செய்திகள் :

Rainy Season: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க; 10 வகையான மூலிகைத் தேநீர் - செய்முறை விளக்கம்

post image

துளசி டீ

மூலிகை டீ

தேவையானவை: துளசி இலைகள் - 10 - 20, ஏலக்காய் - 4, சுக்கு - அரை அங்குலத்துண்டு, தேன் - 2 டீஸ்பூன், பால் - கால் கப்.

செய்முறை: துளசி இலைகள், ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை நன்கு நசுக்கி, ஒரு டம்ளர் நீரில் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். அரை டம்ளராக வற்றியதும், வடிகட்டி விருப்பப்பட்டால் பால், தேன் கலந்து பருகலாம்.

பலன்கள்: துளசியில் வைட்டமின் ஏ, பீட்டாகரோட்டின், பொட்டாசியம், இரும்புச்சத்து, தாமிரம், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. நெஞ்சுச்சளி நீங்கும், கபத்தை அறுக்கும், தலைவலியைப் போக்கி உற்சாகத்தை அதிகரிக்கும்.

கொத்தமல்லி டீ

கொத்தமல்லி டீ

தேவையானவை: கொத்தமல்லி விதை - 100 கிராம், ஏலக்காய் - 2, பனஞ்சர்க்கரை - 2 டீஸ்பூன், பால் - அரை டம்ளர்.

செய்முறை: தனியாவை வெறும் வாணலியில் வறுத்து, ஆறிய பின் பொடிக்க வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தனியா பொடியைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஏலக்காய் தட்டிச் சேர்த்து, நன்கு கொதித்ததும் எடுத்து, பால், பனஞ்சர்க்கரை சேர்த்துப் பருகவும்.

பலன்கள்: மக்னீசியம், மாங்கனீஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, கே நிறைந்துள்ளன. ரத்தசோகையைக் கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். செரிமானத்திறனைச் சீராக்கும். வயிற்றுப்புண்ணைப் போக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். பார்வைத்திறனை மேம்படுத்தும்.

புதினா டீ

புதினா டீ

தேவையானவை: புதினா இலை - 5, தேயிலை - ஒரு டீஸ்பூன், தேன் அல்லது பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன், பால் - கால் டம்ளர் (விருப்பப்பட்டால்).

செய்முறை: ஒரு டம்ளர் நீரில் புதினா இலை, தேயிலைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும். விருப்பப்பட்டால் பால் சேர்க்கலாம்.

பலன்கள்: புதினாவில் மென்தால் நிறைந்துள்ளது. இது சுவாசமண்டலப் பிரச்னைகளைச் சரிசெய்யும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும், இதில் உள்ள கால்சியம் பற்களை வலுவாக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது என்பதால் உட்புறப் புண்களைக் குணமாக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். புற்றுநோய் செல்களை அழிக்கும்.

மசாலா டீ

மசாலா டீ

தேவையானவை: தேயிலை, சர்க்கரை - தலா 2 டீஸ்பூன், கிராம்பு, ஏலக்காய் - தலா 2, பால் - அரை கப், பட்டை - சிறிய துண்டு.

செய்முறை: பட்டை, கிராம்பு, ஏலக்காயைச் சேர்த்துப் பொடிக்க வேண்டும். பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரைக் கொதிக்கவிடவும். அதில் தேயிலை மற்றும் செய்துவைத்துள்ள பொடி கால் டீஸ்பூன் சேர்க்கவும். நீர் பாதியாகச் சுண்டியதும் இறக்கி வடிகட்டி, பால், சர்க்கரை சேர்த்து பருகலாம்.

பலன்கள்: வைட்டமின்கள் ஏ, பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. செரிமானத்தை மேம்படுத்தும். புற்றுநோயைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். லேசான தலைவலி மற்றும் உடல்வலிக்கு இதைப் பருக, உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ஓமம் டீ

டீ

தேவையானவை: கிரீன் டீ - ஒரு டீஸ்பூன், ஓமம் - கால் டீஸ்பூன், பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கிரீன் டீயுடன் ஓமத்தைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். சாறு இறங்கியதும் வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: வைட்டமின்கள், ஏ, கே, இ, சி, ஃபோலிக் அமிலம், செலீனியம், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. ஃபோலிக் அமிலம் உள்ளதால், கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. செரிமானத்தை மேம்படுத்தும். நுரையீரல் அழற்சியைப் போக்கும். சளி, இருமலைத் தடுக்கும். தொண்டைப் புண்ணைக் குணமாக்கும்.

