செய்திகள் :

இட்லிக் கடை: ``அக்டோபரில் வெந்து விடும் sorry வந்து விடும்" - நடிகர் பார்த்திபனின் கலகல

post image

தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக உருவாகிவருகிறது 'இட்லிக் கடை'. தனுஷின் 52-வது படமான இட்லி கடை படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன், வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய், ராஜ் கிரண், சிறப்புத் தோற்றத்தில் நடிகர் பார்த்திபன் நடித்திருக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகம இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்தப் படத்தில் நடித்தது குறித்து நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தன் இன்ஸ்டாகிராம் பகிர்ந்திருக்கிறார்.

பார்த்திபன் - தனுஷ்
பார்த்திபன் - தனுஷ்

அதில், ``இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த ‘ சூதாடி’ இடையில் நின்று போனதும், இவையாவையும் ஈடு கட்டும் விதமாக ‘ இட்லிக் கடை’யில் ஒரு சிறு மினி இட்லியாக கௌரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன்.

நேற்று டப்பிங் நிறைவு பெற்றது. இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு, எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால் (மிருனாள் எனத் தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ஏனெனில் அது தான் பிசுபிசுத்த கிசுகிசுவாய் போய் விட்டதே) அது ஆச்சர்யமில்லை என்பதை கண் கூடாகக் கண்டேன்
இட்லிக் கடையில். அக்டோபரில் வெந்து விடும் sorry
வந்து விடும்!!!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Heart Beat: 'மோதலும்.. காதலும்..' - 'ஹார்ட் பீட்' நடிகை அஸ்வதி லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Photo Album

Heart Beat 2: `இளையராஜா சார் உன் கண்ணீர் தூய்மையாக இருக்குனு சொன்னாரு’ - ஹார்ட் பீட் 2 டீம் பேட்டிசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பா... மேலும் பார்க்க

Rajini: "50 ஆண்டுக் காலம் திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி.." - ஓபிஎஸ்

`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி' திரைப்படம் வெளியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி... மேலும் பார்க்க

Rajinikanth 50: "அவரது கதாபாத்திரங்கள் தலைமுறைகள் கடந்தாலும்..." - ரஜினிகாந்த் குறித்து மோடி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ், அமீர் கான், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் எனப் பெரும் நடிகர் பட்டாளத்தின் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாகியிருக்கிறது.அதே நேரம், இந்த ஆண... மேலும் பார்க்க