செய்திகள் :

Parasakthi: 'சிவகார்த்திகேயனுக்காக வெயிட்டிங்..!' - அப்டேட் கொடுத்த சுதா கொங்கரா

post image

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் ‘பராசக்தி’ படம்உருவாகி வருகிறது.

டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுதா கொங்கராவிடம் ‘பராசக்தி’ படம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

பராசக்தி படப்பிடிப்பு தளத்தில்...
பராசக்தி படப்பிடிப்பு தளத்தில்...

அதற்கு பதிலளித்த அவர், “ ‘பராசக்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 40 நாட்கள் இருக்கின்றது. சிவகார்த்திகேயன் வரட்டும்னு வெயிட் பண்றோம்.

அவர்  தற்போது ‘மதராஸி’ படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கையில் இருக்கின்றார். அதை முடித்துக்கொண்டு வந்தவுடன் பராசக்தி படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை துவங்குவோம்” என்றிருக்கிறார்.

 மேலும் இப்படம் இந்தி திணிப்பு பற்றிய படமா என கேள்வி எழுப்பியதற்கு, “மீடியாவில் தான் அப்படி பேசுறாங்க, ஆனால்  நான் இதுவரை அப்படி சொன்னதே இல்லை. இது சகோதரர்களின் கதை அவ்வளவு தான்” என்று பதிலளித்திருக்கிறார்.

தொடர்ந்து விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் பராசக்தி மோதவுள்ளதா? என்ற கேள்விக்கு “மீடியாக்களில் தான் இந்த விஷயத்தை பற்றி பெரிதாக பேசுகின்றனர்.

பராசக்தி
பராசக்தி

ஆனால் நாங்க இன்னும் அதிகாரப்பூரவமாக அறிவிக்கவே இல்லையே. ரிலீஸ் குறித்து எல்லாம் நான் முடிவெடுக்க முடியாது. தயாரிப்பாளர் தான் ரிலீஸ் பற்றி முடிவெடுக்கவேண்டும்” என சுதா கொங்கரா கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Parandhu Po: "ஆனந்த யாழைப் பாடலை சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்காததால்..." - இயக்குநர் ராம்

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கிற பறந்து போ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி வெளியாகிறது. மிர்ச்சி சிவா, அஞ்சலி, அஜு வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி... மேலும் பார்க்க

Soori: 'ஒரு ‘வியூ’க்காக தயவு செய்து இப்படி பண்ணாதீங்க...' - மக்களுக்கு சூரி வைத்த வேண்டுகோள் என்ன?

சூரி நடிப்பில் வெளியாகி இருக்கும் 'மாமன்' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்க்க வேண்டாம் எனவும், நாம் ஒவ்வொருவரும் மாற்றத்திற்க... மேலும் பார்க்க

Simbu: `நீங்கள் யார்-னு கேட்டுட்டாரு; அதை மறக்கவே முடியாது' - கோலி பற்றி சுவரஸ்யம் பகிர்ந்த சிம்பு

மணி ரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைப்’.இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திர... மேலும் பார்க்க

Tourist Family: `எப்படி விவரிப்பது; நன்றியுணர்வில் அழுகிறேன்..'- சூர்யா சந்திப்பு பற்றி இயக்குநர்!

சசிக்குமார் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள 25 வயதேயான இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் வெ... மேலும் பார்க்க

ஆகக்கடவன விமர்சனம்: பிரச்னையில் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள்; புதுமுகங்களின் முயற்சி எப்படி?

மூன்று நண்பர்கள் ஒரு மெடிக்கல் கடையில் ஒன்றாக வேலை செய்து வருகிறார்கள். அந்தக் கடையின் உரிமையாளர் கடையை விற்க முடிவெடுக்க, அதை அவர்களே வாங்கிக்கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் சேமித்... மேலும் பார்க்க

Trisha: 'கமல் சார் என்னுடைய வழிகாட்டி, மணி சார்...'- பணியாற்றிய அனுபவம் குறித்து த்ரிஷா

மணி ரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைப்’.இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தி... மேலும் பார்க்க