கற்பூரவல்லி டீ

கற்பூரவல்லி டீ

தேவையானவை: கற்பூரவல்லி இலைகள் - 5, மிளகு - 5, கிரீன் டீ - ஒரு டீஸ்பூன், பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன்.

செய்முறை: கிரீன் டீயுடன் ஓமவல்லி இலைகள், மிளகு சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பிறகு, வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.

பலன்கள்: ஓமவல்லியில் டெர்பினாய்ட்ஸ் (Terpenoids), தைமால் (Thymol) நிறைந்துள்ளன. சளி, மூலத்தை குணமாக்கும். செரிமான பிரச்னைகளைத் தடுக்கும். மலச்சிக்கலை நீக்கும். ஆஸ்துமாவை ஏற்படுத்தும் நுண்கிருமிகள் மீது செயல்பட்டு, நுரையீரலைக் காக்கும்.

தூதுவளை டீ

சளி இருமலை போக்கும் தூதுவளை!

தேவையானவை: தூதுவளைப் பூ, காய், இலை சேர்த்து உலர்த்திப் பொடிசெய்தது - 2 டீஸ்பூன், மிளகு - 5, பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன்.

செய்முறை: இரண்டு டம்ளர் நீரில் தூதுவளைப் பொடி சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். இதனுடன், மிளகு சேர்த்து, மிதமான நெருப்பில் கொதிக்கவிடவும். பிறகு, வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் கலக்கிப் பருகவும்.

பலன்கள்: கால்சியம், பாஸ்பரஸ், ஃபிளேவனாய்ட்ஸ் நிறைந்துள்ளன. நுண்கிருமிகளை அழிக்கும். சளி, இருமலைப் போக்கும். உடலை வலுவாக்கும். ஆண்மையைப் பெருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். நுரையீரலை வலுவாக்கும். ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்.

ஹெர்பல் டீ

ஹெர்பல் டீ

தேவையானவை: கிராம்பு, ஏலக்காய் - தலா 2, தனியா, மிளகு - தலா அரை டீஸ்பூன், சீரகம், சுக்குப்பொடி - தலா ஒரு டீஸ்பூன், கருப்பட்டி (அல்லது) வெல்லம் - 5 கிராம்.

செய்முறை: இரும்புச்சட்டியைச் சூடாக்கி, தனியா, மிளகு, சீரகம், கிராம்பு, ஏலம் என ஒவ்வொன்றாகப் போட்டு எடுத்து, இளம் சூட்டிலேயே மிக்ஸியில் போட்டு (தனியா இரண்டாக உடைந்தால் போதும்) அரைக்க வேண்டும்.

ஒரு டம்ளர் நீரைக் கொதிக்கவைத்து, கருப்பட்டியைத் தட்டிப் போட்டு, நன்கு கொதித்ததும் சுக்குப்பொடி, மூலிகைப்பொடி இரண்டையும் தலா அரை டீஸ்பூன் போட்டு தட்டுப் போட்டு மூடிவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து, வடிகட்டிச் சூடாக அருந்தலாம்.

இஞ்சி டீ

இஞ்சி டீ

தேவையானவை: இஞ்சி - 2 அங்குலத் துண்டு, ஏலக்காய் - 2, பால் - கால் கப், பனஞ்சர்க்கரை - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: இஞ்சியைத் தோல் சீவிச் சுத்தம்செய்யவும். ஏலக்காயைத் தட்டி இரண்டையும் ஒரு டம்ளர் நீரில் போட்டுக்கொதிக்கவிட வேண்டும். பாதியாக வற்றியதும், வடிகட்டி, பால், பனஞ்சர்க்கரை சேர்த்துக் கலந்து அருந்தலாம். தினசரி காலையில் பருக ஏற்றது.

