செய்திகள் :

Rain Alert: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்; 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! - சென்னையில் தொடரும் மழை| Live

post image

15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

மழை

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக நெல்லை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, அரியலூர், காஞ்சி, திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, சென்னை, விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் டிசம்பர் 12-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாகூர் தர்கா சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு நாகையிலும், கனமழையால் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

மழை

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் செவ்வாய்க்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது நேற்று (11-ம் தேதி) மேற்கு - வடமேற்கு திசையில் இலங்கை - தமிழக கடலோரப் பகுதியை நோக்கி மெதுவாக நகரும் எனவும், அதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல இடங்களில் அடுத்த 4 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

எனவே, தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மழை

அடுத்த ஐந்து நாள்களுக்கு கடல் சீற்றம் இருக்கும், எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Rain Alert: 'வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி' - எந்தெந்த மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை?

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று (டிசம்பர் 10) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது என்றும், இது இன்று (டிசம்பர் 11) மேற்கு - வடமேற்கு திசையில், தெ... மேலும் பார்க்க

Rain Alert : `வங்கக் கடலில் வலுப்பெற்றது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி' - எந்தெந்த மாவட்டங்களில் மழை?

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றிருப்பதாகவும், அடுத்த நான்கு நாள்களுக்குத் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ... மேலும் பார்க்க

Rain Alert: டிசம்பர் 12 - மிக கனமழைக்கு வாய்ப்பு..! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்?

வரும் 12ம் தேதி தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் மிககனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வ... மேலும் பார்க்க

Rain Alert: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி... எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்ட இந்திய வானிலை மையத்தின் அறிக்கையில், "தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இயல்பை விட 31 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்யலாம்" என்று கூறப்பட்டிருந்தது. அத... மேலும் பார்க்க

Tsunami: 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை விடுத்திருக்கும் அமெரிக்கா!?

அமெரிக்காவின் ஹம்போல்ட் கவுண்டி, சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி கடலில் வியாழக்கிழமை காலை 10:44 மணியளவில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. பொதுமக்க... மேலும் பார்க்க

Rain Alert: `தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு காற்று அழுத்த தாழ்வுப் பகுதி?!' - வானிலை மையம் சொல்வதென்ன?!

ஃபெஞ்சல் புயலின் தாக்கமே தமிழ்நாட்டில் இன்னும் குறையாதப்பட்சத்தில், மேலும் ஒரு காற்று அழுத்த தாழ்வுப் பகுதியை தமிழ்நாடு சந்திக்க உள்ளது போலும்."தென் மத்திய வங்கக் கடலில் புதிய காற்று அழுத்த தாழ்வுப் ப... மேலும் பார்க்க