செய்திகள் :

NEEK: ``இதை என்னால் நம்பவே முடியவில்லை; தனுஷ் சார்...' - நெகிழும் அனிகா சுரேந்திரன்

post image
‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கியிருக்கிறார் தனுஷ்.

இந்தப் படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்திருக்கிறார். தவிர மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், சரண்யா ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். 

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அனிகா சுரேந்திரன், “ என்னை நம்பி இந்த வாய்ப்பைக் கொடுத்த தனுஷ் சாருக்கு நன்றி. இந்த வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம்.

அதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்தப் படத்தின் மூலம் கற்றுக்கொண்ட விஷ்யங்களை மறக்க முடியாது. இந்தப் படத்தில் ஜாலியாகப் பயணிக்க என்னுடன் பணியாற்றியவர்கள்தான் காரணம். படக்குழுவிற்கு நன்றி. முக்கியமாக என் அம்மாவிற்கும் நன்றியை சொல்லிக்கொள்கிறேன்.

அனிகா சுரேந்திரன்
அனிகா சுரேந்திரன்

எனக்கு இவ்வளவு வருடங்கள் சப்போர்ட் ஆக இருந்த ரசிகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Jyothika: `என் கணவரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன்!' - ஜோதிகா

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் `டப்பா கார்டெல்' என்ற இந்தி வெப் சீரிஸ் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தில் ஜோதிகாவுடன், ஷாலினி பாண்டே, நிமிஷா சஜயன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.... மேலும் பார்க்க

Good Bad Ugly: `ஓ.ஜி சம்பவம்!; சம்பவம் இருக்கு!' - `குட் பேட் அக்லி' சிங்கிள் அப்டேட் கொடுத்த ஜி.வி

அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் `குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி பலராலும் கொண்டாடப்பட்டது. இத்திரைப்படத்... மேலும் பார்க்க

Singer Kalpana: 'அன்னைக்கு நடந்தது இதுதான், ஏன் தேவையில்லாம...' - கொதித்த கல்பனா

பிரபல பின்னணிப் பாடகி கல்பனா ராகவேந்தர், ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியாகின. வீட்டில் சுயநினைவின்றி கிடந்த அவரை, அருகில் வீட்டில் குடியிருந்தவர்கள் மீட்டு தனியார் மர... மேலும் பார்க்க

`ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ராம் ரெண்டு பேர்கிட்டேயும் ஒரு ஒற்றுமை இருக்கு’ - நெகிழும் சந்தோஷ் தயாநிதி

சந்தானத்தின் 'இனிமே இப்படித்தான்' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் சந்தோஷ் தயாநிதி. ராமின் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் டீசருக்கும் இசையமைத்திருந்தார். இப்போது ராமின் 'பறந்து போ' படத்திற்கு இசையமைத்த... மேலும் பார்க்க

`இசை என்னவென்று தெரிந்திருந்தால், இசைப்பதையே நிறுத்தியிருப்பேன்!’ - இளையராஜா குறித்து பார்த்திபன்

இளையராஜா தன்னுடைய முதல் சிம்போனியை லண்டனில் அரங்கேற்றிவிட்டு, இன்று சென்னை திரும்பி இருக்கிறார். அதுக்குறித்து உள்ளே வெளியே, அழகி உள்ளிட்ட படங்களில் இளையராஜா உடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர் பார்த்தி... மேலும் பார்க்க

Abinaya: `15 வருடக் காதல்'- அபிநயாவிற்கு நிச்சயதார்த்தம்; குவியும் வாழ்த்துகள்

நடிகை அபிநயாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்திருக்கிறது. சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான 'நாடோடிகள்' படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அபிநயா. 'ஈசன்', 'குற்றம் 23', 'மா... மேலும் பார்க்க