செய்திகள் :

Operation sindoor: இந்தியா ”ஆப்ரேஷன் சிந்தூர்" நடத்திய பின் பாகிஸ்தானியர்கள் கூகுளில் தேடியது என்ன?

post image

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா, பாகிஸ்தானியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக சில உத்தரவுகளை பிறப்பித்தது.

இதனை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா இன்று நள்ளிரவு 1.44 மணிக்கு அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது.

மொத்தம் ஒன்பது இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ”ஆபரேஷன் சிந்தூர்” என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியா நடத்திய ”ஆப்ரேஷன் சிந்தூர்” தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களை ஆட்கொண்டன, இதனையடுத்து, பாகிஸ்தான் மக்கள் அதற்கான பதில்களையும் கேள்விகளையும் கூகுளில் தேடி உள்ளனர்.

பாகிஸ்தானின் அதிகம் தேடப்பட்ட கேள்விகளில் ஒன்று "சிந்துர் என்றால் என்ன"?

"ஆங்கிலத்தில் சிந்தூர் என்றால் என்ன?"

"ஆப்ரேஷன் சிந்துர் விக்கி" என கூகுளில் தேடி உள்ளனர்.

இஸ்லாமாபாத், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் இருந்தும் தாக்குதல் குறித்து கூகுளில் தேடப்பட்டிருக்கிறது.

அதில் "இந்தியா ஏவுகணையை ஏவுகிறது", "இந்தியா ஏவுகணை தாக்குதல்" "இந்தியா பாகிஸ்தானை நோக்கி ஏவுகணை ஏவியது" போன்ற தேடுதல் வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.

அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தானின் பல பகுதிகளில் இருந்து ”வெள்ளைக்கொடி” என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளன.

வெள்ளைக் கொடி என்பது போரில் வீரர்கள் தங்கள் துப்பாக்கியில் வெள்ளை துணி அல்லது கைகுட்டையை காட்டி, தங்களின் எதிரி அல்லது பிற ராணுவத்திற்கும் போர் நிறுத்த கோரிக்கைக்கான ஒரு குறியீடாகும். அதாவது அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கு முயற்சிக்க அழைப்பதாகும்.

அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கிய வார்த்தையாக ”இந்தியா போரை அறிவிக்கிறது” என இடம்பெற்றிருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையான பதட்டங்கள் முழு அளவிலான போரை அதிகரிக்கும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பீடி இலை பறிக்கச் சென்ற பழங்குடியினப் பெண்கள் `புலி' தாக்கி இறப்பு... மகாராஷ்டிராவில் சோகம்!

மகாராஷ்டிரா மாநிலம், சந்திராப்பூரில் வனப்பகுதி அதிகமாக இருக்கிறது. அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் விறகு எடுக்க அடிக்கடி வனப்பகுதிக்குள் செல்வதுண்டு. அங்குள்ள சிந்தேவாஹி வனப்பகுதி அருகில் இருக்கும்... மேலும் பார்க்க

Miyazaki Mango: வைரத்திற்கு நிகரான விலையில் விற்கப்படும் மியாசாகி மாம்பழங்கள் - அப்படி என்ன ஸ்பெஷல்?

ஜப்பான் நாட்டில், மியாசாகி மாம்பழங்கள் பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.நாடு முழுவதும் கோடை காலத்தில் மாம்பழங்களுக்கான சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஜப்பானில் உள்ள மியாசாகி மாம்பழம் மிகவும்... மேலும் பார்க்க

Yalda Hakim: பாகிஸ்தான் அமைச்சர்களை நேரலையில் அலறவிட்ட நிருபர் - யார் இந்த யால்டா ஹக்கீம்?

ஆப்கானிஸ்தானை சேர்ந்த யால்டா ஹக்கீம், மூத்த பாகிஸ்தான் அதிகாரிகளுடனான தனது அதிரடியான, தயக்கமற்ற நேர்காணல்களுக்காக பரவலான கவனத்தை ஈர்த்துள்ளார். ‘ஸ்கை நியூஸ்’ நிறுவனத்தில் பணிபுரியும் யால்டா ஹக்கீம் சம... மேலும் பார்க்க

India - Pakistan : `பாகிஸ்தானின் சீக்கிய தலம் மீது தாக்குதலா?’ - மறுத்த இந்திய அரசு | Fact check

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனித தலமான நான்கனா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள், 26 பேரை சுட்... மேலும் பார்க்க

`சீனர்களிடம் எங்களை விற்றுவிட்டனர்’ - லாவோஸ் சைபர் கிரைம் கும்பலிடமிருந்து தப்பியவர்கள் கண்ணீர்

இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஏராளமான இணையத்தள குற்றங்கள் நடக்கிறது. இந்த இணையத்தள குற்றங்களை நடத்துபவர்கள் ஒரு நாட்டில் இருந்து கொண்டு மற்றொரு நாட்டில் செயல்படுகின்றனர். இதனால் அவர்களை கைது செய்வது எ... மேலும் பார்க்க

Murali Naik: "காலையில்தான் எங்களிடம் பேசினான்" - பாகிஸ்தான் தாக்குதலில் மகனை இழந்த பெற்றோர் உருக்கம்

இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த முரளி நாயக்(23) என்ற வீரர் வீர மரணம் அடைந்தார்.முரளி நாயக் பெற்றோருக்குச் சொந்த ஊர் ஆந்திரா மாநிலத்தில் உள்ளது. அவரது தந்தை ஸ்ரீர... மேலும் பார்க்க