Coolie: "முதலில் நான் ஓகே சொல்லவில்லை; லோகேஷ் கனகராஜ்தான்.." - கூலி குறித்து நாக...
Roundup: தீவிரமடையும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் டு கர்நாடக அமைச்சரின் ராஜினாமா வரை|11.8.2025
ஆகஸ்ட் 11 முக்கியச் செய்திகள்!
எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 11 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் போராட்டக்காரர்களை இன்று மாலை பனையூர் அலுவலகத்தில் சந்தித்துத் தனது முழு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். தீர்வு கிடைக்கும் வரை சமரசமின்றி போராட்டம் தொடரும் என உறுதியுடன் இருக்கின்றனர் தூய்மை பணியாளர்கள் (முழுவிவரம்)
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு, ``தோளோடு தோள் நிற்கிறோம்" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்திருக்கிறார். (முழுவிவரம்)
இந்திய தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி வைத்தக் குற்றச்சாட்டை, 'வாக்காளர் முறைகேடு நடந்தபோது காங்கிரஸ் ஏன் தடுக்கவில்லை' என விமர்சித்த கர்நாடகா காங்கிரஸின் அமைச்சர் ராஜண்ணா இன்று தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
தெருநாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோய் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம், "தெருநாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு ரேபிஸ் நோயினால் உயிரிழப்பவர்களை, பொறுப்பில்லாத விலங்குகள் நல ஆர்வலர்களால் திருப்பிக் கொண்டுவர முடியுமா" என காட்டமாகக் கேள்வியெழுப்பியிருக்கிறது. (முழுவிவரம்)

இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் பேச்சுக்கு, "‘பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் இந்தியா அஞ்சாது" இந்திய வெளியுறவு அமைச்சகம் என பதில் தெரிவித்திருக்கிறது.
காசாவில் அல் ஜசீரா செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த 5 பத்திரிகையாளர்களைக் குறி வைத்துக் கொன்ற இஸ்ரேல் ராணுவத்தின் கொலைச் செயல், பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகப் பல்வேறு நாடுகளிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்திருகின்றன. (முழுவிவரம்)

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் வார இறுதி விடுமுறையை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்காகக் கூடுதலாக 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்திருக்கிறது.
'மாரீசன்' படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர், வடிவேலு, பகத் பாசில் நடிப்பை வியந்து பாராட்டியிருக்கிறார். (முழுவிவரம்)
நேற்று சென்னையில் நடந்த சுமார் 2000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் பரத் 491 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று தலைவராகியிருக்கிறார். (முழுவிவரம்)
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs