செய்திகள் :

Operation Sindoor: `இந்திய ராணுவ நடவடிக்கையை வரவேற்கிறேன்; அதேசமயம் இது..."- திருமாவளவன் சொல்வதென்ன?

post image

ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் குழுவினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தது. இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற 15 நாள்களில், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களின் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

Operation Sindoor
Operation Sindoor

இந்திய ராணுவத்தின் இத்தகைய நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆதரித்து வரவேற்று வருகின்றனர்.

அந்த வரிசையில் விசிக தலைவரும், எம்.பி-யுமான தொல். திருமாவளவன், "இந்திய இராணுவ நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். பயங்கரவாதத்தை அழித்தொழிப்பது நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமே ஆகும். எனவே, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது இந்திய இராணுவம் மேற்கொண்டுள்ள இந்த தாக்குதல் நடவடிக்கை இன்றியமையாத தேவையாக உள்ளது.

அதேவேளையில், இந்த இராணுவ நடவடிக்கையானது ஒரு போராக மாறிவிடாமல் தடுக்கவும், நாட்டின் அமைதியைப் பாதுகாக்கவும், நீடித்த அரசியல் தீர்வுகளை நோக்கிய இராஜதந்திர நடவடிக்கைகள் தேவை என்னும் முக்கியத்துவத்தை விசிக சுட்டிக்காட்ட விரும்புகிறது. பாகிஸ்தானில் ஒளிந்துள்ள பயங்கரவாதிகள் மீதான இந்த நடவடிக்கை, நமது நாட்டில் இஸ்லாத்தைப் பின்பற்றும் குடிமக்கள் மீதான வெறுப்பாகத் தடம் புரண்டுவிடாதபடி பார்த்துக் கொள்ளுமாறும் ஒன்றிய அரசாங்கத்தை விசிக கேட்டுக்கொள்கிறது." என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Operation Sindoor: "100 தீவிரவாதிகள், 40 பாக் ராணுவத்தினர் மரணம்" - முப்படை அதிகாரிகள் கூறியதென்ன?

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அடுத்தடுத்த ராணுவ நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் இன்று முப்படை அதிகாரிகள் விளக்கமளித்தனர். 100... மேலும் பார்க்க

Ukraine: "அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால்..." - ஜெலன்ஸ்கி சொல்வதென்ன?

ரஷ்யா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரை முடிப்பது குறித்து சமீபத்தில் பேசியுள்ளார் விளாதிமிர் புதின்.இதற்கு பதிலளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா இறுதியாக, போருக்கு முற்றுப்... மேலும் பார்க்க

திராவிட மாடல் அரசின் முதன்மைத் திட்டங்கள்; ஏற்றுமதி, வேலைவாய்ப்புகள், மாணவர் சேர்க்கையில் முதலிடம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் திராவிட மாடல் அரசின் திட்டங்களால் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், ஏற்றுமதியில் தமிழ்நாடு இருமடங்கு சாதனை, மின்னணு ஏ... மேலும் பார்க்க

Operation Sindoor முடியவில்லையா? - விமானப்படை சொல்வதென்ன?

இந்தியா பாகிஸ்தான் இடையே போர்-பதற்றம் முடிவுக்கு வந்து போர் நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் நேற்று இரவில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

India - Pakistan: `அமெரிக்காவின் தலையீடு குறித்து விவாதிக்க வேண்டும்' - ராகுல் காந்தி கடிதம்

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன.இதனால் பாகிஸ்தான... மேலும் பார்க்க

India - Pakistan : "முடிவெடுப்பதில் இரு நாடுகளுக்கும் உதவ முடிந்ததில் பெருமை கொள்கிறேன்" - ட்ரம்ப்

பஹல்காம் தாக்குதலுக்கு (ஏப்ரல் 22) பதிலடியாக, தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் (மே 7) நடத்தியது. அதைத் தொடர்ந்து, மே 8-ம் தேதி இரவு ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகள் மீது பாகிஸ்தான் ட்ர... மேலும் பார்க்க