செய்திகள் :

Rajini: "50 ஆண்டுக் காலம் திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி.." - ஓபிஎஸ்

post image

`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி' திரைப்படம் வெளியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தவிர ரஜினிகாந்த் தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

கூலி திரைப்படம்
கூலி திரைப்படம்

பலரும் ரஜினிகாந்த்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாருமான ஓ.பன்னீர்செல்வம் ரஜினிகாந்த்தின் 50 ஆண்டுக்கால சினிமா பயணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், "1975 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது வெளியாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வரை 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ஐம்பதாண்டுக் காலம் திரையுலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்ற எனது இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது பாராட்டுகள். அவர் மேலும் பல்லாண்டுகள் நல்ல தேக ஆராக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து, மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நல்வாழ்த்துகள்" என்று வாழ்த்தியுள்ளார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

`ஆன்மிக விஷயத்திலும், யோகாவிலும் கவனம் செலுத்துகிறார்; இது அவரது...'- ரஜினியை வாழ்த்திய பவன் கல்யாண்

`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி' திரைப்படம் வெளியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி... மேலும் பார்க்க

Heart Beat: 'மோதலும்.. காதலும்..' - 'ஹார்ட் பீட்' நடிகை அஸ்வதி லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Photo Album

Heart Beat 2: `இளையராஜா சார் உன் கண்ணீர் தூய்மையாக இருக்குனு சொன்னாரு’ - ஹார்ட் பீட் 2 டீம் பேட்டிசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பா... மேலும் பார்க்க

இட்லிக் கடை: ``அக்டோபரில் வெந்து விடும் sorry வந்து விடும்" - நடிகர் பார்த்திபனின் கலகல

தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக உருவாகிவருகிறது 'இட்லிக் கடை'. தனுஷின் 52-வது படமான இட்லி கடை படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன், வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய், ராஜ் கிரண், சிறப்புத் தோற்றத்தில் ந... மேலும் பார்க்க

Rajinikanth 50: "அவரது கதாபாத்திரங்கள் தலைமுறைகள் கடந்தாலும்..." - ரஜினிகாந்த் குறித்து மோடி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ், அமீர் கான், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் எனப் பெரும் நடிகர் பட்டாளத்தின் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாகியிருக்கிறது.அதே நேரம், இந்த ஆண... மேலும் பார்க்க