செய்திகள் :

Rs 1 Crore Cockfight: ரூ.1 கோடி தொகை; சொல்லியடித்த சேவல்... மகிழ்ச்சியில் திளைக்கும் உரிமையாளர்!

post image

ஆந்திரப் பிரதேசத்தில் சங்கராந்திப் பண்டிகைக் கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு, தாடேபள்ளிகுடம் பகுதியில் சேவல் சண்டைப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இரண்டு ஜாம்பவான்களின் சேவல்கள் களத்தில் இறங்கின. ஒன்று பிரபாகரன் என்பவரின் இந்தியச் சண்டை சேவல் வகையைச் சேர்ந்த அசீல். மற்றொரு சேவல் பெரு நாட்டின் சண்டைச் சேவல் பெருவியன். இது ரத்தையா என்பவருக்கு சொந்தமானது. இந்த இரண்டுச் சேவல் உரிமையாளர்களுக்கு மத்தியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் போட்டி நிலவி வருகிறது.

2022-ம் ஆண்டில் நடந்த சேவல் சண்டைப் போட்டியில் ரூ.25 லட்சம் ரத்தையாவின் பெரு சேவல் வென்றது. அதற்கு அடுத்த வருடம் ரூ.50 லட்சம் வெற்றித் தொகையாக அறிவிக்கப்பட்டு போட்டி நடந்தது. அதிலும், ரத்தையா சேவலே வென்றது. கடந்த ஆண்டு ரூ.75 லட்சம் போட்டித் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது. அதிலும் ரத்தையாவே வென்றார். இந்த நிலையிதான், இந்த ஆண்டு ரூ.1 கோடி பரிசுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது. தாடேபள்ளிகுடம் பகுதியில், 500 பார்வையாளர்கள் சூழ, ஒவ்வொரு சேவலாக களம் இறக்கப்பட்டது.

இரண்டு சேவல்களும் கொண்டையை சிலுப்பி, கூரிய கால்களை தரையில் பிரண்டி நின்றக் காட்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், மெய்சிலிர்ப்பையும் ஏற்படுத்தியது. இந்த ஆண்டு யார் வெற்றிப்பெறப்போகிறார்கள் என்ற பதற்றம் எல்லோர் மனதிலும் இருந்தது. சேவல்கள் தங்கள் சண்டையைத் தொடங்கின. சுமார் 5.35 நிமிடங்கள் நடந்த சண்டையில், பிரபாகரன் என்பவரின் அசீல் சேவல் வென்று பரிசைத் தட்டிச் சென்றது.

அதைத் தொடர்ந்து பிரபாகரனின் ஆதரவாளரக்ள் சேவலை தோளில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடினார்கள். இது தொடர்பாக பேசிய பிரபாகரன், ``25 ஆண்டுகளாக வெற்றித் தோல்விகளைக் கடந்து சேவல்களை இனப்பெருக்கம் செய்து வருகிறேன். இது என் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

IIT Baba: ``நான் துறவறம் மேற்கொள்ளக் காரணமே இதுதான்.." - IIT பாபா ஓபன் டாக்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தவிழாவில் பல்வேறு தோற்றங்களில் சாதுக்கள் வலம் வருகின்றனர். அவர்களின் தோற்றம் மூலம் மக்களின் கவனம் ஈர்த்த சாதுக்களில் ஒருவர... மேலும் பார்க்க

விவாதமான கோபன் சுவாமியின் சமாதி விவகாரம்: கல்லறையை திறந்து, உடலை எடுத்து பிரேத பரிசோதனை..!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை ஆறான்மூடு பகுதியைச் சேர்ந்தவர் கோபன் சுவாமி. இவரை சில நாள்களாக காணவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நெய்யாற்றின்கரை காவல் நிலையத்தில் புகார் அளி... மேலும் பார்க்க

ரயில் பயணத்தில் மது அருந்தி தகராறு செய்த பயணி; கொடூரமாக தாக்கிய டிடிஆர் சஸ்பெண்ட்!

அமிர்தசரஸ் - கட்டியார் எக்ஸ்பிரஸ் (15708) ரயில் கடந்த புதன் கிழமை இரவு, டெல்லியில் இருந்து பீகாரில் உள்ள சிவானுக்கு சென்று கொண்டிருந்தது. இதில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஷேக் மஜிபுலுதீன் (38) என்ப... மேலும் பார்க்க

கோவை: `பீப் போடக்கூடாது' - தள்ளுவண்டி கடை தம்பதியை மிரட்டிய பாஜக பிரமுகர்

கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரின் மனைவி ஆபிதா. இந்த தம்பதி கடந்த சில நாள்களாக சாலையோரம் தள்ளுவண்டி கடையில் பீப் பிரியாணி மற்றும் பீப் சில்லி விற்பனை செய்து வருகிறார... மேலும் பார்க்க

Salman Khan: சல்மான் கான் வீட்டு பால்கனிக்கு குண்டு துளைக்காத கண்ணாடி.. அதிகரிக்கும் பாதுகாப்பு

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ராஜஸ்தானில் அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதற்காக அவருக்கு டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. அவனது ஆள்கள் சல்மான் கானை ... மேலும் பார்க்க

Zimbabwe: சிங்கங்கள், யானைகள் வாழும் காட்டில் 5 நாள்கள் உயிர்பிழைத்திருந்த 8 வயது சிறுவன்!

வடக்கு ஜிம்பாப்வேயில் உள்ள மட்டுசடோனா தேசிய பூங்காவின் ஆபத்தான காட்டுக்குள் சிக்கிக்கொண்ட சிறுவன் 5 நாள்கள் வரை அங்கே உயிர் பிழைத்திருந்துள்ளார். மட்டுசடோனா தேசிய பூங்கா சிங்கங்கள், யானைகள் உள்ளிட்ட ஆ... மேலும் பார்க்க