பலன்கள்: கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சி, பீட்டாகரோட்டின், பாலிஃபினால்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. இஞ்சி செரிமானத்தை மேம்படுத்தும், நெஞ்சு எரிச்சல், வயிற்று உபாதைகளைப் போக்கும். புற்றுநோயைத் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

ஆரஞ்சுத் தோல் டீ

ஆரஞ்சு டீ

தேவையானவை: ஆரஞ்சுத் தோல் பொடியாக நறுக்கியது - 2 டீஸ்பூன், ஏலக்காய் - 2, தேன் - 2 டீஸ்பூன்.

செய்முறை: ஆரஞ்சுத் தோலின் வெள்ளைப் பகுதியை எடுத்துவிட்டு, பொடியாக நறுக்க வேண்டும். இரண்டு டம்ளர் நீரில் அதைப்போட்டுக் கொதிக்கவிட்டு, தட்டிய ஏலக்காய் சேர்க்க வேண்டும். பாதியாகச் சுண்டியதும் எடுத்து, வடிகட்டி தேன் சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட், ஃபிளேவனாய்ட்ஸ் நிறைந்துள்ளன. சருமப் பிரச்னைகள் நீங்கும். சருமம் பளபளப்பு பெறும். முதுமையைத் தாமதப்படுத்தும். புற்றுநோயைத் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

Vikatan Play: நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga

மதுரை : `5 ஆண்டுகளில் நாய் கடித்து 32 பேர் உயிரிழப்பு!' - ஆர்.டி.ஐ தகவலால் அதிர்ச்சி

மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாய் கடிக்கு ஆளாகி பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒவ்வொரு மாதமும் மாநகராட்சி கூட்டங்களில் கவுன்சி... மேலும் பார்க்க

மகனால் வெட்டப்பட்ட தாயின் கைகள்... 9 மணி நேர அறுவை சிகிச்சை - ராஜீவ் காந்தி மருத்துவமனையின் சாதனை!

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த 40 வயது பெண்ணின் இரண்டு கைகளையும், அவரது மகனே குடும்ப தகராறில் வெட்டி உள்ளார். அந்த பெண்ணின் இரு கைகளையும் மீண்டும் இணைத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ... மேலும் பார்க்க

Progeria: 15 வயதுக்குள் மரணம் நிச்சயம்; 19 வயதுவரை தாக்குப்பிடித்த டிக்டாக் பிரபலம் - என்ன நோய் இது?

பீந்திரி பூய்சென் ஒரு டிக்டாக் பிரபலம். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இவர், புரோஜிரியா (Progeria) என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். புரோஜிரியா என்பது ஒரு மரபணு கோளாறு. இதனால் சிறிய வயதிலேயே அதிவ... மேலும் பார்க்க

National siddha Day 2024: வாழ்வியல் நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு இருக்கிறதா?

இன்று 8-வது தேசிய சித்த மருத்துவ தினம் (டிசம்பர் 19). ''மார்கழி மாதத்தில் வருகிற ஆயில்ய நட்சத்திரம் அன்று அகத்தியர் பிறந்த நாள் என கணிக்கப்பட்டு, அன்றைய தினமே தேசிய சித்த மருத்துவ தினம் அனுசரிக்கப்பட்... மேலும் பார்க்க

Healthy Cooking : மருந்து சாதம் முதல் அலுப்புக்குழம்பு வரை... குளிர் கால ரெசிப்பிகள்

மழையும் பனியும் சேர்ந்து மிரட்டிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சில ரெசிப்பிக்களை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த ரெசிப்பிகளையும் அதன் பலன்களையும் சொல்கிறார் சித்த மருத்துவர் அ... மேலும் பார்க்க

Paracetamol: `வயதானவர்களுக்கு பாராசிட்டமால் ஆபத்தா?' - ஆய்வு முடிவும் டாக்டரின் விளக்கமும்

மருத்துவரின் ஆலோசனை பெறாமலே, மெடிக்கல் ஷாப்களில் வாங்கக்கூடிய மாத்திரைகளில் முக்கியமான ஒன்று, பாராசிட்டமால். இதை அளவு தெரியாமல் எடுத்துக்கொள்ளும்போது, சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் எச்சர... மேலும் பார்க்க