செய்திகள் :

Rewind 2024: உடைந்த கூட்டணி; இணைந்த ஜோடிகள்; மலர்ந்த காதல்... பிரிந்த உறவு... சின்னத்திரை சம்பவங்கள்

post image
இன்றுடன் நிறைவடைகிறது 2024. சின்னத்திரையில் இந்த ஆண்டு சம்பவங்கள் சிலவற்றைத் திரும்பிப் பார்க்கலாமா?

விடை பெற்ற ரவூஃபா... உடைந்த கூட்டணி!

விஜய் டிவியின் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக்கு வித் கோமாளி. ஜாலி பிளஸ் கேலி கலந்து வந்த இந்தச் சமையல் ரியாலிட்டி ஷோவை இயக்கியவர் ரவூஃபா. சிறுவர் முதல் பெரியவர் வரை இந்த நிகழ்ச்சிக்கு எனத் தனி ரசிகர் கூட்டமே உண்டு. விஜய் டிவியில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக  நிகழ்ச்சிகளைத் தயாரித்து வந்த ரவூஃபாவுக்குச் சேனலுடன் என்ன பிரச்னையோ தெரியவில்லை, இந்தாண்டு விஜய் டிவியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். கு.வி.கோ மட்டுமல்ல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியுமே இவர் தயாரித்ததுதான்.

தயாரிப்பு நிறுவனம் மாறுகிறது என்றதுமே 'அப்போ தாமு -பட் கூட்டணி?' என்ற சந்தேகம் கு.வி.கோ ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அந்த சந்தேகத்துக்கும் சில தினங்களிலேயே விடை கிடைத்தது. வெங்கடேஷ் பட் ரவூஃபாவுடன் கிளம்பி விட்டார். தாமு விஜய் டிவியை விட்டு செல்ல மாட்டேன் எனச் சொல்லி விட்டார். தாமுவுடன் கை கோத்தார் மாதம்பட்டி ரங்கராஜ்.

குக்கு வித் கோமாளி

அடுத்த சில தினங்களிலேயே ரவூஃபா பட் கூட்டணி சன் டிவி க்குச் செல்ல 'டாப் குக்கு டூப்பு குக்கு' என்னும் புதிய ஷோ அங்கு உதயமானது. 'சபாஷ் சரியான போட்டி' என ரசிகர்கள் இரண்டு ஷோக்களுக்குமே ஆதரவு தரத் தொடங்கி விட்டார்கள் என்றுதான் சொல்லப்பட்டது. `டாப் குக்கு டூப்பு குக்கு'வின் இரண்டாவது சீசன் ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்கிறார் ரவூஃபா.  குக்கு வித் கோமாளியின் அடுத்த சீசன் பிக்பாஸ் முடிவடைந்த பிறகு தொடங்கப்படலாம் என்கிறார்கள்.

இதற்கிடையே கு.வி.கோ. வின் பெயர் வரும் சீசனில் இருந்து மாறலாம் என்ற ஒரு தகவலும் சமீப சில  தினங்களாக டிவி ஏரியாவில் உலா வரத் தொடங்கியிருக்கிறது.

வைரலான திருமணம்.. டயர்டு ஆன நடிகை!

டிவியில் இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பட்டியல் கொஞ்சம் பெரியது. யூடியூப் மூலம் பரவலாக அறிமுகம் கிடைக்கப்  பெற்றவர் வெற்றி வசந்த். ஹிட் சீரியல் `சிறகடிக்க ஆசை’ தொடரின் கதாநாயகன். முதல் தொடரிலேயே ரசிகர்கள் மனதில் தனி இடத்தைப் பிடித்தார். அதேபோல் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் வைஷ்ணவி. ‘பொன்னி’ சீரியல் மூலம் ஹீரோயின் ஆனார். இவர்கள் இருவரையும் காதலர்களாக்கி தம்பதியாகவும் ஆக்கியது 2024.. இரு வீட்டுப் பெரியவர்கள் சம்மதத்துடன் சிறப்பாக நடந்தேறியது இந்த ஜோடியின் திருமணம்.

