செய்திகள் :

Operation Honeymoon: கணவரைக் கொல்ல கூலிப்படைக்கு உத்தரவிட்டது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்

post image

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சோனம் என்பவரும், அவரது கணவர் ராஜா ரகுவன்சியும் கடந்த மாதம் மேகாலயாவிற்குத் தேனிலவு சென்றனர்.

அவர்கள் கடந்த 23ம் தேதி திடீரென காணாமல் போய்விட்டனர். ஆனால் 10 நாட்கள் கழித்த பிறகு கடந்த 2ம் தேதி ஆழமான பள்ளத்தாக்கில் ராஜா ரகுவன்சியின் உடல் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதோடு அவர்கள் பயன்படுத்திய வாடகை இரு சக்கர வாகனம் மற்றும் ராஜா ரகுவன்சியின் ரத்தக்கரை படிந்த மழை கோட் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் சோனம் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனையடுத்து அவரை போலீஸார் தேடி வந்தனர். இக்கொலையில் திடீர் திருப்பமாக சோனம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் என்ற இடத்தில் போலீஸில் சரணடைந்தார்.

சோனம் மற்றும் கூலிப்படை
சோனம் மற்றும் கூலிப்படை

சோனம் நேற்று முன் தினம் உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் ஹோட்டல் ஒன்றிலிருந்து கொண்டு தனது சகோதரனுக்கு போன் செய்துள்ளார். உடனே போலீஸார் சுதாரித்துக்கொண்டு அந்த ஹோட்டலுக்குச் சென்றனர்.

அவர் அங்கு மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது போலீஸில் சரணடைந்துள்ளார்.

இக்கொலை தொடர்பாக சோனம் காதலன் ராஜ், அவரது கூட்டாளிகள் விக்கி, ஆனந்த், ஆகாஷ் ஆகியோர் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராஜா ரகுவன்சி எப்படிக் கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.

ராஜா ரகுவன்சியின் மனைவி தேனிலவுக்குச் செல்லும் போது தனது காதலனின் கூட்டாளிகளையும் உடன் வரும் படி அழைத்துள்ளார். அவர்கள் மேகாலயாவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்றபோது, அவர்கள் இரண்டு பேரையும் கூலிப்படையினர் பின் தொடர்ந்துள்ளனர்.

தனது கணவனிடம் புகைப்படம் எடுக்கலாம் என்று கூறி, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சோனம் அழைத்துச் சென்றுள்ளார். கொலை செய்யவேண்டிய இடம் வந்ததும் வேண்டுமென்றே தனக்குச் சோர்வாக இருப்பதாகக் கூறி சோனம் மிகவும் மெதுவாக நடந்துள்ளார்.

குறிப்பிட்ட இடம் வந்ததும், பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த கூலிப்படையிடம் அவனைக் கொலை செய்யுங்கள் என்று கூறி உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கூலிப்படையினர் ராஜா ரகுவன்சியைக் கொலை செய்து ஆழமான பள்ளத்தாக்கில் தூக்கிப் போட்டுள்ளனர்.

கணவருடன் சோனம்
கணவருடன் சோனம்

ரூ.4 லட்சத்தை ரூ. 20 லட்சமாக உயர்த்திய சோனம்

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சோனம் ஆரம்பத்தில் கூலிப்படைக்கு ரூ.4 லட்சம் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அந்தத் தொகையைப் பின்னர் சோனம் ரூ.20 லட்சமாக அதிகரித்துள்ளார்.

அதோடு ராஜா ரகுவன்சியின் உடலைப் பள்ளத்தில் தள்ளிவிட உதவி செய்வதாகக் கூலிப்படையிடம் தெரிவித்துள்ளார். கொலையாளிகள் புதுமணத்தம்பதியைக் கடந்த மாதம் 21ம் தேதி கவுகாத்திக்குப் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து 22ம் தேதி ஷில்லாங்கிற்குப் பின் தொடர்ந்துள்ளனர். 23ம் தேதிதான் கொலை செய்துள்ளனர். கொலைக்கான கத்தியை கவுகாத்தியிலிருந்து வாங்கி வந்துள்ளனர்.

ஒரு முறை ராஜாவின் பின் புறமும், ஒரு முறை முன் பகுதியிலும் குத்தியுள்ளனர். கூலிப்படையுடன் சோனம் காதலன் ராஜ் செல்லவில்லை. ஆனால் அவர் திட்டம் தீட்டிக்கொடுத்துள்ளதாக நம்புகிறோம். சோனம் தனது கணவனைக் கொலை செய்வதற்காகவே மேகாலயா வந்துள்ளார் என்று தெரிவித்தனர்.

கைதான சோனம்

இதற்கிடையே சோனம் கர்ப்பமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவருக்கு 3 பெண் மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்தனர். இதில் உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

எனவே ஒரு வாரம் கழித்து மீண்டும் ஒரு முறை சோதனை செய்து பார்க்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அதோடு தனது கணவனைக் கொலை செய்து விட்டு, கணவன் மொபைல் போனில் உள்ள சமூக வலைத்தளக் கணக்கில் தனது கணவன் பதிவிடுவது போன்று ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

``உடல், மன ரீதியான பிரச்னை..'' - கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க துரை தயாநிதி மனு

அரசுக்கு ரூ.259 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ஒலிம்பஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்க துரை தயாநிதி தரப்பில் மனு... மேலும் பார்க்க

பீகார்: பாஜக கொடியுடன் வந்த SUV கார்; காவலர்கள் மீது மோதியதில் பெண் காவலர் பலி; ஒட்டுநர் கைது

பீகார் மாநிலம் பாட்னாவின் ஸ்ரீகிருஷ்ணா பூரி பகுதிக்கு அருகே, அடல் பாத் பகுதியில் வாகனப் பரிசோதனையிலிருந்த காவல்கள் மீது கார் மோதியது.வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மூன்று காவலர்களும் உடனடியாக அருகி... மேலும் பார்க்க

Ooty: ஈட்டி மரங்கள் மீது அத்துமீறல்; பிரபல கான்ட்ரக்டர் ராயன் மீது வழக்கு; வனச் சட்டம் சொல்வது என்ன?

நீலகிரி மாவட்டத்தில் ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்‌ மட்டுமின்றி தனியாருக்குச் சொந்தமான நிலங்களிலும் இந்த வகை மரங்கள் காணப்படுகின்றன.தன... மேலும் பார்க்க

Operation Honeymoon: "சோனம் மீது சந்தேகம் வர இதான் காரணம்..." - மேகாலயா டிஜஜி சொல்வது என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சியும், அவரது மனைவி சோனமும் கடந்த மாதம் 21ம் மேகாலயாவிற்குத் தேனிலவிற்குச் சென்றனர்.சென்ற இடத்தில் அவர்கள் இருவரும் கடந்த 23ம் தேதி திடீரென காணாமல்... மேலும் பார்க்க

திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்கியது எப்படி?

திருச்சி, கே.கே.நகரில் உள்ள இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்.இவர், தனது மனைவி அறிவுச்செல்வி பெயரில் உள்ள திருச்சி, கொட்டப்பட்டு கிராமம், அன்பில் நகரில் சுமார் 5920 சதுரடி உள்ள காலிமனைக்கு ... மேலும் பார்க்க

வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.7 லட்சம் லஞ்சம்? - ஆசிரியர் புகார்... சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு!

வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ஆசிரியரிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆசிரியர் ராமச்சந்திரன்வருமான வரி மோசடி புகார் தொ... மேலும் பார்க்க