செய்திகள் :

Pongal Release: பிற்போடப்பட்ட விடாமுயற்சி; ஒரே நாளில் ரிலீஸை அறிவித்த படங்கள் என்னென்ன?

post image
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'.

இப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று நேற்று (31.12.2024) இரவு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிக்கை வெளியிட்டிருந்தது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. 'விடாமுயற்சி' ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போனதால் சில படங்கள் பொங்கல் அன்று தங்களது படங்களை ரிலீஸ் செய்கின்றனர்.

மெட்ராஸ்காரன்

அந்தவகையில் SR புரொடக்ஷன் சார்பில் B. ஜகதீஸ் தயாரிப்பில், 'ரங்கோலி' பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் 'மெட்ராஸ்காரன்' பொங்கலுக்கு ரிலீஸாக போவதாகப் படக்குழு அறிவித்திருக்கிறது.

அதேபோல இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டென் ஹவர்ஸ்'.

இத்திரைப்படத்தினை டுவின் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கிறது. க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

'தேஜாவு' படத்தின் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தருணம்'. கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கிறார்.

தருணம்

ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். இந்தப் படமும் பொங்கல் அன்று வெளியாகும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதை உறுதி செய்திருக்கிறது படக்குழு.

நீங்கள் எந்தப் படத்தைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதை கமென்ட் செய்யுங்கள்...

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

மாணவி வன்கொடுமை வழக்கு: "பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் நிற்கணும்..." - சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

'அமரன்' பட ஹிட்டிற்கு பிறகுச் சிவகார்த்திகேயன், சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.இப்படம் சிவகார்த்திகேயனின் 25-வது படம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 100வது படம். இப்படத்தின் படப்பிடிப்பு... மேலும் பார்க்க

Madha Gaja Raja: "அந்த காட்சி எடுக்கறப்போ நடந்த விபத்து" - விஷால்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி... என பல ஸ்டார் காஸ்ட்டுடன் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2013-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டத் திரைப்படம் `மதகஜராஜா'.ஜ... மேலும் பார்க்க

``அப்பா மாதிரி லவ் ஸ்டோரி டைரக்ட் பண்ணனும்னு ஆசை'' - இயக்குநர் ஜீவாவின் மகள் சனா மரியம் ஷேரிங்ஸ்

`12B', `உள்ளம் கேட்குமே', `உன்னாலே உன்னாலே', போன்ற திரைப்படங்களின் மூலம் இளைஞர்கள் மனதில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கச் செய்தவர் இயக்குநர் ஜீவா.அவர் மறைந்தாலும் அவருடைய திரைப்படங்களின் காட்சிகள் இன்றும் ... மேலும் பார்க்க