செய்திகள் :

North Korea: முதன்முறையாக வெளிநாடு பயணம் மேற்கொண்ட கிம் ஜாங் உன் மகள் - இவர்தான் அடுத்த அதிபரா?

post image

சீனாவின் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்றுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அவருடைய மகளான ஜூ ஏ (Kim Ju Ae)-வை முதன்முறையாக வெளிநாட்டு பயணத்துக்கு அழைத்து வந்துள்ளார்.

ஏற்கெனவே ஜூ ஏ, கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசாகவும் அடுத்த ஆட்சியாளராகவும் திகழ்வார் எனக் கூறப்பட்டு வந்ததை வலுப்படுத்தும் வகையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

Ju Ae, Kim jong un

பியோங்யாங் நகரிலிருந்து குண்டுதுளைக்காத கவச ரயிலில் பெய்ஜிங்கில் வந்திறங்கினர் கிம் ஜாங் உன்னும் அவரது மகளும்.

ஜூ ஏவின் அடையாளம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில் இருந்தாலும், தென்கொரிய உளவுத்துறை அதிகாரிகள் அவர் 13 வயதாகும் கிம்மின் மகள் எனக் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் முன்னாள் கூடைப்பந்து நட்சத்திரம் டென்னிஸ் ரோட்மேன் வடகொரியா சென்றபோது, ஜூ ஏவை குழந்தையாகப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

கிம் வம்சத்தில் இதுவரை பெண்கள் ஆட்சி செய்ததில்லை என்றாலும், ஜூ ஏ அடுத்த வாரிசாக இருப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

யார் இந்த Kim Ju Ae?

2022 ஆம் ஆண்டில் சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அறிமுகப்படுத்தும் நிகழ்வில், ஜூ ஏ முதன்முறையாக தனது தந்தையுடன் பொதுவெளியில் தோன்றினார்.

விருந்தில் ஜு ஏ

அதுவரை கிம் ஜாங் உன்னின் குடும்பம் மற்றும் குழந்தைகள் குறித்து மிகக் குறைந்த தகவல்களே பொதுவெளியில் கசிந்திருந்ததால், ஜூ ஏ பொதுவெளியில் தோன்றியது மிகவும் அசாதாரணமாகக் கருதப்பட்டது.

அன்று முதல் பல முக்கிய ராஜதந்திர நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார் ஜூ ஏ. கடந்த மாதம் நடைபெற்ற ரஷ்ய தூதரக விழாவிலும் அவர் காணப்பட்டார். வடகொரியாவில் அவரது உருவத்தில் தபால் தலைகள் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது.

அன்று முதல் பல முக்கிய ராஜதந்திர நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார் ஜூ ஏ. கடந்த மாதம் நடைபெற்ற ரஷ்ய தூதரக விழாவிலும் அவர் காணப்பட்டார். வடகொரியாவில் அவரது உருவத்துடன் தபால் தலைகள் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது.

பிபிசி ஊடகம் கூறுவதன்படி, பல உயர்மட்ட அதிகாரிகளுடன் விருந்துகளில் கலந்து கொண்டுள்ளார் ஜூ ஏ. அங்கு, கிம் ஜாங் உன்னின் ‘மரியாதைக்குரிய மகள்’ என அழைக்கப்பட்டுள்ளார்.

வடகொரியாவில் ‘மரியாதைக்குரிய’ என்ற அடைமொழி அதி உயர்ந்த அதிகாரிகளுக்கே வழங்கப்படும். உதாரணமாக, கிம் ஜாங் உன் ‘மரியாதைக்குரிய தோழர்’ என அழைக்கப்படுகிறார்.

கிம் ஜாங் உன் மற்றும் மகள் ஜு ஏ (2023)

ஏபி செய்திதளத்தின் அறிக்கையின்படி, ஜூ ஏவுக்கு குதிரைசவாரி, பனிச்சறுக்கு மற்றும் நீச்சலில் விருப்பம் உள்ளது. அவர் வீட்டிலிருந்தபடியே சிறந்த கல்வியாளர்களால் கற்பிக்கப்பட்டு வருகிறார்.

இரண்டாம் உலகப்போர் முடிவில் வடகொரியா உருவாக்கப்பட்டதிலிருந்து கிம் வம்சத்தினரே ஆட்சி செய்து வருகின்றனர். கிம் வம்சத்தினர் ‘புனித ரத்தம் உடையவர்கள்’ என்றும், அவர்களே ஆட்சி செய்யத் தகுதியானவர்கள் என்றும் வலியுறுத்தப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.

Kim Ju Ae
Kim Ju Ae

2023ஆம் ஆண்டில், ஜூ ஏவின் பெயரை நாட்டில் வேறு எந்த பெண்ணுக்கும் சூட்டக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அந்தப் பெயரை ஏற்கனவே கொண்டிருப்பவர்கள் தங்களது பெயரை மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜூ ஏ மட்டுமே பொதுவெளியில் காட்சிப்படுத்தப்படுவதால், இவரே அடுத்த ஆட்சியாளர் என அனைவரும் நம்புகின்றனர்.

"மாஸ்கோ வந்தால் நேரில் பேசலாம்; 100% பாதுகாப்பு உறுதி" - புதினின் அழைப்பை நிராகரித்த ஜெலன்ஸ்கி!

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. பல தலைவர்கள் அமைதிக்காக குரல் கொடுத்துள்ளனர். பல கட்ட பேச்சுவார்த்தைகள், மத்தியஸ்த முயற்சிகள் தோல்வ... மேலும் பார்க்க

வாரிசு அரசியல்: "இன்பநிதி இன்னைக்கு CEO; நாளைக்கு CM; ஆனால் நாங்க விடமாட்டோம்" - தமிழிசை தாக்கு

வாரிசு அரசியல் விவகாரத்தில் தி.மு.க-வை பா.ஜ.க தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இவ்வாறிருக்க, பா.ஜ.க-வில் மாநில அளவிலான பிரிவுகளுக்கு அமைப்பாளர்கள் நியமனம் தொடர்பாகத் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்த... மேலும் பார்க்க

VCK: "அவன் சாவு என்னைக் குற்ற உணர்ச்சிக்குள் வீழ்த்தியது" - தம்பி குறித்து திருமாவளவன் உருக்கம்

"நான் உயிரோடு இருக்கிறேன் என்பதாலேயே தம்பி ராதாவின் மரணத்தை யாரும் பெரிதாகக் கருதவில்லை என்கிற வேதனை மேலும் கடுமையாக என்னை வாட்டியது" என்று தன் தம்பியின் நினைவு நாளில் கண்ணீருடன் பதிவு செய்துள்ளார் வி... மேலும் பார்க்க

`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அருகில் உள்ள குர்து என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அதை தடுப்பதற்காக மண்டல போலீஸ் அதிகாரி அஞ்சனா கிருஷ்ணா சம்பவ இடத்திற்கு செ... மேலும் பார்க்க

கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு; குவிந்த அதிமுக தொண்டர்கள் | Photo Album

செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெ... மேலும் பார்க்க

'எடப்பாடி எடுப்பதே எங்கள் முடிவு'- செங்கோட்டையன் பேசியது குறித்து திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 5) மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்திருந்தார்.அதேபோல், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய செங்கோட்... மேலும் பார்க்க