Bison: ``நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? - இது அபத்தமான கேள்வி" - மேடைய...
PMK: `எனக்கு பாதுகாப்பாக இருப்பார்!’ - மகள் காந்திமதியை செயல் தலைவராக அறிவித்த ராமதாஸ்
பா.ம.க-வின் நிறுவனரும், தலைவருமான ராமதஸுக்கும் - அவரின் மகன் அன்புமணிக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.
இருவருக்கும் இடையே பிரச்னை தீவிரம் அடைந்த நிலையில், அன்புமணி தனித்து செயல்படத் தொடங்கினார்.
அதே நேரம், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்க வேண்டும் எனக் காலக்கெடு நிர்ணயித்து நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால், அன்புமணி தரப்பிலிருந்து அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை.

`தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவேன்’
அதனால், அன்புமணியை கட்சியின் செயல் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
மேலும், கட்சியின் தலைவராக ராமதாஸே பொறுப்பு வகித்தார். இந்நிலையில் கட்சியின் புதிய செயல் தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தருமபுரியில் நடைபெற்று வரும் கூட்டத்தில் இதனை அறிவித்த ராமதாஸ், 'காந்திமதி கட்சியையும் வளர்ப்பார், எனக்கும் பாதுகாப்பாக இருப்பார்' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து காந்திமதி, 'இந்த பதவி எனக்கு எதிர்பாராமல் கிடைத்தது, தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவேன்' என்று கூறினார்.



















