செய்திகள் :

Operation Sindoor: "100 தீவிரவாதிகள், 40 பாக் ராணுவத்தினர் மரணம்" - முப்படை அதிகாரிகள் கூறியதென்ன?

post image

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அடுத்தடுத்த ராணுவ நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் இன்று முப்படை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!

ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் (DGMO) லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் இருந்த 9 தீவிரவாத முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டதாகவும், தீவிரவாதிகளை மட்டுமே தாக்கியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த சுமார் 100 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

விமானப்படை அதிகாரி, ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, "ராணுவ தாக்குதல் நடக்கும்போதே பாகிஸ்தான் பயணிகள் விமானத்தை வான்தடத்தில் அனுமதித்தது. இதனால் பின்னடைவு ஏற்பட்டாலும் இந்தியா தரப்பில் கவனத்தோடு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

இந்தியா தரப்பில் பயணிகள் விமானம் எதுவும் தாக்கப்படவில்லை. பொதுமக்களுக்கு பாதிப்பின்றியே பதிலடி கொடுத்தோம். தீவிரவாத முகாம்களில் துல்லியமாகக் குறிவைத்தே தாக்குதல் நடத்தினோம்.

Indin Army
Indian Army

முருத்கே தீவிரவாத முகாமில் 4 முறை தாக்குதல் நடத்தினோம். வேறெந்த கட்டமைப்பையும் தாக்கவில்லை. பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள் ட்ரோன்கள் இந்திய ராணுவ மையங்களில் தாக்குதல் நடத்த மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டது." என்றார்.

40 பாகிஸ்தான் ராணுவத்தினர் மரணம்?

மேலும், "எங்கு அடித்தால் வலிக்குமோ, அங்கு அடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, விமானப்படைத் தளங்களில் தாக்குதல் நடத்தினோம்.

நாம் குறிவைத்தது பயங்கரவாதிகளை மட்டும்தான். ராணுவத்தை அல்ல. எனினும் மே 7 முதல் 10 வரை 40 வீரர்களை இழந்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல் தெரிவித்திருக்கிறது" என்றார்.

5 வீரர்கள் வீரமரணம்

கடற்படை அதிகாரி என்.ஏ பிரமோத், "அரபிக் கடலில் இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பை மேற்கொண்டது. கடற்படையும் விமானப்படையும் இணைந்து கண்காணிப்பை மேற்கொண்டோம். போர் நிறுத்தம் அமலிலிருந்தாலும் கடற்படை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது." என்று பேசியுள்ளார்.

ஒட்டுமொத்த மோதலில் 5 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகவும், இதற்குமேல் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தீவிரமாக பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்குப் பதிலடி: விராட் கோலி, ஆஷஸ் தொடர், ஆஸி., பவுலர்கள்.. ஜெனரல் ராஜீவ் காய் பேசியது என்ன?

இந்திய ராணுவ நடவடிக்கைகளின் பொது இயக்குநர் (DGMO) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், இன்றைய செய்தியாளர் சந்திப்பில், இந்திய விமானப்படையின் திறனை விளக்குவதற்காக கிரிக்கெட் உவமையைப் பயன்படுத்தினார். அப்போத... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அரசு ஊழியரா நீங்க? Retirement Jobகளுக்கான இந்த இணையதளம் உங்களுக்குத்தான்!

மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் ஓய்வுக்குப் பிறகும் வேலை செய்ய விரும்பினால் அவர்களுக்குவேலை வாய்ப்புகளைஅடையாளம் காட்டும் சேவையைத்தொடங்கியிரு... மேலும் பார்க்க

`பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தலையிட்டது; நம் விமானிகள்.!’ - ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி

இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று ராணுவ அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் இந்திய விமானப்படை அதிகாரி, ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, "எங்களது சண்டை தீவிரவாத... மேலும் பார்க்க

நடக்க இருக்கும் புதின், ஜெலன்ஸ்கி நேரடி சந்திப்பு; இருவரும் ஒப்புகொள்ள காரணம் என்ன? - ஓர் அலசல்

'ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரப் போகிறதா?' என்ற ஆவல் உலகமெங்கிலும் மேலோங்கி உள்ளது. உலக நாடுகளின் நீண்ட நாள் முயற்சி... அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முக்கிய தேர்தல் வாக்குறுதி... நிறைவேறப் போகிறதா?ர... மேலும் பார்க்க

"என் பின்னால் வாருங்கள்; நாம் ஆளும் காலம் வந்துவிட்டது..!" - பாமக மாநாட்டில் அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (மே 11) நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்க... மேலும் பார்க்க

'சமீபத்திய நாள்களில் நேற்று இரவு தான்..!' - இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நிலை என்ன?

ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு - காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலால் தொடங்கிய பரபரப்பு இன்று வரை இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் ஓயவில்லை. இதற்கு பதிலடியாக, இந்தியா கடந்த மே 7-ம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம... மேலும் பார்க்க