 ரன்களை எடுத்திருக்கிறது. இந்தியாவுக்கு 252 ரன்கள் டார்கெட். இதில் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி 1... மேலும் பார்க்க

IND vs NZ: ஸ்பின்னர்கள் இருக்க பயமேன்; சொல்லியடித்த ரோஹித்; நியூசிலாந்து தடுமாறியது ஏன்?

சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடி முடித்திருக்கிறது. இந்திய ஸ்பின்னர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து அணி திணறிப்போய் விட்டது.முதல் இன்னிங்ஸ... மேலும் பார்க்க

Rohit Sharma : `அது உங்களுக்குப் புரியாது சார்' - இயற்கை நியதிக்கே சவால்விட்ட ரோஹித் சர்மா

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டி துபாயில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸை ரோஹித் சர்மா தோற்றிருந்தார். தொடர்ச்சியாக 15 வது முறையாக டாஸில் தோ... மேலும் பார்க்க

IND vs NZ: ``இந்தியா 0 கி.மீ, நியூசிலாந்து 7,150 கி.மீ" - வெற்றி குறித்து விமர்சிக்கும் ஜுனைத் கான்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் துபாய் மைதானத்தில் இந்தியாவும், நியூசிலாந்தும் விளையாடி வரும் இதேநேரத்தில், இந்தியா விளையாடிய போட்டிகள் மட்டும் ஒரே மைதானத்தில் நடத்தப்படுவது குறித்து பலரும் விமர... மேலும் பார்க்க

IND vs NZ : ``நியூசிலாந்துக்கு எதிராக ஆடுவது சவால்தான், ஆனாலும்..." - டாஸில் ரோஹித் உறுதி

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதவிருக்கின்றன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியின் டாஸ் முடிந்திருக்கிறது. நியூசிலாந்து அணிதான் டாஸை வென்றது. சாண்ட்னர் முதலி... மேலும் பார்க்க

Rohit Sharma: ``இது ஒற்றைப்படை ஆண்டு..." - உற்சாகத்தில் சூர்யகுமார் யாதவ்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை இந்தியா இன்று எதிர்கொள்கிறது. கடைசியாக நடைபெற்ற இரண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் (2013 வெற்றி, 2017 தோல்வி) பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி இன்று கோ... மேலும் பார்க்க