வெற்றி வசந்த் - வைஷ்ணவி திருமண க்ளிக்ஸ்!

மேலும் அக்‌ஷிதா - ப்ரீத்தம் சுரேஷ், சுபிக்ஷா -அவினாஷ், அரவிஷ்-ஹாரிகா, அவினாஷ்-மரியா ஜோசப் என நீள்கிறது பட்டியல்.
இவர்களைத் தாண்டி அண்டை மாநிலத்தில் நடந்த ஒரு சீரியல் நடிகையின் கல்யாணம் அங்கு வைரலானதுடன் தமிழ் தொலைக்காட்சியிலும் பரபரப்பை உண்டு பண்ணியது. அது மலையாள சீரியல் நடிகை திவ்யா ஶ்ரீதரரின் திருமணம்.
முதல் திருமண பந்தத்தில் இருந்து விவாகரத்து பெற்று இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த அவருக்கு வயது வித்தியாசம் அதிகமுடைய இயக்குனர் கிரிஷ் வேணுகோபாலுடன் காதல் மலர இருவரும் பிள்ளைகள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த் திருமணம் கேரளா  தாண்டி இங்கு வைரலானதற்குக் காரணம்  இங்கும் அதே பெயரில் இருந்த ஒரு நடிகைதான்.
நடிகர் அர்னவின் மனைவி பெயரும் திவ்யா ஶ்ரீதர்.

ஏற்nfனவே அர்னவுடன் பிரச்னையாகி இவர் தனியே வசித்து வரும் சூழலில் இப்படி ஒரு செய்தி வெளியாக பலரும்  இவருக்கு போன் போட்டு விசாரிக்கத் தொடங்கி விட்டார்களாம். 'நான் அவங்க இல்லீங்க'  என ஒவ்வொருவருக்கும் பதிலளித்த டயர்டு ஆகி விட்டாராம் இவர். இவர்கள் தவிர இந்த ஆண்டு கடைசியில் தங்களது காதலை உலகத்துக்குச் சொல்லியிருக்கிறார்கள் பிக்பாஸ் 7வது சீசன் போட்டியாளர் விஷ்ணுவும் 8வது சீசன் போட்டியாளர் சௌந்தர்யாவும்.

ஜெயஶ்ரீ ஈஸ்வர்

பிரிந்த உறவு... விலகிய மனங்கள்!

சில சின்னத்திரை ஜோடிகள் தங்களது திருமண வாழ்விலிருந்து முறைப்படி வெளியேறியதும் 2024ம் ஆண்டு சின்னத்திரையில் நடந்தது. காதலித்துத் திருமணம் செய்த தினேஷ்-ரச்சிதா ஜோடி இந்தாண்டு முதல் சட்டபூர்வமாகப் பிரிந்துவிட்டனர்.
தவிர கடந்த சில ஆண்டுகளாகவே விவாகரத்து வழக்கு நிலுவையிலிருந்த ஈஸ்வர்-ஜெயஶ்ரீ ஜோடிக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம்

ரச்சிதா

மேலும் 'வாணி ராணி' உள்ளிட்ட தொடர்களில் நடித்த நடிகை ஜெனிப்ரியாவுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த பைலட் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணத்திற்குச் சில நாட்கள் இருந்த சூழலில் அந்தப் பைலட் தன்னை ஏமாற்றி தன் நகைகளையும் பறித்துக் கொண்டதாகச் சொல்லி ஜெனிப்ரியா புகார் தர, திருமணம் நின்று போனது. ஜெனிப்ரியாவின்புகார் தற்போது விசாரணையிலிருப்பதாகச் சொல்லப் படுகிறது.

