9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
Rohit: ``15- 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுவது பெரிய விஷயம்'' - ரோஹித்தை பாராட்டிய சூர்யகுமார்
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக் கடத்தை நெருங்கி இருக்கிறது.
இந்தத் தொடருக்கான இறுதிப்போட்டி வரும் மார்ச் 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் என டாப் 8 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் தற்போது இந்தியாவும்- நியூசிலாந்தும்தான் இறுதிப்போட்டியில் மோத இருக்கின்றன. எப்படியாவது இந்தத்தொடரில் வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் ரோஹித் தலைமைலானயிலான இந்திய அணி பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கேப்டன் ரோஹித் சர்மாவை சூர்ய குமார் யாதவ் பாராட்டி பேசியிருக்கிறார். "ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா கடந்த 4 வருடங்களில் 4 ஐசிசி தொடர்களில் இந்திய அணியை வழிநடத்தி சென்றிருக்கிறார். இது ஒரு மிகப்பெரிய விஷயம். அதேபோல 15- 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுவதும் பெரிய விஷயம்தான். அவர் கடினமாக உழைக்கிறார். சாம்பியன் டிராபியின் இறுதிப்போட்டியில் விளையாடும் அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்" என்று பாராட்டி இருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
