நடுவர் நிதின் மேனன் விலகல்! சாம்பியன்ஸ் டிராபிக்கான நடுவர்கள் யார்? -முழு விவரம்
Ranveer Allahbadia: `உங்கள் பெற்றோர் உடலுறவு கொள்வதை..'- யூடியூபர் சர்ச்சை பேச்சு; வலுக்கும் கண்டனம்
கடந்த ஆண்டு பிரதமர் மோடி கையால் சிறந்த 'disruptor' விருதை வென்ற யூடியூபர், பாட்காஸ்டர் ரன்வீர் அல்லாபாடியா. இவர் அரசியல் பிரமுகர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் எனப் பலரை நேர்காணல் செய்து பிரபலமடைந்தவர். இவரும், நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னா போன்றோர் இணைந்து "இந்தியாஸ் காட் லேட்டண்ட்" எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ரன்வீர் அல்லாபாடியா, ``உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்க்க விரும்புவீர்களா... அல்லது அதை நிரந்தரமாக நிறுத்துவீர்களா" எனக் கேட்டார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/6n3zi83b/GjbPHECWcAAtigZ.jpg)
அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கைதட்டி சிரித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ``நான் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை என்றாலும். அவர் பேசியதை விசாரித்து அறிந்துகொண்டேன். அவர் பேச்சு மிகவும் மோசமானது. கண்ணியத்தின் வரம்புகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, ரன்வீர் அல்லாபாடியா சமூக வலைதளத்தில், மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில்,`` நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. எனது கருத்து பொருத்தமற்றதுமல்ல, வேடிக்கையானதுமல்ல. நகைச்சுவை என நினைத்து எதையோ பேசிவிட்டேன். மன்னிக்கவும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/4enbq7ig/GjWFantbAAAXzyD.jpg)
ரன்வீர் அல்லாபாடியா உள்ளிட்ட அங்கிருந்த பிற நகைச்சுவை நடிகர்கள் மீது மும்பையில் இரண்டு வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிட்டதக்கது. பத்திரிகையாளரும் பாடலாசிரியருமான நீலேஷ் மிஸ்ரா, ``நமது நாட்டின் படைப்பு பொருளாதாரத்தை வடிவமைக்கும் வக்கிரமான படைப்பாளர்கள் இவர்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.