ஒரே மேடையில் போட்டிச் சேனல்கள்... விகடன் போட்ட புது ரூட்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு சன் குடும்ப விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஜீ தமிழ் சேனலின் சீரியல்களுக்கு ஜீ தமிழ் குடும்ப விருதுகள் வழங்கப்படுகின்றன. விஜய் டிவி சீரியல்களுக்கு விஜய் டெலி அவார்ட்ஸ் இருக்கிறது. இந்த எல்லா சேனல்களிலும் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும் சேர்த்து ஒரு விருது இருந்தால்? 'அதெப்படிப்பா எல்லா சீரியல்களுக்கும் சேர்த்து விருது தருவாங்க? யார் தருவாங்க? அப்படியொரு விருது விழா நடந்தா அது எந்த டிவியில் வரும்? சன் டிவி சீரியல் ஆர்ட்டிஸ்ட் விருது வாங்கினா அதை விஜய் டிவியில காட்டுவாங்களா? முதல்ல ஆர்ட்டிஸ்டுகள் இப்படி நடக்கிற விழாவுக்கு வருவாங்களா? இப்படி எண்ணற்ற கேள்விகள் முன்னால் வந்து நின்றன்.

ஆனந்த விகடன் சின்னத்திரை விருது விழா

ஆனால் முயற்சிக்குப் புள்ளி வைத்த விகடன் பின்வாங்கவில்லை.
கடந்த ஜுலையில் பிரமாண்டமாக அரங்கேறியது அந்த விழா. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட தமிழின் முன்னணி சேனல்கள் அத்தனையிலிருந்தும் ஆர்ட்டிஸ்டுகள்  ஆர்வமுடன் வந்து கலந்து கொள்ள சிறப்பாக நடந்து முடிந்தது விகடன் சின்னத்திரை விருதுகளின் முதல் சீசன்.

2024 -ல் உங்கள் மனம்கவர்ந்த சீரியல் எது என கமென்ட்டில் தெரிவிக்கவும்

Bigg Boss Tamil 8: வெளியேறிய வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள்! - மீண்டும் டபுள் எவிக்‌ஷன்?

பிக்பாஸ் தமிழ் 8 கிளைமேக்ஸை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. பதினெட்டு போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் ஆறு பேர் சேர்ந்தனர்.அடுத்தடுத்த எவிக்‌ஷன் மூலம் ரஞ்சித... மேலும் பார்க்க

BB Tamil 8: 'ரயானுக்கு டிக்கெட் கிடைச்சிருக்கக்கூடாது' - விஜய் சேதுபதியிடம் சொன்ன முத்துக்குமரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 90-வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருகிறது.பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள் நடந்தது. இதனால் கடுமையான போட்டிகளும், வாக்குவாதங்களும் போட்டியாளர... மேலும் பார்க்க

BB Tamil 8: மீண்டும் டபுள் எவிக்‌ஷன்; வெளியேறப்போகும் இருவர்!

கடைசிக்கட்ட பரபரப்புடன் போய்க் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 8. பதினெட்டு போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் சில வாரங்களுக்குப் பின் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் மேலும் ஆறு பேர் சேர மொத்தப் போட்... மேலும் பார்க்க

BB Tamil 8: `இனி எப்படி விளையாடணும்னு சொல்ல போறது இல்ல,ஆனா...'- சாட்டை சுழற்றும் விஜய் சேதுபதி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 90-வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருகிறது.பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள் நடந்தது. இதனால் கடுமையான போட்டிகளும், வாக்குவாதங்களும் போட்டியாளர... மேலும் பார்க்க

Siragadikka Aasai : ஷோரூமை இழந்த மனோஜ்; ரோகிணி ரூ.27 லட்சத்தை எப்படி புரட்டுவார்?

சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில் ரோகிணி மற்றும் மனோஜை விஜயா மன்னித்துவிடுகிறார். ஆனால் ரோகிணிக்கு மற்றொரு நெருக்கடியை விஜயா கொடுத்துவிட்டார்.சீரியலில் சமீபத்திய எபிசோடுகளில், ரோகிணி கதை ஒரு ப... மேலும் பார்க்க