செய்திகள் :

Rain Alert: `இன்று இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு' - வானிலை மையம் தகவல்!

post image

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து, தென்தமிழகம் வரை வளி மண்டல சுழற்சி நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மழை

இன்று (08-04-2025)

லேசானது முதல் மிதமான மழை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன மழை: புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

09-04-2025 முதல் 13-04-2025 வரை

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீன் பிடித்தல்

மீனவர்களுக்கான எச்சரிக்கை

10-04-2025 மற்றும் 11-04-2025: தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

08-04-2025: தெற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதனால் மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனர்வர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் என்ன?

தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. உருவான காற்றழுத்தத... மேலும் பார்க்க

Chennai Rain: வெயில் வாட்டி வதைத்த நிலையில் சென்னையில் இன்று திடீர் மழை!

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் இன்று காலையில் மிதமான மழை பெய்தது. நீலகிரி, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 12 பகுதிகளில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ... மேலும் பார்க்க

'அமைச்சகத்தின் நம்பர் ஒன்!' ரூ.226 கோடி ஈட்டிய வானிலை ஆய்வு மையம்!' - எப்படி?

2022-23 நிதியாண்டில் இருந்து இந்திய வானிலை ஆய்வு மையம் சுமார் 226 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த மையம், அந்த அமைச்சகத்திற்கு அதிக வருவாய் ஈட்டி தரு... மேலும் பார்க்க