செய்திகள் :

Periyar: "ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்திலும் பெரியாரைக் கடுமையாக விமர்சிப்போம்” - நாதக மு.களஞ்சியம்

post image

பெரியார் மீதான சீமானின் ஆதாரமற்ற விமர்சனங்களால் பெரும் நெருக்கடியைச் சந்தித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. இச்சூழலில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு. களஞ்சியத்தைச் சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சவால்கள் குறித்துக் கேட்டேன்.

``பெரியாரை இப்படித் தாறுமாறாக விமர்சித்தால் நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைத்தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்கிறார்களே?”

``நாம் தமிழர் கட்சிக்கு எந்த பின்னடைவும் வராது. ஈரோடு கிழக்கு பிரசாரக் களத்திலும் பெரியார்மீதான எங்கள் விமர்சனத்தை இன்னும் கூர்மையாகவும் கடுமையாகவும் முன்வைக்கப் போகிறோம். நான் சவால் விடுகிறேன். பெரியாரின் பிள்ளைகளாகிய தி.மு.க-வினர் மக்களைப் பட்டியில் அடைக்காமல், வாக்குக்குக் காசு கொடுக்காமல் பெரியார் பேசிய கருத்துகளை அப்படியே பேசி தேர்தலைச் சந்திப்பார்களா? பெரியாரை எதிர்த்தால் வாக்களிக்கிறார்கள்.. பெரியார் சொன்னதைச் சொன்னால் வாக்களிக்கிறார்களா என இந்த தேர்தலில் பார்த்துவிடுவோம். 2023-ல் நடந்த கிழக்கு இடைத்தேர்தலில், 10,800 வாக்குகளைப் பெற்றது நாம் தமிழர் கட்சி. அதைவிட ஒரு வாக்கு அதிகம் பெற்றாலே பெரியார் தோற்றுப் போய்விட்டார், திராவிடம் செத்துவிட்டது என்றுதான் அர்த்தம்"

பெரியார்
பெரியார்

``அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் களத்தில் இல்லாததால் அவர்களின் வாக்குகள் எளிதாகக் கிடைத்துவிடும் எனக் கணக்குப் போடுகிறீர்களா?”

``விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணித்தபோதும் வழக்கமாக நாங்கள் பெறும் விழுக்காட்டையே பெற்றோம். ஆகையால் மற்ற கட்சிகள் புறக்கணிப்பதால் அவர்களின் ஆதரவாளர்கள் எங்களுக்கு வாக்களித்துவிட மாட்டார்கள். மாறாக நா.த.க முன்வைக்கும் கருத்தியலை ஏற்று, தூய அரசியலை விரும்புவோர் எங்களை நிச்சயம் ஆதரிப்பார்கள். பாசிச தி.மு.க-வை எதிர்த்துப் போரிடும் ஒரே துணிச்சல் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே இருக்கிறதென்பதை மக்கள் உணர்வார்கள்”

சீமான்

``ஆதாரமில்லாத அவதூறை சீமான் பரப்புவதாகக் கூறி பெரியாரிய அமைப்புகள் சீமானின் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருக்கிறார்களே?”

``எதற்காகப் பெரியாரின் எழுத்துகளை நாட்டுடைமையாக்காமல் வைத்திருக்கிறார்கள். கருணாநிதியின் எழுத்துகளை நாட்டுடைமையாக்கும்போது பெரியார் எழுத்துகளை ஆக்காதது ஏன் என்ற கேள்விக்கு முதலில் திராவிட கும்பல் பதிலளிக்கட்டும். அண்ணன் சீமான் வீட்டை முற்றுகையிடப் போவதாகச் சொல்கிறார்களே.. ஆம்ஸ்ட்ராங் கொலை, அண்ணா பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், பரந்தூர் போராட்டம், டங்ஸ்டன் போராட்டம் மற்றும் வேங்கைவயல் என எந்த மக்கள் பிரச்னைகளுக்கு என்றாவது முற்றுகைப் போராட்டம் செய்தார்களா?

