கோயில் திருவிழாவில் பக்தர்கள் கூடாரத்தை தாக்கிய யானைகள்! 3 பேர் பலி; 36 பேர் காய...
New Income Tax Bill: இன்று தாக்கல் செய்யப்படும் புதிய வருமான வரி மசோதா - என்ன மாற்றங்கள் இருக்கும்?
New Income Tax Bill
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை இன்று தாக்கல் செய்கிறது. 1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 60 ஆண்டுகளாக அந்தச் சட்டத்தில் பலமுறை திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அதனால் அந்த சட்டத்தின் அடிப்படை, புரிந்துகொள்வதற்கு சற்று சிக்கலாக இருந்தது. அதனால், நேரடி வரி நிர்வாகம், வரி செலுத்துவோர், வரி நிர்வாகப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் ஆகியோருக்கு சிரமத்தை ஏற்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/mlgbuc0y/67aa1e617e7c7.jpg)
இந்த புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில் இந்த மசோதாவை மக்களவையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யவுள்ளதாக, மக்களவைச் செயலகத்தின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 622 பக்க புதிய வருமான வரி மசோதாவில், புதிதாக எந்த வரிகளும் சோ்க்கப்படவில்லை. அந்த சட்டத்தை எளிமைப்படுத்தி, வார்த்தைகளை சுருக்கியும், இலகுவான வார்த்தைகளை பொருத்தியும் மாற்றம் செய்யப்பட்டிருகிறது எனக் கூறப்படுகிறது. மேலும், மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அது ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs