செய்திகள் :

Ooty: சிங்கத்தின் கம்பீரம்.. படையை வழி நடத்திய பெண் அதிகாரி... திரும்பி பார்க்க வைத்த ஆளுமை!

post image

இந்திய நாட்டின் 76 - வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டி அரசு கல்லூரி மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு தேசிய கொடியை ஏற்றி வணக்கம் செலுத்தினார். காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

அணிவகுப்பு மரியாதை

அரசுத்துறையைச் சேர்ந்த பலரும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், பழங்குடி மக்களின் பாரம்பர்ய நடனம், பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. காவல்துறையின் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை தலைமையேற்று நடத்திய நீலகிரி மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளரின் வீர முழக்கமும், கம்பீர கர்ஜனையும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் திரும்பப் பார்க்க வைத்திருக்கிறது.

அணிவகுப்பை தலைமையேற்று நடத்திய அனுபவம் குறித்து பகிர்ந்த ஆயுதப்படை ஆய்வாளர் சரண்யா, "நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நான் 15 ஆண்டுகளாக காவல்துறை சேவையில் இருக்கிறேன். முதல் தலைமுறையாக கல்வியில் உயர்ந்து கல்லூரி சென்றேன். கபடியில் ஏற்பட்ட அதீத ஆர்வம் காரணமாக சிறந்த கபடி வீராங்கனைகளில் ஒருவராக மாற்றியது. அப்பாவின் கனவான காவலர் பணியில் சேர்ந்தேன்.

படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது ஆயுதப்படை ஆய்வாளராக இருக்கிறேன். 76 - வது குடியரசு தின விழா அணிவகுப்பை தலைமையேற்று நடத்தும் அரிய வாய்ப்பு கிடைத்தது.

ஆய்வாளர் சரண்யா

கடந்த சில நாள்களாக அனைவரும் தீவிர ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வந்தோம். அனைவரின் கூட்டு முயற்சி மற்றும் ஒத்துழைப்பால் மிகவும் நேர்த்தியான, கம்பீரமான அணிவகுப்பு மரியாதையாக இருந்தது. வாளேந்தி முன் வரிசையில் நின்று அணிவகுப்பை நடத்திய தருணம் மிகவும் பெருமையாகவும் கம்பீரமாகவும் உணர்ந்தேன். பெண்கள் பலரும் இதுபோன்ற பணிகளுக்கு வர வேண்டும்" என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பல ஆண்டுகளுக்கு பின் பெண் அதிகாரி ஒருவர் அணிவகுப்பை தலைமையேற்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.

வேங்கைவயல்: ”தனி மனித பிரச்னையே காரணம்” - நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் வாதம்

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் ந... மேலும் பார்க்க

விருதுநகர்: ஜவுளிப் பூங்கா இடத்தில் கிராவல் மண் கடத்தலா? - முள்வேலி அமைத்து கண்காணிக்க கோரும் மக்கள்

விருதுநகர் மாவட்டத்தில் மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சாத்தூர் அருகே இ.குமாரலிங்கபுரத்தில் மத்திய‌ அரசின்‌ நிதி ஒதுக்கீட்டின்‌பேரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமையவுள்ளது. சுமார் 1,052 ஏக்கர... மேலும் பார்க்க

`நமது நாட்டின் பாரம்பர்ய அறிவை ஆங்கிலேயர் களவாடிச் சென்றனர்!' - ஆளுநர் ஆர்.என்.ரவி நெல்லையில் பேச்சு

நெல்லையில் தனியார் பொறியியல் கல்லூரியின் வெள்ளிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், ``நெல்லை மண் வீரத்திற்கு பெயர் பெற்றது. ஆங்கிலேயர்களை எதிர்... மேலும் பார்க்க

Union Budget 2025: இந்த மூன்றும் பட்ஜெட்டில் இடம்பெற்றால் பங்குச்சந்தை ஏறுமுகத்திற்கு செல்லும்

பங்குச்சந்தை இறங்குமுகமாக சென்றுகொண்டிருக்கும் இந்த வேளையில், மத்திய பட்ஜெட் தாக்கல் ஆக உள்ளது. இந்தப் பட்ஜெட்டால் நேரடியாக பங்குச்சந்தையில் மாற்றம் இருக்காது.ஆனால், தாக்கல் ஆகப்போகும் பட்ஜெட்டில் இடம... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: "மது விற்பனையில் மட்டும்தான் திராவிடக் கட்சிகள் பாஸ் ஆகின்றன" - சீமான் காட்டம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில், "இந்த... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட `சாம்சங் தொழிற்சங்கம்' - வரவேற்று மகிழும் தொழிலாளர்கள்!

‘தொழிற்சங்கம் அமைக்க சட்டப்பூர்வ அங்கீகாரம், 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 35 நாள்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்னை, ஶ்ரீபெரும்புதூர் ‘சாம்சங்இந்தியா எலெக்ட்... மேலும் பார்க்க