சீமான்
சீமான்

வன்முறை நோக்குடன் நடத்தத் திட்டமிடப்படும் அந்த முற்றுகை போராட்டத்துக்குத் தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது. நாங்களும் பெரியார் எழுத்துகளை நாட்டுடைமை ஆக்குங்கள் எனப் பெரியார் திடலை முற்றுகையிடுவது குறித்து யோசிப்போம்”

``பெரியாரை எதிர்க்கும் நா.த.க-வைத் தாங்கிப் பிடிக்கிறது பா.ஜ.க. ஆக, `சீமான், ஆர்.எஸ்.எஸ் ஏஜென்ட்’ என்கிறார்களே”

களஞ்சியம்
களஞ்சியம்

``அம்பேத்கரைக் கூடத்தான் பா.ஜ.க கொண்டாடுகிறது. அதற்காக அவரை இந்துத்துவவாதி என்பீர்களா... அவர்கள் தங்களுடைய லாபத்துக்காக அண்ணன் சீமானின் கருத்துகளை ஆதரிப்பதால், நாங்கள் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவிட்டோம் எனச் சொல்வது அயோக்கியத்தனம்”

2 இளைஞர்கள் மீது தீ வைப்பு; ராணிப்பேட்டையில் பதற்றம்; தலைவர்கள் அறிக்கை; நடந்தது என்ன?

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சூரியா என்கிற தமிழரசன் (23) மற்றும் விஜய கணபதி (22).இருவரும், ஜன.16-ம் தேதியான நேற்று முன்தினம் மாலை 5... மேலும் பார்க்க

Trump: ``டிரம்ப் முடிவுகளால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்" -எச்சரிக்கும் உலக வங்கி

அமெரிக்காவைச் சேர்ந்த மீடியா நிறுவனம் ஒன்று, டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்பது தொடர்பாக சர்வே ஒன்றை எடுத்துள்ளது. அதில் 'டிரம்ப் பதவியேற்றப்பிறகு, மளிகை சாமான்கள், ரியல் எஸ்டேட், மருத்துவம... மேலும் பார்க்க

‘கேஷ்லெஸ் சமூகம்’ ஆக ஸ்வீடன் - பணம் இருந்தும் வாடும் ‘டிஜிட்டல் ஏழை’களைத் தெரியுமா?

‘கேஷ்லெஸ் சமூகம்’உலகம் முழுவதுமே கிரெடிட், டெபிட் கார்டுகள், பணப் பரிவர்த்தனை ஆப்கள் வியாபித்துக் கிடக்கின்றன. ஆனாலும், ஸ்வீடன் அளவுக்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வேறு எந்த நாட்டிலும் அதிகமில்லை எனலா... மேலும் பார்க்க

``டாலரின் மதிப்பு உயர்வு பற்றி எனக்கு கவலை இல்லை" - ரகுராம் ராஜன் சொல்லும் காரணம்

2013-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர் ரகுராம் ராஜன். '2024- 2025 நிதியாண்டில், இந்தியா ஜி.டி.பி 6.4 சதவிகிதமாக இருக்கலாம். இது கடந்த நான்கு ஆண்டுகளில் மிக... மேலும் பார்க்க

2010, 2017, 2024-ல் நடக்காதது, 2025-ல் நடக்குமா? -புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகமா?! |New Tax Bill

வரும் பிப்ரவரி 1-ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை வெளியிடப்போகிறார். இதையொட்டி, பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மாதம் தொடங்க உள்ளது. இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடரில், புதிய நேரட... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: தி.மலை நெடுஞ்சாலையின் அவலநிலையைச் சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

திருப்பத்தூர் மாவட்டம், வெங்கலாபுரம் அருகே உள்ள திருவண்ணாமலை நெடுஞ்சாலையையொட்டி அமைந்திருக்கிறது இந்த இடம். செங்கம், சிங்காரப்பேட்டை, திருவண்ணாமலை செல்வதற்காக இந்த வழியை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருக... மேலும் பார்க்க